Corpus pasurams 1908–1921

This page preserves the source-defined decade 10, chapter 7 grouping and brings its 14 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 961 · corpus 1908

Pasuram 961

Study resources at Uveda
மானம் உடைத்து உங்கள் ஆயர் குலம்
அதனால் * பிறர் மக்கள் தம்மை *
ஊனம் உடையன செய்யப் பெறாய் என்று *
இரப்பன் உரப்பகில்லேன் **
நானும் உரைத்திலேன் நந்தன் பணித்திலன் *
நங்கைகாள் நான் என் செய்கேன்? *
தானும் ஓர் கன்னியும் கீழை அகத்துத் *
தயிர் கடைகின்றான் போலும் 1

Pasuram 962 · corpus 1909

Pasuram 962

Study resources at Uveda
காலை எழுந்து கடைந்த இம் மோர் விற்கப்
போகின்றேன் * கண்டே போனேன் *
மாலை நறுங் குஞ்சி நந்தன் மகன் அல்லால் *
மற்று வந்தாரும் இல்லை **
மேலை அகத்து நங்காய் வந்து காண்மின்கள் *
வெண்ணெயே அன்று இருந்த *
பாலும் பதின் குடம் கண்டிலேன் * பாவியேன்
என் செய்கேன்? என் செய்கேனோ? 2

Pasuram 963 · corpus 1910

Pasuram 963

Study resources at Uveda
தெள்ளிய வாய்ச் சிறியான் நங்கைகாள் *
உறிமேலைத் தடா நிறைந்த *
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை *
வாரி விழுங்கியிட்டு **
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள் *
கை எல்லாம் நெய் * வயிறு
பிள்ளை பரம் அன்று இவ் ஏழ் உலகும் கொள்ளும் *
பேதையேன் என் செய்கேனோ? 3

Pasuram 964 · corpus 1911

Pasuram 964

Study resources at Uveda
மைந்நம்பு வேல் கண் நல்லாள் * முன்னம் பெற்ற
வளை வண்ண நல் மா மேனி *
தன் நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது *
அவன் இவை செய்தறியான் **
பொய்ந் நம்பி புள்ளுவன் கள்வம் * பொதி அறை
போகின்றவா தவழ்ந்திட்டு *
இந் நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வு இல்லை *
என் செய்கேன்? என் செய்கேனோ? 4

Pasuram 965 · corpus 1912

Pasuram 965

Study resources at Uveda
தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் *
தோழிமார் ஆரும் இல்லை *
சந்த மலர்க் குழலாள் * தனியே
விளையாடும் இடம் குறுகி **
பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப் *
படிறன் படிறுசெய்யும் *
நந்தன் மதலைக்கு இங்கு என் கடவோம்? நங்காய் *
என் செய்கேன்? என் செய்கேனோ? 5

Pasuram 966 · corpus 1913

Pasuram 966

Study resources at Uveda
மண்மகள் கேள்வன் மலர் மங்கை நாயகன் *
நந்தன் பெற்ற மதலை *
அண்ணல் இலைக் குழல் ஊதி நம் சேரிக்கே *
அல்லில் தான் வந்த பின்னை **
கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மிக் *
கமலச் செவ்வாய் வெளுப்ப *
என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் *
என் செய்கேன்? என் செய்கேனோ? 6

Pasuram 967 · corpus 1914

Pasuram 967

Study resources at Uveda
ஆயிரம் கண் உடை இந்திரனாருக்கு
அன்று * ஆயர் விழவு எடுப்ப *
பாசன நல்லன பண்டிகளால் * புகப்
பெய்த அதனை எல்லாம் **
போயிருந்து அங்கு ஒரு பூத வடிவுகொண்டு *
உன் மகன் இன்று நங்காய் *
மாயன் அதனை எல்லாம் முற்ற * வாரி
வளைத்து உண்டு இருந்தான் போலும் 7

Pasuram 968 · corpus 1915

Pasuram 968

Study resources at Uveda
தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் *
ஓர் ஓர் குடம் துற்றிடும் என்று *
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் * நான் இதற்கு
எள்கி இவனை நங்காய் **
சோத்தம் பிரான் இவை செய்யப் பெறாய் என்று *
இரப்பன் உரப்பகில்லேன் *
பேய்ச்சி முலை உண்ட பின்னை * இப்
பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே 8

Pasuram 969 · corpus 1916

Pasuram 969

Study resources at Uveda
ஈடும் வலியும் உடைய * இந் நம்பி
பிறந்த எழு திங்களில் *
ஏடு அலர் கண்ணியினானை வளர்த்தி *
யமுனை நீராடப் போனேன் **
சேடன் திரு மறு மார்வன் * கிடந்து
திருவடியால் * மலைபோல்
ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை *
உரப்புவது அஞ்சுவனே 9

Pasuram 970 · corpus 1917

Pasuram 970

Study resources at Uveda
அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள் *
ஆயிரம் நாழி நெய்யை *
பஞ்சிய மெல் அடிப் பிள்ளைகள் உண்கின்ற *
பாகம் தான் வையார்களே **
கஞ்சன் கடியன் கறவு எட்டு நாளில் * என்
கைவலத்து ஆதும் இல்லை *
நெஞ்சத்து இருப்பன செய்துவைத்தாய் நம்பீ *
என் செய்கேன்? என் செய்கேனோ? 10

Pasuram 971 · corpus 1918

Pasuram 971

Study resources at Uveda
அங்ஙனம் தீமைகள் செய்வர்களோ
நம்பீ * ஆயர் மட மக்களை? *
பங்கய நீர் குடைந்து ஆடுகின்றார்கள் *
பின்னே சென்று ஒளித்திருந்து **
அங்கு அவர் பூந் துகில் வாரிக்கொண்டிட்டு *
அரவு ஏர் இடையார் இரப்ப *
மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று *
மரம் ஏறி இருந்தாய் போலும் 11

Pasuram 972 · corpus 1919

Pasuram 972

Study resources at Uveda
அச்சம் தினைத்தனை இல்லை இப் பிள்ளைக்கு *
ஆண்மையும் சேவகமும் *
உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு *
உரைத்திலன் தான் இன்று போய் **
பச்சிலைப் பூங் கடம்பு ஏறி * விசைகொண்டு
பாய்ந்து புக்கு * ஆயிர வாய்
நச்சு அழல் பொய்கையில் நாகத்தினோடு *
பிணங்கி நீ வந்தாய் போலும் 12

Pasuram 973 · corpus 1920

Pasuram 973

Study resources at Uveda
தம்பரம் அல்லன ஆண்மைகளைத் *
தனியே நின்று தாம் செய்வரோ? *
எம் பெருமான் உன்னைப் பெற்ற வயிறு உடையேன் *
இனி யான் என் செய்கேன்? **
அம்பரம் ஏழும் அதிரும் இடி குரல் *
அங்கு அனல் செங் கண் உடை *
வம்பு அவிழ் கானத்து மால் விடையோடு *
பிணங்கி நீ வந்தாய் போலும் 13

Pasuram 974 · corpus 1921

Pasuram 974

Study resources at Uveda
அன்ன நடை மட ஆய்ச்சி வயிறு அடித்து
அஞ்ச * அரு வரைபோல் *
மன்னு கருங் களிற்று ஆர் உயிர் வவ்விய *
மைந்தனை மா கடல் சூழ் **
கன்னி நல் மா மதிள் மங்கையர் காவலன் *
காமரு சீர்க் கலிகன்றி *
இன் இசை மாலைகள் ஈர் ஏழும் வல்லவர்க்கு *
ஏதும் இடர் இல்லையே 14

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.