Corpus pasurams 1058–1067

This page preserves the source-defined decade 2, chapter 2 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 111 · corpus 1058

Pasuram 111

Study resources at Uveda
காசை ஆடை மூடி ஓடிக் * காதல் செய்தான் * அவன் ஊர்
 நாசம் ஆக நம்ப வல்ல * நம்பி நம் பெருமான் **
 வேயின் அன்ன தோள் மடவார் * வெண்ணெய் உண்டான் இவன் என்று *
 ஏச நின்ற எம் பெருமான் * எவ்வுள் கிடந்தானே 1

Pasuram 112 · corpus 1059

Pasuram 112

Study resources at Uveda
தையலாள்மேல் காதல் செய்த * தானவன் வாள் அரக்கன் *
 பொய் இலாத பொன் முடிகள் * ஒன்பதோடு ஒன்றும் ** அன்று
 செய்த வெம் போர் தன்னில் * அங்கு ஓர் செஞ்சரத்தால் உருள *
 எய்த எந்தை எம் பெருமான் * எவ்வுள் கிடந்தானே 2

Pasuram 113 · corpus 1060

Pasuram 113

Study resources at Uveda
முன் ஓர் தூது * வானரத்தின் வாயில் மொழிந்து * அரக்கன்
 மன் ஊர் தன்னை * வாளியினால் மாள முனிந்து ** அவனே
 பின் ஓர் தூது * ஆதி மன்னர்க்கு ஆகி பெருநிலத்தார் *
 இன்னார் தூதன் என நின்றான் * எவ்வுள் கிடந்தானே 3

Pasuram 114 · corpus 1061

Pasuram 114

Study resources at Uveda
பந்து அணைந்த மெல் விரலாள் * பாவை தன் காரணத்தால்
 வெந் திறல் ஏறு ஏழும் * வென்ற வேந்தன் விரி புகழ் சேர்
 நந்தன் மைந்தன் ஆக ஆகும் * நம்பி நம் பெருமான்
 எந்தை தந்தை தம் பெருமான் * எவ்வுள் கிடந்தானே 4

Pasuram 115 · corpus 1062

Pasuram 115

Study resources at Uveda
பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு * பண்டு ஆல் இலைமேல்
 சால நாளும் பள்ளி கொள்ளும் * தாமரைக் கண்ணன் எண்ணில்
 நீலம் ஆர் வண்டு உண்டு வாழும் * நெய்தல் அம் தண் கழனி
 ஏலம் நாறும் பைம் புறவின் * எவ்வுள் கிடந்தானே 5

Pasuram 116 · corpus 1063

Pasuram 116

Study resources at Uveda
சோத்தம் நம்பி என்று * தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்
 ஆத்தன் நம்பி செங்கண் நம்பி * ஆகிலும் தேவர்க்கு எல்லாம் **
 மூத்த நம்பி முக்கண் நம்பி என்று * முனிவர் தொழுது
 ஏத்தும் * நம்பி எம் பெருமான் * எவ்வுள் கிடந்தானே 6

Pasuram 117 · corpus 1064

Pasuram 117

Study resources at Uveda
திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி * திசை முகனார்
 தங்கள் அப்பன் சாமி அப்பன் * பாகத்து இருந்த வண்டு உண்
 தொங்கல் அப்பு நீள் முடியான் * சூழ் கழல் சூடநின்ற
 எங்கள் அப்பன் எம் பெருமான் * எவ்வுள் கிடந்தானே 7

Pasuram 118 · corpus 1065

Pasuram 118

Study resources at Uveda
முனிவன் மூர்த்தி மூவர் ஆகி * வேதம் விரித்து உரைத்த
 புனிதன் * பூவை வண்ணன் அண்ணல் * புண்ணியன் விண்ணவர் கோன் **
 தனியன் சேயன் தான் ஒருவன் ஆகிலும் * தன் அடியார்க்கு
 இனியன் * எந்தை எம் பெருமான் * எவ்வுள் கிடந்தானே 8

Pasuram 119 · corpus 1066

Pasuram 119

Study resources at Uveda
பந்து இருக்கும் மெல் விரலாள் * பாவை பனி மலராள்
 வந்து இருக்கும் மார்வன் * நீல மேனி மணி வண்ணன்
 அந்தரத்தில் வாழும் * வானோர் நாயகன் ஆய் அமைந்த
 இந்திரற்கும் தம் பெருமான் * எவ்வுள் கிடந்தானே 9

Pasuram 120 · corpus 1067

Pasuram 120

Study resources at Uveda
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த * எவ்வுள் கிடந்தானை
 வண்டு பாடும் பைம் புறவின் * மங்கையர் கோன் கலியன்
 கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை * ஈர் ஐந்தும் வல்லார்
 அண்டம் ஆள்வது ஆணை * அன்றேல் ஆள்வர் அமர் உலகே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.