Corpus pasurams 1308–1317

This page preserves the source-defined decade 4, chapter 7 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 361 · corpus 1308

Pasuram 361

Study resources at Uveda
கண் ஆர் கடல்போல் * திருமேனி கரியாய் *
நண்ணார் முனை * வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த் **
திண் ஆர் மதிள் சூழ் * திருவெள்ளக்குளத்துள்
அண்ணா * அடியேன் இடரைக் களையாயே 1

Pasuram 362 · corpus 1309

Pasuram 362

Study resources at Uveda
கொந்து ஆர் துளவ * மலர் கொண்டு அணிவானே *
நந்தாத பெரும் புகழ் * வேதியர் நாங்கூர் **
செந்தாமரை நீர்த் * திருவெள்ளக்குளத்துள்
எந்தாய் * அடியேன் இடரைக் களையாயே 2

Pasuram 363 · corpus 1310

Pasuram 363

Study resources at Uveda
குன்றால் குளிர் மாரி * தடுத்து உகந்தானே *
நன்று ஆய பெரும் புகழ் * வேதியர் நாங்கூர் **
சென்றார் வணங்கும் * திருவெள்ளக்குளத்துள்
நின்றாய் * நெடியாய் அடியேன் இடர் நீக்கே 3

Pasuram 364 · corpus 1311

Pasuram 364

Study resources at Uveda
கான் ஆர் கரிக் கொம்பு * அது ஒசித்த களிறே *
நானாவகை * நல்லவர் மன்னிய நாங்கூர் **
தேன் ஆர் பொழில் சூழ் * திருவெள்ளக்குளத்துள்
ஆனாய் * அடியேனுக்கு அருள்புரியாயே 4

Pasuram 365 · corpus 1312

Pasuram 365

Study resources at Uveda
வேடு ஆர் * திருவேங்கடம் மேய விளக்கே *
நாடு ஆர் புகழ் * வேதியர் மன்னிய நாங்கூர் **
சேடு ஆர் பொழில் சூழ் * திருவெள்ளக்குளத்தாய் *
பாடா வருவேன் * வினை ஆயின பாற்றே 5

Pasuram 366 · corpus 1313

Pasuram 366

Study resources at Uveda
கல்லால் கடலை * அணை கட்டி உகந்தாய் *
நல்லார் பலர் * வேதியர் மன்னிய நாங்கூர்ச் **
செல்வா * திருவெள்ளக்குளத்து உறைவானே *
எல்லா இடரும் * கெடுமாறு அருளாயே 6

Pasuram 367 · corpus 1314

Pasuram 367

Study resources at Uveda
கோலால் நிரை மேய்த்த * எம் கோவலர் கோவே *
நால் ஆகிய * வேதியர் மன்னிய நாங்கூர் **
சேல் ஆர் வயல் சூழ் * திருவெள்ளக்குளத்துள்
மாலே * என வல் வினை தீர்த்தருளாயே 7

Pasuram 368 · corpus 1315

Pasuram 368

Study resources at Uveda
வாராகம் அது ஆகி * இம் மண்ணை இடந்தாய் *
நாராயணனே! * நல்ல வேதியர் நாங்கூர் *
சீர் ஆர் பொழில் சூழ் * திருவெள்ளக்குளத்துள் *
ஆராஅமுதே * அடியேற்கு அருளாயே 8

Pasuram 369 · corpus 1316

Pasuram 369

Study resources at Uveda
பூ ஆர் திரு மா மகள் * புல்கிய மார்பா *
நா ஆர் புகழ் * வேதியர் மன்னிய நாங்கூர் **
தேவா * திருவெள்ளக்குளத்து உறைவானே *
ஆ ஆ அடியான் * இவன் என்று அருளாயே 9

Pasuram 370 · corpus 1317

Pasuram 370

Study resources at Uveda
நல் அன்பு உடை * வேதியர் மன்னிய நாங்கூர் *
செல்வன் * திருவெள்ளக்குளத்து உறைவானை **
கல்லின் மலி தோள் * கலியன் சொன்ன மாலை *
வல்லர் என வல்லவர் * வானவர் தாமே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.