Pasuram 351 · corpus 1298
Pasuram 351
தா அளந்து உலகம் முற்றும் *
தட மலர்ப் பொய்கை புக்கு *
நா வளம் நவின்று அங்கு ஏத்த *
நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய் **
மா வளம் பெருகி மன்னும் *
மறையவர் வாழும் நாங்கை *
காவளம்பாடி மேய *
கண்ணனே களைகண் நீயே 1
Thirumangai Azhwar · Pasurams 351–360
Corpus pasurams 1298–1307
This page preserves the source-defined decade 4, chapter 6 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 351 · corpus 1298
தா அளந்து உலகம் முற்றும் *
தட மலர்ப் பொய்கை புக்கு *
நா வளம் நவின்று அங்கு ஏத்த *
நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய் **
மா வளம் பெருகி மன்னும் *
மறையவர் வாழும் நாங்கை *
காவளம்பாடி மேய *
கண்ணனே களைகண் நீயே 1
Pasuram 352 · corpus 1299
மண் இடந்து ஏனம் ஆகி * மாவலி வலி தொலைப்பான் *
விண்ணவர் வேண்டச் சென்று * வேள்வியில் குறை இரந்தாய் **
துண் என மாற்றார் தம்மைத் * தொலைத்தவர் நாங்கை மேய *
கண்ணனே காவளம் தண் பாடியாய் * களைகண் நீயே 2
Pasuram 353 · corpus 1300
உருத்து எழு வாலி மார்வில் *
ஒரு கணை உருவ ஓட்டி *
கருத்து உடைத் தம்பிக்கு * இன்பக்
கதிர் முடி அரசு அளித்தாய் **
பருத்து எழு பலவும் மாவும் *
பழம் விழுந்து ஒழுகும் நாங்கை *
கருத்தனே காவளம் தண்
பாடியாய் * களைகண் நீயே 3
Pasuram 354 · corpus 1301
முனைமுகத்து அரக்கன் மாள *
முடிகள் பத்து அறுத்து வீழ்த்து * ஆங்கு
அனையவற்கு இளையவற்கே *
அரசு அளித்து அருளினானே **
சுனைகளில் கயல்கள் பாயச் *
சுரும்பு தேன் நுகரும் நாங்கை *
கனை கழல் காவளம் தண்
பாடியாய் * களைகண் நீயே 4
Pasuram 355 · corpus 1302
பட அரவு உச்சி தன்மேல் *
பாய்ந்து பல் நடங்கள்செய்து *
மடவரல் மங்கை தன்னை *
மார்வகத்து இருத்தினானே **
தட வரை தங்கு மாடத் *
தகு புகழ் நாங்கை மேய *
கடவுளே காவளம் தண்
பாடியாய் * களைகண் நீயே 5
Pasuram 356 · corpus 1303
மல்லரை அட்டு மாளக் *
கஞ்சனை மலைந்து கொன்று *
பல் அரசு அவிந்து வீழப் *
பாரதப் போர் முடித்தாய் **
நல் அரண் காவின் நீழல் *
நறை கமழ் நாங்கை மேய *
கல் அரண் காவளம் தண்
பாடியாய் * களைகண் நீயே 6
Pasuram 357 · corpus 1304
மூத்தவற்கு அரசு வேண்டி *
முன்பு தூது எழுந்தருளி *
மாத்து அமர் பாகன் வீழ *
மத கரி மருப்பு ஒசித்தாய் **
பூத்து அமர் சோலை ஓங்கிப் *
புனல் பரந்து ஒழுகும் நாங்கை *
காத்தனே காவளம் தண்
பாடியாய் * களைகண் நீயே 7
Pasuram 358 · corpus 1305
ஏவு இளங் கன்னிக்கு ஆகி *
இமையவர் கோனைச் செற்று *
கா வளம் கடிது இறுத்துக் *
கற்பகம் கொண்டு போந்தாய் **
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த *
புரந்தரன் செய்த நாங்கை *
காவளம்பாடி மேய *
கண்ணனே களைகண் நீயே 8
Pasuram 359 · corpus 1306
சந்தம் ஆய்ச் சமயம் ஆகிச் *
சமய ஐம் பூதம் ஆகி *
அந்தம் ஆய் ஆதி ஆகி *
அரு மறை அவையும் ஆனாய் **
மந்தம் ஆர் பொழில்கள்தோறும் *
மட மயில் ஆலும் நாங்கை *
கந்தம் ஆர் காவளம் தண்
பாடியாய் * களைகண் நீயே 9
Pasuram 360 · corpus 1307
மா வளம் பெருகி மன்னும் *
மறையவர் வாழும் * நாங்கைக்
காவளம்பாடி மேய *
கண்ணனைக் கலியன் சொன்ன **
பா வளம் பத்தும் வல்லார் *
பார்மிசை அரசர் ஆகிக் *
கோ இள மன்னர் தாழக் *
குடை நிழல் பொலிவர் தாமே 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.