Corpus pasurams 1268–1277

This page preserves the source-defined decade 4, chapter 3 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 321 · corpus 1268

Pasuram 321

Study resources at Uveda
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் *
பேர் அருளாளன் எம் பிரானை *
வார் அணி முலையாள் மலர் மகளோடு *
மண் மகளும் உடன் நிற்ப **
சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள் *
செம்பொன்செய்கோயிலினுள்ளே *
கார் அணி மேகம் நின்றது ஒப்பானைக் *
கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே 1

Pasuram 322 · corpus 1269

Pasuram 322

Study resources at Uveda
பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் தன்னைப் *
பேதியா இன்ப வெள்ளத்தை *
இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை *
ஏழ் இசையின் சுவை தன்னை **
சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள் *
செம்பொன்செய்கோயிலினுள்ளே *
மறைப் பெரும் பொருளை வானவர் கோனை *
கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே 2

Pasuram 323 · corpus 1270

Pasuram 323

Study resources at Uveda
திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் *
செழு நிலத்து உயிர்களும் மற்றும் *
படர் பொருள்களும் ஆய் நின்றவன் தன்னை *
பங்கயத்து அயன் அவன் அனைய **
திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள் *
செம்பொன்செய்கோயிலினுள்ளே *
கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன் *
கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே 3

Pasuram 324 · corpus 1271

Pasuram 324

Study resources at Uveda
வசை அறு குறள் ஆய் மாவலி வேள்வி *
மண் அளவிட்டவன் தன்னை *
அசைவு அறும் அமரர் அடி இணை வணங்க *
அலை கடல் துயின்ற அம்மானை *
திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள் *
செம்பொன்செய்கோயிலினுள்ளே *
உயர் மணி மகுடம் சூடி நின்றானைக் *
கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே 4

Pasuram 325 · corpus 1272

Pasuram 325

Study resources at Uveda
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே
என்று * சென்று அடைந்தவர் தமக்கு *
தாய் மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும் *
தயரதன் மதலையை சயமே **
தே மலர்ப் பொழில் சூழ் நாங்கை நல் நடுவுள் *
செம் பொன் செய் கோயிலினுள்ளே *
காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன் *
கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே 5

Pasuram 326 · corpus 1273

Pasuram 326

Study resources at Uveda
மல்லை மா முந்நீர் அதர்பட * மலையால்
அணைசெய்து மகிழ்ந்தவன் தன்னை *
கல்லின்மீது இயன்ற கடி மதிள் இலங்கை
கலங்க * ஓர் வாளி தொட்டானை **
செல்வ நான்மறையோர் நாங்கை நல் நடுவுள் *
செம் பொன் செய் கோயிலினுள்ளே *
அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன் *
கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே 6

Pasuram 327 · corpus 1274

Pasuram 327

Study resources at Uveda
வெம் சினக் களிறும் வில்லொடு மல்லும் *
வெகுண்டு இறுத்து அடர்த்தவன் தன்னை *
கஞ்சனைக் காய்ந்த காளை அம்மானைக் *
கரு முகில் திரு நிறத்தவனை **
செஞ்சொல் நான்மறையோர் நாங்கை நல் நடுவுள் *
செம் பொன் செய் கோயிலினுள்ளே *
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானைக் *
கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே 7

Pasuram 328 · corpus 1275

Pasuram 328

Study resources at Uveda
அன்றிய வாணன் ஆயிரம் தோளும்
துணிய * அன்று ஆழி தொட்டானை *
மின் திகழ் குடுமி வேங்கட மலைமேல் *
மேவிய வேத நல் விளக்கை **
தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச் *
செம் பொன் செய் கோயிலினுள்ளே *
மன்று அது பொலிய மகிழ்ந்து நின்றானை *
வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே 8

Pasuram 329 · corpus 1276

Pasuram 329

Study resources at Uveda
களங்கனி வண்ணா கண்ணனே என் தன் *
கார் முகிலே என நினைந்திட்டு *
உளம் கனிந்திருக்கும் அடியவர் தங்கள் *
உள்ளத்துள் ஊறிய தேனை **
தெளிந்த நான்மறையோர் நாங்கை நல் நடுவுள் *
செம் பொன் செய் கோயிலினுள்ளே *
வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை *
வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே 9

Pasuram 330 · corpus 1277

Pasuram 330

Study resources at Uveda
தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள் *
செம் பொன் செய் கோயிலினுள்ளே *
வானவர் கோனைக் கண்டமை சொல்லும் *
மங்கையார் வாள் கலிகன்றி *
ஊனம் இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும் *
ஒழிவு இன்றிக் கற்று வல்லார்கள் *
மான வெண் குடைக்கீழ் வையகம் ஆண்டு *
வானவர் ஆகுவர் மகிழ்ந்தே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.