Corpus pasurams 2002–2011

This page preserves the source-defined decade 11, chapter 6 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 1055 · corpus 2002

Pasuram 1055

Study resources at Uveda
மைந் நின்ற கருங் கடல்வாய் உலகு இன்றி *
வானவரும் யாமும் எல்லாம் *
நெய்ந் நின்ற சக்கரத்தன் திருவயிற்றில் *
நெடுங் காலம் கிடந்தது ஓரீர் **
எந் நன்றி செய்தாரா ஏதிலோர் *
தெய்வத்தை ஏத்துகின்றீர்? *
செய்ந்நன்றி குன்றேல்மின் * தொண்டர்காள்
அண்டனையே ஏத்தீர்களே 1

Pasuram 1056 · corpus 2003

Pasuram 1056

Study resources at Uveda
நில்லாத பெரு வெள்ளம் * நெடு விசும்பின் மீது
ஓடி நிமிர்ந்த காலம் *
மல் ஆண்ட தடக் கையால் * பகிரண்டம்
அகப்படுத்த காலத்து ** அன்று
எல்லாரும் அறியாரோ? * எம் பெருமான்
உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் *
அல்லாதார் தாம் உளரே? * அவன் அருளே
உலகு ஆவது அறியீர்களே? 2

Pasuram 1057 · corpus 2004

Pasuram 1057

Study resources at Uveda
நெற்றிமேல் கண்ணானும் * நிறை மொழி வாய்
நான்முகனும் நீண்ட நால் வாய் *
ஒற்றைக் கை வெண் பகட்டின் * ஒருவனையும்
உள்ளிட்ட அமரரோடும் **
வெற்றிப் போர்க் கடல் அரையன் * விழுங்காமல்
தான் விழுங்கி உய்யக்கொண்ட *
கொற்றப்போர் ஆழியான் * குணம் பரவாச்
சிறுதொண்டர் கொடிய ஆறே 3

Pasuram 1058 · corpus 2005

Pasuram 1058

Study resources at Uveda
பனிப் பரவைத் திரை ததும்பப் * பார் எல்லாம்
நெடுங் கடலே ஆன காலம் *
இனிக் களைகண் இவர்க்கு இல்லை என்று * உலகம்
ஏழினையும் ஊழில் வாங்கி **
முனித் தலைவன் முழங்கு ஒளி சேர் * திரு வயிற்றில்
வைத்து உம்மை உய்யக்கொண்ட *
கனிக் களவத் திரு உருவத்து ஒருவனையே *
கழல் தொழுமா கல்லீர்களே 4

Pasuram 1059 · corpus 2006

Pasuram 1059

Study resources at Uveda
பார் ஆரும் காணாமே * பரவை மா
நெடுங் கடலே ஆன காலம் *
ஆரானும் அவனுடைய திரு வயிற்றில் *
நெடுங்காலம் கிடந்தது ** உள்ளத்து
ஓராத உணர்விலீர் உணருதிரேல் *
உலகு அளந்த உம்பர் கோமான் *
பேராளன் பேரான * பேர்கள்
ஆயிரங்களுமே பேசீர்களே 5

Pasuram 1060 · corpus 2007

Pasuram 1060

Study resources at Uveda
பேய் இருக்கும் நெடு வெள்ளம் * பெரு விசும்பின் மீது
ஓடிப் பெருகு காலம் *
தாய் இருக்கும் வண்ணமே * உம்மைத் தன்
வயிற்று இருத்தி உய்யக்கொண்டான் **
போய் இருக்க மற்று இங்கு ஓர் * புதுத் தெய்வம்
கொண்டாடும் தொண்டீர் * பெற்ற
தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ *
மாட்டாத தகவு அற்றீரே? 6

Pasuram 1061 · corpus 2008

Pasuram 1061

Study resources at Uveda
மண் நாடும் விண் நாடும் * வானவரும்
தானவரும் மற்றும் எல்லாம் *
உண்ணாத பெரு வெள்ளம் * உண்ணாமல்
தான் விழுங்கி உய்யக்கொண்ட **
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் *
கழல் சூடி அவனை உள்ளத்து *
எண்ணாத மானிடத்தை * எண்ணாத
போது எல்லாம் இனிய ஆறே

Pasuram 1062 · corpus 2009

Pasuram 1062

Study resources at Uveda
மறம் கிளர்ந்த கருங் கடல் நீர் * உரம் துரந்து
பரந்து ஏறி அண்டத்து அப்பால் *
புறம் கிளர்ந்த காலத்துப் * பொன் உலகம்
ஏழினையும் ஊழில் வாங்கி **
அறம் கிளந்த திரு வயிற்றின் * அகம்படியில்
வைத்து உம்மை உய்யக்கொண்ட *
நிறம் கிளர்ந்த கருஞ் சோதி * நெடுந்தகையை
நினையாதார் நீசர் தாமே

Pasuram 1063 · corpus 2010

Pasuram 1063

Study resources at Uveda
அண்டத்தின் முகடு அழுந்த * அலை முந்நீர்த்
திரை ததும்ப ஆஆ என்று *
தொண்டர்க்கும் அமரர்க்கும் * முனிவர்க்கும்
தான் அருளி ** உலகம் ஏழும்
உண்டு ஒத்த திருவயிற்றின் * அகம்படியில்
வைத்து உம்மை உய்யக்கொண்ட *
கொண்டல் கை மணி வண்ணன் * தண்
குடந்தை நகர் பாடி ஆடீர்களே

Pasuram 1064 · corpus 2011

Pasuram 1064

Study resources at Uveda
தேவரையும் அசுரரையும் * திசைகளையும்
கடல்களையும் மற்றும் முற்றும் *
யாவரையும் ஒழியாமே * எம் பெருமான்
உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன **
கா வளரும் பொழில் மங்கைக் * கலிகன்றி
ஒலி மாலை கற்று வல்லார் *
பூ வளரும் திருமகளால் அருள்பெற்றுப் *
பொன் உலகில் பொலிவர் தாமே

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.