Pasuram 261 · corpus 1208
Pasuram 261
கள்வன்கொல்? யான் அறியேன் * கரியான் ஒரு காளை வந்து *
வள்ளி மருங்குல் * என் தன் மட மானினைப் போத என்று **
வெள்ளி வளைக் கை * பற்றப் பெற்ற தாயரை விட்டு அகன்று *
அள்ளல் அம் பூங் கழனி * அணி ஆலி புகுவர்கொலோ? 1
Thirumangai Azhwar · Pasurams 261–270
Corpus pasurams 1208–1217
This page preserves the source-defined decade 3, chapter 7 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 261 · corpus 1208
கள்வன்கொல்? யான் அறியேன் * கரியான் ஒரு காளை வந்து *
வள்ளி மருங்குல் * என் தன் மட மானினைப் போத என்று **
வெள்ளி வளைக் கை * பற்றப் பெற்ற தாயரை விட்டு அகன்று *
அள்ளல் அம் பூங் கழனி * அணி ஆலி புகுவர்கொலோ? 1
Pasuram 262 · corpus 1209
பண்டு இவன் ஆயன் நங்காய் * படிறன் புகுந்து * என் மகள் தன்
தொண்டை அம் செங் கனி வாய் * நுகர்ந்தானை உகந்து ** அவன்பின்
கெண்டை ஒண் கண் மிளிரக் * கிளிபோல் மிழற்றி நடந்து *
வண்டு அமர் கானல் மல்கும் * வயல் ஆலி புகுவர்கொலோ? 2
Pasuram 263 · corpus 1210
அஞ்சுவன் வெம் சொல் நங்காய் * அரக்கர் குலப் பாவை தன்னை *
வெம் சின மூக்கு அரிந்த * விறலோன் திறம் கேட்கில் மெய்யே **
பஞ்சிய மெல் அடி * எம் பணைத் தோளி பரக்கழிந்து *
வஞ்சி அம் தண் பணை சூழ் * வயல் ஆலி புகுவர்கொலோ? 3
Pasuram 264 · corpus 1211
ஏது அவன் தொல் பிறப்பு? * இளையவன் வளை ஊதி * மன்னர்
தூதுவன் ஆயவன் ஊர் * சொல்வீர்கள் சொலீர் அறியேன் **
மாதவன் தன் துணையா நடந்தாள் * தடம் சூழ் புறவில் *
போது வண்டு ஆடு செம்மல் * புனல் ஆலி புகுவர்கொலோ? 4
Pasuram 265 · corpus 1212
தாய் எனை என்று இரங்காள் * தடந் தோளி தனக்கு அமைந்த *
மாயனை மாதவனை * மதித்து என்னை அகன்ற இவள் **
வேய் அன தோள் விசிறிப் * பெடை அன்னம் என நடந்து *
போயின பூங் கொடியாள் * புனல் ஆலி புகுவர்கொலோ? 5
Pasuram 266 · corpus 1213
என் துணை என்று எடுத்தேற்கு * இறையேனும் இரங்கிற்றிலள் *
தன் துணை ஆய என் தன் * தனிமைக்கும் இரங்கிற்றிலள் **
வன் துணை வானவர்க்கு ஆய் * வரம் செற்று அரங்கத்து உறையும் *
இன் துணைவனொடும் போய் * எழில் ஆலி புகுவர்கொலோ? 6
Pasuram 267 · corpus 1214
அன்னையும் அத்தனும் என்று * அடியோமுக்கு இரங்கிற்றிலள் *
பின்னை தன் காதலன் தன் * பெருந் தோள் நலம் பேணினளால் **
மின்னையும் வஞ்சியையும் * வென்று இலங்கும் இடையாள் நடந்து *
புன்னையும் அன்னமும் சூழ் * புனல் ஆலி புகுவர்கொலோ? 7
Pasuram 268 · corpus 1215
முற்றிலும் பைங் கிளியும் * பந்தும் ஊசலும் பேசுகின்ற *
சிற்றில் மென் பூவையும் * விட்டு அகன்ற செழுங் கோதை தன்னைப் **
பெற்றிலேன் முற்று இழையை * பிறப்பிலி பின்னே நடந்து *
மற்று எல்லாம் கைதொழப் போய் * வயல் ஆலி புகுவர்கொலோ? 8
Pasuram 269 · corpus 1216
காவி அம் கண்ணி எண்ணில் * கடி மா மலர்ப் பாவை ஒப்பாள் *
பாவியேன் பெற்றமையால் * பணைத் தோளி பரக்கழிந்து **
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் * நெடுமாலொடும் போய் *
வாவி அம் தண் பணை சூழ் * வயல் ஆலி புகுவர்கொலோ? 9
Pasuram 270 · corpus 1217
தாய் மனம் நின்று இரங்கத் * தனியே நெடுமால் துணையா *
போயின பூங் கொடியாள் * புனல் ஆலி புகுவர் என்று **
காய் சின வேல் கலியன் * ஒலிசெய் தமிழ் மாலை பத்தும் *
மேவிய நெஞ்சு உடையார் * தஞ்சம் ஆவது விண் உலகே 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.