Corpus pasurams 1898–1907

This page preserves the source-defined decade 10, chapter 6 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 951 · corpus 1898

Pasuram 951

Study resources at Uveda
எங்கானும் ஈது ஒப்பது ஓர் மாயம் உண்டே? *
 நர நாரணன் ஆய் உலகத்து அறநூல் *
சிங்காமை விரித்தவன் எம் பெருமான் *
அது அன்றியும் செஞ்சுடரும் நிலனும் **
பொங்கு ஆர் கடலும் பொருப்பும் நெருப்பும்
நெருக்கிப் புகப் * பொன் மிடறு அத்தனைபோது *
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் *
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே 1

Pasuram 952 · corpus 1899

Pasuram 952

Study resources at Uveda
குன்று ஒன்று மத்தா அரவம் அளவிக் *
குரை மா கடலைக் கடைந்திட்டு * ஒருகால்
நின்று உண்டை கொண்டு ஓட்டி வன் கூன் நிமிர *
நினைந்த பெருமான் அது அன்றியும் முன் **
நன்று உண்ட தொல் சீர் மகரக் கடல் ஏழ் மலை ஏழ் *
உலகு ஏழ் ஒழியாமை நம்பி *
அன்று உண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் *
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே 2

Pasuram 953 · corpus 1900

Pasuram 953

Study resources at Uveda
உளைந்திட்டு எழுந்த மது கைடவர்கள் *
உலப்பு இல் வலியார் அவர்பால் * வயிரம்
விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ *
அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள் **
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று *
மலை போல் அவுணன் உடல் வள் உகிரால் *
அளைந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் *
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே 3

Pasuram 954 · corpus 1901

Pasuram 954

Study resources at Uveda
தளர்ந்திட்டு இமையோர் சரண் தா எனத் *
தான் சரண் ஆய் முரண் ஆயவனை * உகிரால்
பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த *
பெருமான் திருமால் விரி நீர் உலகை **
வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மாவலியை *
மண் கொள்ள வஞ்சித்து ஒரு மாண் குறள் ஆய் *
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் *
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே 4

Pasuram 955 · corpus 1902

Pasuram 955

Study resources at Uveda
நீண்டான் குறள் ஆய் நெடு வான் அளவும் *
அடியார் படும் ஆழ் துயர் ஆய எல்லாம் *
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் *
செல வைத்த பிரான் அது அன்றியும் முன் **
வேண்டாமை நமன் தமர் என் தமரை *
வினவப் பெறுவார் அலர் என்று * உலகு ஏழ்
ஆண்டான் அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் *
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே 5

Pasuram 956 · corpus 1903

Pasuram 956

Study resources at Uveda
பழித்திட்ட இன்பப் பயன் பற்று அறுத்துப் *
பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் *
ஒழித்திட்டு அவரைத் தனக்கு ஆக்கவல்ல *
பெருமான் திருமால் அது அன்றியும் முன் **
தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் *
சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால் *
அழித்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் *
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே 6

Pasuram 957 · corpus 1904

Pasuram 957

Study resources at Uveda
படைத்திட்டு அது இவ் வையம் உய்ய முன நாள் *
பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் *
துடைத்திட்டு அவரைத் தனக்கு ஆக்க என்னத் *
தெளியா அரக்கர் திறல் போய் அவிய **
மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா *
விலங்கல் புகப் பாய்ச்சி விம்ம * கடலை
அடைத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் *
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே 7

Pasuram 958 · corpus 1905

Pasuram 958

Study resources at Uveda
நெறித்திட்ட மென் கூழை நல் நேர் இழையோடு *
உடன் ஆய வில் என்ன வல் ஏய் அதனை *
இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு *
இளங் கொற்றவன் ஆய் துளங்காத முந்நீர் **
செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன் *
செழு நீள் முடி தோளொடு தாள் துணிய *
அறுத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் *
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே 8

Pasuram 959 · corpus 1906

Pasuram 959

Study resources at Uveda
சுரிந்திட்ட செங் கேழ் உளைப் பொங்கு அரிமாத் *
தொலையப் பிரியாது சென்று எய்தி எய்தாது *
இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காததன் வாய் *
இரு கூறு செய்த பெருமான் முன நாள் **
வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து *
மலைபோல் உருவத்து ஓர் இராக்கதி மூக்கு *
அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் *
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே 9

Pasuram 960 · corpus 1907

Pasuram 960

Study resources at Uveda
நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் *
வயிற்றை நிறைப்பான் உறிப் பால் தயிர் நெய் *
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி * உரலோடு
ஆப்புண்டிருந்த பெருமான் அடிமேல் **
நன்று ஆய தொல் சீர் வயல் மங்கையர் கோன் *
கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார் *
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி *
இமையோர்க்கும் அப்பால் செல எய்துவாரே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.