Corpus pasurams 1288–1297

This page preserves the source-defined decade 4, chapter 5 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 341 · corpus 1288

Pasuram 341

Study resources at Uveda
தூம்பு உடைப் பனைக் கை வேழம் *
துயர் கெடுத்தருளி * மன்னும்
காம்பு உடைக் குன்றம் ஏந்திக் *
கடு மழை காத்த எந்தை *
பூம் புனல் பொன்னி முற்றும் **
புகுந்து பொன் வரன்ட எங்கும் *
தேம் பொழில் கமழும் நாங்கூர்த் *
திருமணிக்கூடத்தானே 1

Pasuram 342 · corpus 1289

Pasuram 342

Study resources at Uveda
கவ்வை வாள் எயிற்று வன் பேய்க் *
கதிர் முலை சுவைத்து * இலங்கை
வவ்விய இடும்பை தீரக் *
கடுங் கணை துரந்த எந்தை **
கொவ்வை வாய் மகளிர் கொங்கைக் *
குங்குமம் கழுவிப் போந்த *
தெய்வ நீர் கழும் நாங்கூர்த் *
திருமணிக்கூடத்தானே 2

Pasuram 343 · corpus 1290

Pasuram 343

Study resources at Uveda
மாத் தொழில் மடங்கச் செற்று *
மருது இற நடந்து * வன் தாள்
சேத் தொழில் சிதைத்துப் * பின்னை
செவ்வித் தோள் புணர்ந்த எந்தை **
நாத் தொழில் மறை வல்லார்கள் *
நயந்து அறம் பயந்த வண் கைத் *
தீத் தொழில் பயிலும் நாங்கூர்த் *
திருமணிக்கூடத்தானே 3

Pasuram 344 · corpus 1291

Pasuram 344

Study resources at Uveda
தாங்கு அரும் சினத்து வன் தாள் *
தடக் கை மா மருப்பு வாங்கி *
பூங் குருந்து ஒசித்து புள் வாய்
பிளந்து * எருது அடர்த்த எந்தை **
மாங்கனி நுகர்ந்த மந்தி *
வந்து வண்டு இரிய * வாழைத்
தீங் கனி நுகரும் நாங்கூர்த் *
திருமணிக்கூடத்தானே 4

Pasuram 345 · corpus 1292

Pasuram 345

Study resources at Uveda
கரு மகள் இலங்கையாட்டி *
பிலங் கொள் வாய் திறந்து * தன்மேல்
வரும் அவள் செவியும் மூக்கும்
வாளினால் தடிந்த எந்தை **
பெரு மகள் பேதை மங்கை *
தன்னொடும் பிரிவு இலாத *
திருமகள் மருவும் நாங்கூர்த் *
திருமணிக்கூடத்தானே 5

Pasuram 346 · corpus 1293

Pasuram 346

Study resources at Uveda
கெண்டையும் குறளும் புள்ளும் * கேழலும் அரியும் மாவும் *
அண்டமும் சுடரும் அல்லா * ஆற்றலும் ஆய எந்தை **
ஒண் திறல் தென்னன் ஓட * வட அரசு ஓட்டம் கண்ட *
திண் திறலாளர் நாங்கூர்த் * திருமணிக்கூடத்தானே 6

Pasuram 347 · corpus 1294

Pasuram 347

Study resources at Uveda
குன்றமும் வானும் மண்ணும் *
குளிர் புனல் திங்களோடு *
நின்ற வெம் சுடரும் அல்லா *
நிலைகளும் ஆய எந்தை **
மன்றமும் வயலும் காவும் *
மாடமும் மணங் கொண்டு * எங்கும்
தென்றல் வந்து உலவும் நாங்கூர்த் *
திருமணிக்கூடத்தானே 7

Pasuram 348 · corpus 1295

Pasuram 348

Study resources at Uveda
சங்கையும் துணிவும் பொய்யும் *
மெய்யும் இத் தரணி ஓம்பும் *
பொங்கிய முகிலும் அல்லாப் *
பொருள்களும் ஆய எந்தை **
பங்கயம் உகுத்த தேறல் *
பருகிய வாளை பாய *
செங் கயல் உகளும் நாங்கூர்த் *
திருமணிக்கூடத்தானே 8

Pasuram 349 · corpus 1296

Pasuram 349

Study resources at Uveda
பாவமும் அறமும் வீடும் *
இன்பமும் துன்பம் தானும் *
கோவமும் அருளும் அல்லாக் *
குணங்களும் ஆய எந்தை **
மூவரில் எங்கள் மூர்த்தி *
இவன் என முனிவரோடு *
தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர்த் *
திருமணிக்கூடத்தானே 9

Pasuram 350 · corpus 1297

Pasuram 350

Study resources at Uveda
திங்கள் தோய் மாட நாங்கூர்த் *
திருமணிக்கூடத்தானை *
மங்கையர் தலைவன் வண் தார்க் *
கலியன் வாய் ஒலிகள் வல்லார் **
பொங்கு நீர் உலகம் ஆண்டு *
பொன் உலகு ஆண்டு * பின்னும்
வெம் கதிர்ப் பரிதி வட்டத்து
ஊடு போய் * விளங்குவாரே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.