Pasuram 1025 · corpus 1972
Pasuram 1025
மன் இலங்கு பாரதத்துத் * தேர் ஊர்ந்து * மாவலியைப்
பொன் இலங்கு திண் விலங்கில் வைத்து * பொரு கடல் சூழ் **
தென் இலங்கை ஈடு அழித்த * தேவர்க்கு இது காணீர் *
என் இலங்கு சங்கோடு * எழில் தோற்றிருந்தேனே
Thirumangai Azhwar · Pasurams 1025–1034
Corpus pasurams 1972–1981
This page preserves the source-defined decade 11, chapter 3 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 1025 · corpus 1972
மன் இலங்கு பாரதத்துத் * தேர் ஊர்ந்து * மாவலியைப்
பொன் இலங்கு திண் விலங்கில் வைத்து * பொரு கடல் சூழ் **
தென் இலங்கை ஈடு அழித்த * தேவர்க்கு இது காணீர் *
என் இலங்கு சங்கோடு * எழில் தோற்றிருந்தேனே
Pasuram 1026 · corpus 1973
இருந்தான் என் உள்ளத்து * இறைவன் கறை சேர் *
பருந் தாள் களிற்றுக்கு * அருள் செய்த செங் கண் **
பெருந் தோள் நெடுமாலைப் * பேர் பாடி ஆட *
வருந்தாது என் கொங்கை * ஒளி மன்னும் அன்னே
Pasuram 1027 · corpus 1974
அன்னே இவரை * அறிவன் மறை நான்கும் *
முன்னே உரைத்த * முனிவர் இவர் வந்து **
பொன் ஏய் வளை கவர்ந்து * போகார் மனம் புகுந்து *
என்னே இவர் எண்ணும் * எண்ணம்? அறியோமே
Pasuram 1028 · corpus 1975
அறியோமே என்று * உரைக்கல் ஆமே எமக்கு *
வெறி ஆர் பொழில் சூழ் * வியன் குடந்தை மேவி **
சிறியான் ஓர் பிள்ளை ஆய் * மெள்ள நடந்திட்டு *
உறி ஆர் நறு வெண்ணெய் * உண்டு உகந்தார் தம்மையே?
Pasuram 1029 · corpus 1976
தம்மையே நாளும் * வணங்கித் தொழுவார்க்கு *
தம்மையே ஒக்க * அருள் செய்வர் ஆதலால் **
தம்மையே நாளும் * வணங்கித் தொழுது இறைஞ்சி *
தம்மையே பற்றா * மனத்து என்றும் வைத்தோமே
Pasuram 1030 · corpus 1977
வைத்தார் அடியார் * மனத்தினில் வைத்து * இன்பம்
உய்த்தார் ஒளி விசும்பில் * ஓர் அடி வைத்து ** ஓர் அடிக்கும்
எய்த்தாது மண் என்று * இமையோர் தொழுது ஏத்தி *
கைத்தாமரை குவிக்கும் * கண்ணன் என் கண்ணனையே
Pasuram 1031 · corpus 1978
கண்ணன் மனத்துள்ளே * நிற்கவும் கை வளைகள் *
என்னோ கழன்ற? * இவை என்ன மாயங்கள்? **
பெண் ஆனோம் பெண்மையோம் நிற்க * அவன் மேய
அண்ணல் மலையும் * அரங்கமும் பாடோமே?
Pasuram 1032 · corpus 1979
பாடோமே எந்தை பெருமானை? * பாடிநின்று
ஆடோமே * ஆயிரம் பேரானை? * பேர் நினைந்து
சூடோமே ** சூடும் துழாய் அலங்கல்? சூடி * நாம்
கூடோமே கூடக் * குறிப்பு ஆகில்? நல் நெஞ்சே
Pasuram 1033 · corpus 1980
நல் நெஞ்சே நம் பெருமான் * நாளும் இனிது அமரும் *
அன்னம் சேர் கானல் * அணி ஆலி கைதொழுது **
முன்னம் சேர் வல்வினைகள் போக * முகில் வண்ணன் *
பொன்னம் சேர் சேவடிமேல் * போது அணியப்பெற்றோமே
Pasuram 1034 · corpus 1981
பெற்று ஆரார் * ஆயிரம் பேரானை * பேர் பாடப்
பெற்றான் * கலியன் ஒலிசெய் தமிழ் மாலை **
கற்றார் ஓ முற்று உலகு ஆள்வர் * இவை கேட்கல்
உற்றார்க்கு * உறு துயர் இல்லை உலகத்தே
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.