This page preserves the source-defined decade 4, chapter 4 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் *
மற்று அவர் தம் காதலிமார் குழையும் * தந்தை
கால் தளையும் உடன் கழல வந்து தோன்றிக் *
கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர் **
நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து *
இளங் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின் *
சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர்த் *
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே 1
பொற்றொடித் தோள் மட மகள் தன் வடிவு கொண்ட *
பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி *
பெற்று எடுத்த தாய்போல மடுப்ப * ஆரும்
பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர் **
நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் *
இருஞ் சிறைய வண்டு ஒலியும் நெடுங் கணார் தம் *
சிற்றடிமேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர்த் *
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே 2
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் *
பசு வெண்ணெய் பதம் ஆரப் பண்ணை முற்றும் *
அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி *
அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர் **
மடல் எடுத்த நெடுந் தெங்கின் பழங்கள் வீழ *
மாங்கனிகள் திரட்டு உருட்டா வரு நீர்ப் பொன்னி *
திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர்த் *
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே 3
வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி *
வளை மருப்பின் கடுஞ் சினத்து வன் தாள் ஆர்ந்த *
கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட *
கரு முகில்போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர் **
ஏர் ஆரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும் *
எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதி *
சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர்த் *
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே 4
கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை *
கதிர் முத்த வெண்ண கையாள் கருங் கண் ஆய்ச்சி *
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப *
மூவாத வரை நெடுந் தோள் மூர்த்தி கண்டீர் **
மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி *
ஆடவரை மட மொழியார் முகத்து * இரண்டு
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த் *
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே 5
தான்போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன் *
அது கண்டு தரித்திருப்பான் அரக்கர் தங்கள் *
கோன்போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன *
இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர் **
மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார் *
மரகதம்போல் மடக் கிளியைக் கைமேல் கொண்டு *
தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த் *
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே 6
சிலம்பின் இடைச் சிறு பரல்போல் பெரிய மேரு *
திருக் குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம் குலுங்க *
நில மடந்தை தனை இடந்து புல்கிக் *
கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர் **
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும் *
ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும் *
சிலம்பிய நல் பெருஞ் செல்வம் திகழும் நாங்கூர்த் *
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே 8
ஏழ் உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி *
எண் திசையும் மண்டலமும் மண்டி * அண்டம்
மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம் *
முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர் **
ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்த செல்வத்து *
ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கு நாவர் *
சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த் *
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே 9
சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த் *
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலை *
கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன் *
கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி **
பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன *
பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் *
சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி *
சேண் விசும்பில் வானவர் ஆய்த் திகழ்வர் தாமே 10
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.