This page preserves the source-defined decade 3, chapter 5 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் * புகுந்ததன்பின் வணங்கும் * என்
சிந்தனைக்கு இனியாய் * திருவே என் ஆர் உயிரே **
அம் தளிர் அணி ஆர் * அசோகின் இளந்தளிர்கள் கலந்து * அவை எங்கும்
செந் தழல் புரையும் * திருவாலி அம்மானே 1 **
நீலத் தட வரை மா மணி நிகழக் * கிடந்ததுபோல் அரவு அணை *
வேலைத்தலைக் கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய் **
சோலைத்தலைக் கண மா மயில் நடம் ஆட * மழை முகில் போன்று எழுந்து * எங்கும்
ஆலைப் புகை கமழும் * அணி ஆலி அம்மானே 2
நென்னல் போய் வரும் என்று என்று எண்ணி * இராமை என் மனத்தே புகுந்தது *
இம்மைக்கு என்று இருந்தேன் * எறி நீர் வளஞ் செறுவில் **
செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ அரிவார் * முகத்து எழு வாளை போய் * கரும்பு
அந் நல் நாடு அணையும் * அணி ஆலி அம்மானே 3
நீடு பல் மலர் மாலை இட்டு * நின் இணை அடி தொழுது ஏத்தும் * என் மனம்
வாட நீ நினையேல் * மரம் எய்த மா முனிவா **
பாடல் இன் ஒலி சங்கின் ஓசை * பரந்து பல் பணையால் மலிந்து * எங்கும்
ஆடல் ஓசை அறா * அணி ஆலி அம்மானே 5
ஓதி ஆயிரம் நாமமும் பணிந்து ஏத்தி * நின் அடைந்தேற்கு * ஒரு பொருள்
வேதியா அரையா * உரையாய் ஒரு மாற்றம் ** எந்தாய்
நீதி ஆகிய வேத மா முனி யாளர் * தோற்றம் உரைத்து * மற்றவர்க்கு
ஆதி ஆய் இருந்தாய் * அணி ஆலி அம்மானே 9
புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ் * தென் ஆலி இருந்த மாயனை *
கல்லின் மன்னு திண் தோள் * கலியன் ஒலிசெய்த **
நல்ல இன் இசை மாலை * நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று தாம் * உடன்
வல்லர் ஆய் உரைப்பார்க்கு * இடம் ஆகும் வான் உலகே 10
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.