Pasuram 1015 · corpus 1962
Pasuram 1015
குன்றம் எடுத்து மழை தடுத்து * இளையாரொடும் *
மன்றில் குரவை பிணைந்த மால் * என்னை மால்செய்தான் **
முன்றில் தனி நின்ற பெண்ணைமேல் * கிடந்து ஈர்கின்ற *
அன்றிலின் கூட்டைப் * பிரிக்ககிற்பவர் ஆர்கொலோ?
Thirumangai Azhwar · Pasurams 1015–1024
Corpus pasurams 1962–1971
This page preserves the source-defined decade 11, chapter 2 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 1015 · corpus 1962
குன்றம் எடுத்து மழை தடுத்து * இளையாரொடும் *
மன்றில் குரவை பிணைந்த மால் * என்னை மால்செய்தான் **
முன்றில் தனி நின்ற பெண்ணைமேல் * கிடந்து ஈர்கின்ற *
அன்றிலின் கூட்டைப் * பிரிக்ககிற்பவர் ஆர்கொலோ?
Pasuram 1016 · corpus 1963
பூங் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து * அரி மாச் செகுத்து *
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு ** வன் பேய் முலை
வாங்கி உண்ட * அவ் வாயன் நிற்க இவ் ஆயன் வாய் *
ஏங்கு வேய்ங்குழல் * என்னோடு ஆடும் இளமையே
Pasuram 1017 · corpus 1964
மல்லொடு கஞ்சனும் * துஞ்ச வென்ற மணிவண்ணன் *
அல்லி மலர்த் தண் துழாய் * நினைந்திருந்தேனையே **
எல்லியில் மாருதம் * வந்து அடும் அது அன்றியும் *
கொல்லை வல் ஏற்றின் மணியும் * கோயின்மை செய்யுமே
Pasuram 1018 · corpus 1965
பொருந்து மா மரம் * ஏழும் எய்த புனிதனார் *
திருந்து சேவடி * என் மனத்து நினைதொறும் **
கருந் தண் மா கடல் * கங்குல் ஆர்க்கும் அது அன்றியும் *
வருந்த வாடை வரும் * இதற்கு இனி என் செய்கேன்?
Pasuram 1019 · corpus 1966
அன்னை முனிவதும் * அன்றிலின் குரல் ஈர்வதும் *
மன்னு மறி கடல் ஆர்ப்பதும் * வளை சோர்வதும் **
பொன் அம் கலை அல்குல் * அன்ன மென் நடைப் பூங் குழல் *
பின்னை மணாளர் * திறத்தம் ஆயின பின்னையே
Pasuram 1020 · corpus 1967
ஆழியும் சங்கும் உடைய * நங்கள் அடிகள் தாம் *
பாழிமையான கனவில் * நம்மைப் பகர்வித்தார் **
தோழியும் நானும் ஒழிய * வையம் துயின்றது *
கோழியும் கூகின்றது இல்லைக் * கூர் இருள் ஆயிற்றே
Pasuram 1021 · corpus 1968
காமன் தனக்கு முறை அல்லேன் * கடல் வண்ணனார் *
மா மணவாளர் * எனக்குத் தானும் மகன் சொல்லில் **
யாமங்கள் தோறு எரி வீசும் * என் இளங் கொங்கைகள் *
மா மணி வண்ணர் * திறத்தவாய் வளர்கின்றவே
Pasuram 1022 · corpus 1969
மஞ்சு உறு மாலிருஞ்சோலை * நின்ற மணாளனார் *
நெஞ்சம் நிறைகொண்டு போயினார் * நினைகின்றிலர் **
வெம் சுடர் போய் விடியாமல் * எவ்விடம் புக்கதோ? *
நஞ்சு உடலம் துயின்றால் * நமக்கு இனி நல்லதே
Pasuram 1023 · corpus 1970
காமன் கணைக்கு ஓர் இலக்கம் ஆய் * நலத்தின் மிகு *
பூ மரு கோலம் * நம் பெண்மை சிந்தித்து இராது போய் **
தூ மலர் நீர் கொடு * தோழி நாம் தொழுது ஏத்தினால் *
கார் முகில் வண்ணரைக் * கண்களால் காணல் ஆம்கொலோ?
Pasuram 1024 · corpus 1971
வென்றி விடை உடன் * ஏழ் அடர்த்த அடிகளை *
மன்றில் மலி புகழ் * மங்கை மன் கலிகன்றி சொல் **
ஒன்று நின்ற ஒன்பதும் * உரைப்பவர் தங்கள்மேல் *
என்றும் நில்லா வினை * ஒன்றும் சொல்லில் உலகிலே
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.