Corpus pasurams 1198–1207

This page preserves the source-defined decade 3, chapter 6 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 251 · corpus 1198

Pasuram 251

Study resources at Uveda
தூ விரிய மலர் உழக்கித் * துணையோடும் பிரியாதே *
பூ விரிய மது நுகரும் * பொறி வரிய சிறு வண்டே **
தீ விரிய மறை வளர்க்கும் * புகழ் ஆளர் திருவாலி *
ஏ வரி வெம் சிலையானுக்கு * என் நிலைமை உரையாயே 1

Pasuram 252 · corpus 1199

Pasuram 252

Study resources at Uveda
பிணி அவிழு நறு நீல * மலர் கிழியப் பெடையோடும் *
அணி மலர்மேல் மது நுகரும் * அறு கால சிறு வண்டே **
மணி கழுநீர் மருங்கு அலரும் * வயல் ஆலி மணவாளன்
பணி அறியேன் * நீ சென்று * என் பயலை நோய் உரையாயே 2

Pasuram 253 · corpus 1200

Pasuram 253

Study resources at Uveda
நீர் வானம் மண் எரி கால் ஆய் * நின்ற நெடுமால் * தன்
தார் ஆய நறுந் துளவம் * பெறும் தகையேற்கு அருளானே **
சீர் ஆரும் வளர் பொழில் சூழ் * திருவாலி வயல் வாழும் *
கூர் வாய சிறு குருகே * குறிப்பு அறிந்து கூறாயே 3

Pasuram 254 · corpus 1201

Pasuram 254

Study resources at Uveda
தானாக நினையானேல் * தன் நினைந்து நைவேற்கு * ஓர்
மீன் ஆய கொடி நெடு வேள் * வலி செய்ய மெலிவேனோ? **
தேன் வாய வரி வண்டே * திருவாலி நகர் ஆளும் *
ஆன் ஆயற்கு என் உறு நோய் * அறியச் சென்று உரையாயே 4

Pasuram 255 · corpus 1202

Pasuram 255

Study resources at Uveda
வாள் ஆய கண் பனிப்ப * மென் முலைகள் பொன் அரும்ப *
நாள் நாளும் * நின் நினைந்து நைவேற்கு * ஓ மண் அளந்த
தாளாளா தண் குடந்தை நகராளா * வரை எடுத்த
தோளாளா * என் தனக்கு ஓர் * துணையாளன் ஆகாயே 5

Pasuram 256 · corpus 1203

Pasuram 256

Study resources at Uveda
தார் ஆய தன் துளவ * வண்டு உழுதவரை மார்பன் *
போர் ஆனைக் கொம்பு ஒசித்த * புள் பாகன் என் அம்மான் **
தேர் ஆரும் நெடு வீதித் * திருவாலி நகர் ஆளும் *
கார் ஆயன் என்னுடைய * கன வளையும் கவர்வானோ? 6

Pasuram 257 · corpus 1204

Pasuram 257

Study resources at Uveda
கொண்டு அரவத் திரை உலவு * குரை கடல்மேல் குலவரைபோல் *
பண்டு அரவின் அணைக் கிடந்து * பார் அளந்த பண்பாளா **
வண்டு அமரும் வளர் பொழில் சூழ் * வயல் ஆலி மைந்தா * என்
கண் துயில் நீ கொண்டாய்க்கு * என் கன வளையும் கடவேனோ? 7

Pasuram 258 · corpus 1205

Pasuram 258

Study resources at Uveda
குயில் ஆலும் வளர் பொழில் சூழ் * தண் குடந்தைக் குடம் ஆடி *
துயிலாத கண் இணையேன் * நின் நினைந்து துயர்வேனோ? **
முயல் ஆலும் இள மதிக்கே * வளை இழந்தேற்கு * இது நடுவே
வயல் ஆலி மணவாளா * கொள்வாயோ மணி நிறமே? 8

Pasuram 259 · corpus 1206

Pasuram 259

Study resources at Uveda
நிலை ஆளா நின் வணங்க * வேண்டாயே ஆகிலும் * என்
முலை ஆள ஒருநாள் * உன் அகலத்தால் ஆளாயே **
சிலையாளா மரம் எய்த திறல் ஆளா * திருமெய்ய
மலையாளா * நீ ஆள வளை ஆள மாட்டோமே 9

Pasuram 260 · corpus 1207

Pasuram 260

Study resources at Uveda
மை இலங்கு கருங் குவளை * மருங்கு அலரும் வயல் ஆலி *
நெய் இலங்கு சுடர் ஆழிப் படையானை * நெடுமாலை **
கை இலங்கு வேல் கலியன் * கண்டு உரைத்த தமிழ் மாலை *
ஐ இரண்டும் இவை வல்லார்க்கு * அரு வினைகள் அடையாவே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.