Corpus pasurams 1992–2001

This page preserves the source-defined decade 11, chapter 5 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 1045 · corpus 1992

Pasuram 1045

Study resources at Uveda
மான் அமரும் மென் நோக்கி * வைதேவி இன் துணையா *
கான் அமரும் கல் அதர் போய்க் * காடு உறைந்தான் காண் ஏடீ! **
கான் அமரும் கல் அதர் போய்க் * காடு உறைந்த பொன் அடிக்கள் *
வானவர் தம் சென்னி மலர் * கண்டாய் சாழலே

Pasuram 1046 · corpus 1993

Pasuram 1046

Study resources at Uveda
தந்தை தளை கழலத் * தோன்றிப் போய் * ஆய்ப்பாடி
நந்தன் குல மதலையாய் * வளர்ந்தான் காண் ஏடீ! **
நந்தன் குல மதலையாய் * வளர்ந்தான் நான்முகற்குத் *
தந்தை காண் எந்தை * பெருமான் காண் சாழலே

Pasuram 1047 · corpus 1994

Pasuram 1047

Study resources at Uveda
ஆழ் கடல் சூழ் வையகத்தார் * ஏசப் போய் * ஆய்ப்பாடித்
தாழ் குழலார் வைத்த * தயிர் உண்டான் காண் ஏடீ **
தாழ் குழலார் வைத்த * தயிர் உண்ட பொன் வயிறு * இவ்
ஏழ் உலகும் உண்டும் * இடம் உடைத்தால் சாழலே

Pasuram 1048 · corpus 1995

Pasuram 1048

Study resources at Uveda
அறியாதார்க்கு * ஆன் ஆயன் ஆகிப் போய் * ஆய்ப்பாடி
உறி ஆர் நறு வெண்ணெய் * உண்டு உகந்தான் காண் ஏடீ! **
உறி ஆர் நறு வெண்ணெய் * உண்டு உகந்த பொன் வயிற்றுக்கு *
எறி நீர் உலகு அனைத்தும் * எய்தாதால் சாழலே

Pasuram 1049 · corpus 1996

Pasuram 1049

Study resources at Uveda
வண்ணக் கருங் குழல் * ஆய்ச்சியால் மொத்துண்டு *
கண்ணிக் குறுங் கயிற்றால் * கட்டுண்டான் காண் ஏடீ **
கண்ணிக் குறுங் கயிற்றால் * கட்டுண்டான் ஆகிலும் *
எண்ணற்கு அரியன் * இமையோர்க்கும் சாழலே 5

Pasuram 1050 · corpus 1997

Pasuram 1050

Study resources at Uveda
கன்றப் பறை கறங்கக் * கண்டவர் தம் கண் களிப்ப *
மன்றில் மரக்கால் * கூத்து ஆடினான் காண் ஏடீ! **
மன்றில் மரக்கால் * கூத்து ஆடினான் ஆகிலும் *
என்றும் அரியன் * இமையோர்க்கும் சாழலே 6

Pasuram 1051 · corpus 1998

Pasuram 1051

Study resources at Uveda
கோதை வேல் ஐவர்க்கு ஆய் * மண் அகலம் கூறு இடுவான் *
தூதன் ஆய் மன்னவனால் * சொல்லுண்டான் காண் ஏடீ! **
தூதன் ஆய் மன்னவனால் * சொல்லுண்டான் ஆகிலும் *
ஓத நீர் வையகம் * முன் உண்டு உமிழ்ந்தான் சாழலே 7

Pasuram 1052 · corpus 1999

Pasuram 1052

Study resources at Uveda
பார் மன்னர் மங்கப் * படைதொட்டு வெம் சமத்து *
தேர் மன்னற்கு ஆய் * அன்று தேர் ஊர்ந்தான் காண் ஏடீ! **
தேர் மன்னற்கு ஆய் * அன்று தேர் ஊர்ந்தான் ஆகிலும் *
தார் மன்னர் தங்கள் * தலைமேலான் சாழலே 8

Pasuram 1053 · corpus 2000

Pasuram 1053

Study resources at Uveda
கண்டார் இரங்கக் * கழியக் குறள் உரு ஆய் *
வண் தாரான் வேள்வியில் * மண் இரந்தான் காண் ஏடீ **
வண் தாரான் வேள்வியில் * மண் இரந்தான் ஆகிலும் *
விண்டு ஏழ் உலகுக்கும் * மிக்கான் காண் சாழலே 9

Pasuram 1054 · corpus 2001

Pasuram 1054

Study resources at Uveda
கள்ளத்தால் மாவலியை * மூவடி மண் கொண்டு அளந்தான் *
வெள்ளத்தான் வேங்கடத்தான் * என்பரால் காண் ஏடீ! **
வெள்ளத்தான் * வேங்கடத்தானேலும் * கலிகன்றி
உள்ளத்தின் உள்ளே * உளன் கண்டாய் சாழலே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.