Corpus pasurams 1228–1237

This page preserves the source-defined decade 3, chapter 9 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 281 · corpus 1228

Pasuram 281

Study resources at Uveda
சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு *
தடங் கடலைக் கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை *
நலம் கொண்ட கரு முகில்போல் திருமேனி அம்மான் *
நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் **
சலம் கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி *
செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே *
வலம் கொண்டு கயல் ஓடி விளையாடு நாங்கூர் *
வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 1

Pasuram 282 · corpus 1229

Pasuram 282

Study resources at Uveda
திண்ணியது ஓர் அரி உருவாய்த் திசை அனைத்தும் நடுங்கத் *
தேவரொடு தானவர்கள் திசைப்ப * இரணியனை
நண்ணி அவன் மார்வு அகலத்து உகிர் மடுத்த நாதன் *
நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் **
எண் இல் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையும் *
ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர் *
மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் *
வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 2

Pasuram 283 · corpus 1230

Pasuram 283

Study resources at Uveda
அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம் *
அமுது செய்த திரு வயிற்றன் அரன் கொண்டு திரியும் *
முண்டம் அது நிறைத்து அவன்கண் சாபம் அது நீக்கும் *
முதல்வன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் **
எண் திசையும் பெருஞ் செந்நெல் இளந் தெங்கு கதலி *
இலைக்கொடி ஒண் குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய *
வண்டு பல இசை பாட மயில் ஆலும் நாங்கூர் *
வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 3

Pasuram 284 · corpus 1231

Pasuram 284

Study resources at Uveda
கலை இலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக் கொடியைக் *
காதொடு மூக்கு உடன் அரியக் கதறி அவள் ஓடி *
தலையில் அங் கை வைத்து மலை இலங்கை புகச் செய்த *
தடந் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் **
சிலை இலங்கு மணி மாடத்து உச்சிமிசைச் சூலம் *
செழுங் கொண்டல் அகடு இரியச் சொரிந்த செழு முத்தம் *
மலை இலங்கு மாளிகைமேல் மலிவு எய்தும் நாங்கூர் *
வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 4

Pasuram 285 · corpus 1232

Pasuram 285

Study resources at Uveda
மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கா * இலங்கை
வேந்தன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிர *
தன் நிகர் இல் சிலை வளைத்து அன்று இலங்கை பொடிசெய்த *
தடந் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் **
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை *
செங்கழுநீரொடு மிடைந்து கழனி திகழ்ந்து எங்கும் *
மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்தும் நாங்கூர் *
வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 5

Pasuram 286 · corpus 1233

Pasuram 286

Study resources at Uveda
பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் * பெரிய
பேயினது உருவு கொடு மாள உயிர் உண்டு *
திண்மை மிகு மருதொடு நல் சகடம் இறுத்தருளும் *
தேவன் அவன்மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் **
உண்மை மிகு மறையொடு நல் கலைகள் நிறை பொறைகள் *
உதவு கொடை என்று இவற்றின் ஒழிவு இல்லா * பெரிய
வண்மை மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் *
வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 6

Pasuram 287 · corpus 1234

Pasuram 287

Study resources at Uveda
விளங்கனியை இளங் கன்று கொண்டு உதிர எறிந்து *
வேல் நெடுங் கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய் *
உளம்குளிர அமுது செய்து இவ் உலகு உண்ட காளை *
உகந்து இனிது நாள்தோறும் மருவி உறை கோயில் **
இளம்படி நல் கமுகு குலைத் தெங்கு கொடிச் செந்நெல் *
ஈன் கரும்பு கண்வளரக் கால் தடவும் புனலால் *
வளம் கொண்ட பெருஞ் செல்வம் வளரும் அணி நாங்கூர் *
வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 7

Pasuram 288 · corpus 1235

Pasuram 288

Study resources at Uveda
ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழித்த *
அடல் ஆழித் தடக் கையன் அலர் மகட்கும் அரற்கும் *
கூறாகக் கொடுத்தருளும் திரு உடம்பன் இமையோர் *
குல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் **
மாறாத மலர்க் கமலம் செங்கழுநீர் ததும்பி *
மது வெள்ளம் ஒழுக வயல் உழவர் மடை அடைப்ப *
மாறாத பெருஞ் செல்வம் வளரும் அணி நாங்கூர் *
வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 8

Pasuram 289 · corpus 1236

Pasuram 289

Study resources at Uveda
வங்கம் மலி தடங் கடலுள் வானவர்களோடு *
மா முனிவர் பலர் கூடி மா மலர்கள் தூவி *
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும் *
ஈசன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் **
செங் கயலும் வாளைகளும் செந்நெலிடைக் குதிப்பச் *
சேல் உகளும் செழும் பணை சூழ் வீதிதொறும் மிடைந்து *
மங்குல் மதி அகடு உரிஞ்சு மணி மாட நாங்கூர் *
வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 9

Pasuram 290 · corpus 1237

Pasuram 290

Study resources at Uveda
சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும் *
தாமரைக் கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில் *
வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்தும் நாங்கூர் *
வைகுந்தவிண்ணகர்மேல் வண்டு அறையும் பொழில் சூழ் **
மங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல் துணிய *
வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன *
சங்கம் மலி தமிழ் மாலை பத்து இவை வல்லார்கள் *
தரணியொடு விசும்பு ஆளும் தன்மை பெறுவாரே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.