Corpus pasurams 1258–1267

This page preserves the source-defined decade 4, chapter 2 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 311 · corpus 1258

Pasuram 311

Study resources at Uveda
கம்ப மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் * கதிர் முடி அவை பத்தும்
அம்பினால் அறுத்து * அரசு அவன் தம்பிக்கு * அளித்தவன் உறை கோயில் **
செம் பலா நிரை செண்பகம் மாதவி * சூதகம் வாழைகள் சூழ் *
வம்பு உலாம் கமுகு ஓங்கிய நாங்கூர் * வண்புருடோத்தமமே 1

Pasuram 312 · corpus 1259

Pasuram 312

Study resources at Uveda
பல்லவம் திகழ் பூங் கடம்பு ஏறி * அக் காளியன் பணவு அரங்கில் *
ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம் செய்த * உம்பர் கோன் உறை கோயில் **
நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம் * ஐவேள்வியோடு ஆறு அங்கம் *
வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர் * வண்புருடோத்தமமே 2

Pasuram 313 · corpus 1260

Pasuram 313

Study resources at Uveda
அண்டர் ஆனவர் வானவர் கோனுக்கு என்று * அமைத்த சோறு அது எல்லாம்
உண்டு * கோ நிரை மேய்த்து அவை காத்தவன் * உகந்து இனிது உறை கோயில் **
கொண்டல் ஆர் முழவில் குளிர் வார் பொழில் * குல மயில் நடம் ஆட *
வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர் * வண்புருடோத்தமமே 3

Pasuram 314 · corpus 1261

Pasuram 314

Study resources at Uveda
பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து * அதன் பாகனைச் சாடிப் புக்கு *
ஒருங்க மல்லரைக் கொன்று * பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில் **
கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு * கழனியில் மலி வாவி *
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர் * வண்புருடோத்தமமே 4

Pasuram 315 · corpus 1262

Pasuram 315

Study resources at Uveda
சாடு போய் விழத் தாள் நிமிர்ந்து * ஈசன் தன் படையொடும் கிளையோடும்
ஓட * வாணனை ஆயிரம் தோள்களும் * துணித்தவன் உறை கோயில் **
ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவிப் போய்ப் * பகலவன் ஒளி மறைக்கும் *
மாட மாளிகை சூழ் தரு நாங்கூர் * வண்புருடோத்தமமே 5

Pasuram 316 · corpus 1263

Pasuram 316

Study resources at Uveda
அங் கையால் அடி மூன்று நீர் ஏற்று * அயன் அலர் கொடு தொழுது ஏத்த *
கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய * கண்ணன் வந்து உறை கோயில் **
கொங்கை கோங்கு அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட * மா பதுமங்கள் *
மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர் * வண்புருடோத்தமமே 6

Pasuram 317 · corpus 1264

Pasuram 317

Study resources at Uveda
உளைய ஒண் திறல் பொன்பெயரோன் * தனது உரம் பிளந்து உதிரத்தை
அளையும் * வெம் சினத்து அரி பரி கீறிய * அப்பன் வந்து உறை கோயில் **
இளைய மங்கையர் இணை அடிச் சிலம்பினோடு * எழில் கொள் பந்து அடிப்போர் * கை
வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர் * வண்புருடோத்தமமே 7

Pasuram 318 · corpus 1265

Pasuram 318

Study resources at Uveda
வாளை ஆர் தடங் கண் உமை பங்கன் * வன் சாபம் மற்று அது நீங்க *
மூளை ஆர் சிரத்து ஐயம் முன் அளித்த * எம் முகில் வண்ணன் உறை கோயில் **
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் * வண் பழம் விழ வெருவிப் போய் *
வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர் * வண்புருடோத்தமமே 8

Pasuram 319 · corpus 1266

Pasuram 319

Study resources at Uveda
இந்து வார் சடை ஈசனைப் பயந்த * நான் முகனை தன் எழில் ஆரும் *
உந்தி மா மலர் மீமிசைப் படைத்தவன் * உகந்து இனிது உறை கோயில் **
குந்தி வாழையின் கொழுங் கனி நுகர்ந்து * தன் குருளையைத் தழுவிப் போய் *
மந்தி மாம்பணைமேல் வைகும் நாங்கூர் * வண்புருடோத்தமமே 9

Pasuram 320 · corpus 1267

Pasuram 320

Study resources at Uveda
மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர் * வண்புருடோத்தமத்துள் *
அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன் * ஆலி மன் அருள் மாரி **
பண்ணுளார் தரப் பாடிய பாடல் * இப் பத்தும் வல்லார் * உலகில்
எண் இலாத பேர் இன்பம் உற்று * இமையவரோடும் கூடுவரே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.