Pasuram 975 · corpus 1922
Pasuram 975
காதில் கடிப்பு இட்டுக் * கலிங்கம் உடுத்து *
தாது நல்ல * தண் அம் துழாய்கொடு அணிந்து **
போது மறுத்துப் * புறமே வந்து நின்றீர் *
ஏதுக்கு? இது என்? * இது என்? இது என்னோ? 1
Thirumangai Azhwar · Pasurams 975–984
Corpus pasurams 1922–1931
This page preserves the source-defined decade 10, chapter 8 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 975 · corpus 1922
காதில் கடிப்பு இட்டுக் * கலிங்கம் உடுத்து *
தாது நல்ல * தண் அம் துழாய்கொடு அணிந்து **
போது மறுத்துப் * புறமே வந்து நின்றீர் *
ஏதுக்கு? இது என்? * இது என்? இது என்னோ? 1
Pasuram 976 · corpus 1923
துவர் ஆடை உடுத்து * ஒரு செண்டு சிலுப்பி *
கவர் ஆக முடித்துக் * கலிக் கச்சுக் கட்டி **
சுவர் ஆர் கதவின் புறமே * வந்து நின்றீர் *
இவர் ஆர்? இது என்? * இது என்? இது என்னோ? 2
Pasuram 977 · corpus 1924
கருளக் கொடி ஒன்று உடையீர் * தனிப் பாகீர் *
உருளச் சகடம் அது * உறுக்கில் நிமிர்த்தீர் **
மருளைக்கொடு பாடி வந்து * இல்லம் புகுந்தீர் *
இருளத்து இது என்? * இது என்? இது என்னோ? 3
Pasuram 978 · corpus 1925
நாமம் பலவும் உடை * நாரண நம்பீ *
தாமத் துளவம் * மிக நாறிடுகின்றீர் **
காமன் எனப் பாடி வந்து * இல்லம் புகுந்தீர் *
ஏமத்து இது என்? * இது என்? இது என்னோ? 4
Pasuram 979 · corpus 1926
சுற்றும் குழல் தாழச் * சுரிகை அணைத்து *
மற்று பல * மா மணி பொன் கொடு அணிந்து **
முற்றம் புகுந்து * முறுவல் செய்து நின்றீர் *
எற்றுக்கு? இது என்? * இது என்? இது என்னோ? 5
Pasuram 980 · corpus 1927
ஆன் ஆயரும் * ஆ நிரையும் அங்கு ஒழிய *
கூன் ஆயது ஓர் * கொற்ற வில் ஒன்று கை ஏந்தி **
போனார் இருந்தாரையும் * பார்த்துப் புகுதீர் *
ஏனோர்கள் முன் என்? * இது என்? இது என்னோ? 6
Pasuram 981 · corpus 1928
மல்லே பொருத திரள் * தோள் மணவாளீர் *
அல்லே அறிந்தோம் * நும் மனத்தின் கருத்தை **
சொல்லாது ஒழியீர் * சொன்னபோதினால் வாரீர் *
எல்லே இது என்? * இது என்? இது என்னோ? 7
Pasuram 982 · corpus 1929
புக்கு ஆடு அரவம் * பிடித்து ஆட்டும் புனிதீர் *
இக் காலங்கள் * யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம் **
தக்கார் பலர் * தேவிமார் சால உடையீர் *
எக்கே இது என்? * இது என்? இது என்னோ? 8
Pasuram 983 · corpus 1930
ஆடி அசைந்து * ஆய் மடவாரொடு நீ போய் *
கூடிக் குரவை பிணை * கோமளப் பிள்ளாய் **
தேடித் திரு மா மகள் * மண்மகள் நிற்ப *
ஏடி இது என்? * இது என்? இது என்னோ? 9
Pasuram 984 · corpus 1931
அல்லிக் கமலக் கண்ணனை * அங்கு ஓர் ஆய்ச்சி *
எல்லிப் பொழுது ஊடிய * ஊடல் திறத்தை **
கல்லின் மலி தோள் * கலியன் சொன்ன மாலை *
சொல்லித் துதிப்பார் அவர் * துக்கம் இலரே 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.