Corpus pasurams 1328–1337

This page preserves the source-defined decade 4, chapter 9 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 381 · corpus 1328

Pasuram 381

Study resources at Uveda
நும்மைத் தொழுதோம் * நும் தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம் *
இம்மைக்கு இன்பம் பெற்றோம் * எந்தாய் இந்தளூரீரே **
எம்மைக் கடிதாக் கருமம் அருளி * ஆ ஆ என்று இரங்கி *
நம்மை ஒருகால் காட்டி நடந்தால் * நாங்கள் உய்யோமே? 1

Pasuram 382 · corpus 1329

Pasuram 382

Study resources at Uveda
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே * மருவினிய
மைந்தா ** அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே **
நந்தா விளக்கின் சுடரே * நறையூர் நின்ற நம்பீ * என்
எந்தாய் இந்தளூராய் * அடியேற்கு இறையும் இரங்காயே 2

Pasuram 383 · corpus 1330

Pasuram 383

Study resources at Uveda
பேசுகின்றது இதுவே * வையம் ஈர் அடியால் அளந்த *
மூசி வண்டு முரலும் * கண்ணி முடியீர்! ** உம்மைக் காணும்
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து * இங்கு அயர்த்தோம் * அயலாரும்
ஏசுகின்றது இதுவே காணும் * இந்தளூரீரே 3

Pasuram 384 · corpus 1331

Pasuram 384

Study resources at Uveda
ஆசை வழுவாது ஏத்தும் * எமக்கு இங்கு இழுக்காய்த்து * அடியோர்க்கு
தேசம் அறிய * உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு **
காசின் ஒளியில் திகழும் வண்ணம் * காட்டீர் எம் பெருமான் *
வாசி வல்லீர் இந்தளூரீர்! * வாழ்ந்தே போம் நீரே 4

Pasuram 385 · corpus 1332

Pasuram 385

Study resources at Uveda
தீ எம் பெருமான் நீர் எம் பெருமான் * திசையும் இரு நிலனும்
ஆய் * எம் பெருமான் ஆகி நின்றால் * அடியோம் காணோமால் *
தாய் எம் பெருமான் * தந்தை தந்தை ஆவீர் * அடியோமுக்
கே எம் பெருமான் அல்லீரோ நீர்? * இந்தளூரீரே 5

Pasuram 386 · corpus 1333

Pasuram 386

Study resources at Uveda
சொல்லாது ஒழியகில்லேன் * அறிந்த சொல்லில் * நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க * எண்ணியிருந்தீர் அடியேனை **
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் * நமக்கு இவ் உலகத்தில் *
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் * இந்தளூரீரே 6

Pasuram 387 · corpus 1334

Pasuram 387

Study resources at Uveda
மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள * எம்மைப் பணி அறியா
வீட்டீர் * இதனை வேறே சொன்னோம் * இந்தளூரீரே **
காட்டீர் ஆனீர் * நும் தம் அடிக்கள் காட்டில் * உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டர் ஆன * நாங்கள் உய்யோமே? 7

Pasuram 388 · corpus 1335

Pasuram 388

Study resources at Uveda
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் * முழுதும் நிலைநின்ற *
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் * வண்ணம் எண்ணுங்கால் **
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் * புரையும் திருமேனி *
இன்ன வண்ணம் என்று காட்டீர் * இந்தளூரீரே 8

Pasuram 389 · corpus 1336

Pasuram 389

Study resources at Uveda
எந்தை தந்தை தம்மான் என்று என்று * எமர் ஏழ் அளவும் *
வந்து நின்ற தொண்டரோர்க்கே * வாசி வல்லீரால் **
சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர் * சிறிதும் திருமேனி *
இந்த வண்ணம் என்று காட்டீர் * இந்தளூரீரே 9

Pasuram 390 · corpus 1337

Pasuram 390

Study resources at Uveda
ஏர் ஆர் பொழில் சூழ் * இந்தளூரில் எந்தை பெருமானை *
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன் * கலியன் ஒலிசெய்த **
சீர் ஆர் இன் சொல் மாலை * கற்றுத் திரிவார் உலகத்தில் *
ஆர் ஆர் அவரே * அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.