This page preserves the source-defined decade 4, chapter 8 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
அண்டர் கோன் என் ஆனை என்றும் *
ஆயர் மாதர் கொங்கை புல்கு
செண்டன் என்றும் * நான்மறைகள்
தேடி ஓடும் * செல்வன் என்றும் **
வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை *
மன்னும் மாயன் என்று என்று ஓதி *
பண்டுபோல் அன்று என் மடந்தை *
பார்த்தன்பள்ளி பாடுவாளே 3
கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள் *
கோல் வளையார் தம் முகப்பே *
மல்லை முந்நீர் தட்டு இலங்கை *
கட்டு அழித்த மாயன் என்றும் **
செல்வம் மல்கு மறையோர் நாங்கைத் *
தேவ தேவன் என்று என்று ஓதி *
பல் வளையாள் என் மடந்தை *
பார்த்தன்பள்ளி பாடுவாளே 4
அரக்கர் ஆவி மாள அன்று *
ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற *
குரக்கரசன் என்றும் * கோல
வில்லி என்றும் ** மா மதியை
நெருக்கும் மாடம் நீடு நாங்கை *
நின்மலன் தான் என்று என்று ஓதி *
பரக்கழிந்தாள் என் மடந்தை *
பார்த்தன்பள்ளி பாடுவாளே 5
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த *
நாதன் என்றும் நானிலம் சூழ் *
வேலை அன்ன கோல மேனி *
வண்ணன் என்றும் ** மேல் எழுந்து
சேல் உகளும் வயல் கொள் நாங்கைத் *
தேவ தேவன் என்று என்று ஓதி *
பாலின் நல்ல மென் மொழியாள் *
பார்த்தன்பள்ளி பாடுவாளே 6
நாடி என் தன் உள்ளம் கொண்ட *
நாதன் என்றும் * நான்மறைகள்
தேடி என்றும் காண மாட்டாச் *
செல்வன் என்றும் ** சிறை கொள் வண்டு
சேடு உலவு பொழில் கொள்
நாங்கைத் * தேவ தேவன் என்று என்று ஓதி *
பாடகம் சேர் மெல்லடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே 7
உலகம் ஏத்தும் ஒருவன் என்றும் *
ஒண் சுடரோடு உம்பர் எய்தா *
நிலவும் ஆழிப் படையன் என்றும் *
நேசன் என்றும் ** தென் திசைக்குத்
திலதம் அன்ன மறையோர் நாங்கைத் *
தேவ தேவன் என்று என்று ஓதி *
பலரும் ஏச என் மடந்தை *
பார்த்தன்பள்ளி பாடுவாளே 8
கண்ணன் என்றும் வானவர்கள் *
காதலித்து மலர்கள் தூவும் *
எண்ணன் என்றும் இன்பன் என்றும் *
ஏழ் உலகுக்கு ஆதி என்றும் **
திண்ண மாடம் நீடு நாங்கைத் *
தேவ தேவன் என்று என்று ஓதி *
பண்ணின் அன்ன மென் மொழியாள் *
பார்த்தன்பள்ளி பாடுவாளே 9
பாருள் நல்ல மறையோர் நாங்கைப் *
பார்த்தன்பள்ளிச் செங் கண் மாலை *
வார் கொள் நல்ல முலை மடவாள்
பாடலைத் * தாய் மொழிந்த மாற்றம் **
கூர் கொள் நல்ல வேல் கலியன் *
கூறு தமிழ் பத்தும் வல்லார் *
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள் *
இன்பம் நாளும் எய்துவாரே 10
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.