Corpus pasurams 1088–1097

This page preserves the source-defined decade 2, chapter 5 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 141 · corpus 1088

Pasuram 141

Study resources at Uveda
பார் ஆயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணைப் * படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட சீரானை *
எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே * முளைத்து எழுந்த தீம் கரும்பினை **
போர் ஆனைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினை * புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை *
கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தைக் * கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே 1

Pasuram 142 · corpus 1089

Pasuram 142

Study resources at Uveda
பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டுப் * பொய்ந் நூலை மெய்ந் நூல் என்று என்றும் ஓதி
மாண்டு * அவத்தம் போகாதே வம்மின் * எந்தை என் வணங்கப்படுவானை ** கணங்கள் ஏத்தும்
நீண்ட வத்தை கரு முகிலை எம்மான் தன்னை * நின்றவூர் நித்திலத்தை தொத்து ஆர் சோலை *
காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக் * கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே 2

Pasuram 143 · corpus 1090

Pasuram 143

Study resources at Uveda
உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய் * உலகு உய்ய நின்றானை அன்று பேய்ச்சி *
விடம் பருகு வித்தகனைக் கன்று மேய்த்து * விளையாட வல்லானை வரைமீ கானில் **
தடம் பருகு கரு முகிலைத் தஞ்சைக் கோயில் * தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும் *
கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன் * கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே 3

Pasuram 144 · corpus 1091

Pasuram 144

Study resources at Uveda
பேய்த் தாயை முலை உண்ட பிள்ளை தன்னைப் * பிணை மருப்பின் கருங் களிற்றை பிணை மான் நோக்கின் *
ஆய்த் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை * அந்தணர் தம் அமுதத்தை குரவை முன்னே
கோத்தானை ** குடம் ஆடு கூத்தன் தன்னைக் * கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக்
காத்தானை * எம்மானைக் கண்டுகொண்டேன் * கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே 4

Pasuram 145 · corpus 1092

Pasuram 145

Study resources at Uveda
பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழப் * பாலகன் ஆய் ஆல் இலையில் பள்ளி இன்பம்
ஏய்ந்தானை * இலங்கு ஒளி சேர் மணிக் குன்று அன்ன * ஈர் இரண்டு மால் வரைத் தோள் எம்மான் தன்னை **
தோய்ந்தானை நிலமகள் தோள் தூதில் சென்று * அப்பொய் அறைவாய்ப் புகப் பெய்த மல்லர் மங்கக்
காய்ந்தானை * எம்மானைக் கண்டுகொண்டேன் * கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே 5

Pasuram 146 · corpus 1093

Pasuram 146

Study resources at Uveda
கிடந்தானை தடங் கடலுள் பணங்கள் மேவிக் * கிளர் பொறிய மறி திரிய அதனின் பின்னே
படர்ந்தானை * படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தானைப் * பார் இடத்தை எயிறு கீற
இடந்தானை ** வளை மருப்பின் ஏனம் ஆகி * இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை எம்மானைக் கண்டுகொண்டேன் * கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே 6

Pasuram 147 · corpus 1094

Pasuram 147

Study resources at Uveda
பேணாத வலி அரக்கர் மெலிய அன்று * பெரு வரைத் தோள் இற நெரித்து அன்று அவுணர் கோனை *
பூண் ஆகம் பிளவு எடுத்த போர் வல்லோனைப் * பொரு கடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியை **
ஊண் ஆகப் பேய் முலை நஞ்சு உண்டான் தன்னை * உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானை *
காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன் * கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே 7

Pasuram 148 · corpus 1095

Pasuram 148

Study resources at Uveda
பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானைப் * பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை *
தண் ஆர்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும் * தட வரைமேல் கிடந்தானை பணங்கள் மேவி *
எண்ணானை எண் இறந்த புகழினானை * இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட
கண்ணானை * கண் ஆரக் கண்டுகொண்டேன் * கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே 8

Pasuram 149 · corpus 1096

Pasuram 149

Study resources at Uveda
தொண்டு ஆயர் தாம் பரவும் அடியினானை * படி கடந்த தாளாளற்கு ஆள் ஆய் உய்தல்
விண்டானை * தென் இலங்கை அரக்கர் வேந்தை * விலங்கு உண்ண வலங் கைவாய்ச் சரங்கள் ஆண்டு **
பண்டு ஆய வேதங்கள் நான்கும் * ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கம் ஆறும்
கண்டானைத * தொண்டனேன் கண்டுகொண்டேன் * கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே 9

Pasuram 150 · corpus 1097

Pasuram 150

Study resources at Uveda
பட நாகத்து அணைக் கிடந்து அன்று அவுணர் கோனைப் * பட வெகுண்டு மருது இடை போய் பழன வேலி *
தடம் ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத் * தாமரைக்கண் துயில் அமர்ந்த தலைவன் தன்னை **
கடம் ஆரும் கருங் களிறு வல்லான் * வெல் போர்க் கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல் *
திடம் ஆக இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் * தீவினையை முதல் அரிய வல்லார் தாமே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.