This page preserves the source-defined decade 5, chapter 1 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
அறிவது அறியான் அனைத்து உலகும்
உடையான் * என்னை ஆள் உடையான் *
குறிய மாணி உரு ஆய *
கூத்தன் மன்னி அமரும் இடம் **
நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க *
எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட *
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும் *
புள்ளம்பூதங்குடி தானே 1
மேவா அரக்கர் தென் இலங்கை *
வேந்தன் வீயச் சரம் துரந்து *
மா வாய் பிளந்து மல் அடர்த்து *
மருதம் சாய்த்த மாலது இடம் **
கா ஆர் தெங்கின் பழம் வீழக் *
கயல்கள் பாயக் குருகு இரியும் *
பூ ஆர் கழனி எழில் ஆரும் *
புள்ளம்பூதங்குடி தானே 3
வெற்பால் மாரி பழுது ஆக்கி *
விறல் வாள் அரக்கர் தலைவன் தன் *
வற்பு ஆர் திரள் தோள் ஐந் நான்கும் *
துணித்த வல் வில் இராமன் இடம் **
கற்பு ஆர் புரிசைசெய் குன்றம் *
கவின் ஆர் கூடம் மாளிகைகள் *
பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும் *
புள்ளம்பூதங்குடி தானே 4
மை ஆர் தடங் கண் கருங் கூந்தல் *
ஆய்ச்சி மறைய வைத்த தயிர் *
நெய் ஆர் பாலோடு அமுது செய்த *
நேமி அங் கை மாயன் இடம் **
செய் ஆர் ஆரல் இரை கருதிச் *
செங் கால் நாரை சென்று அணையும் *
பொய்யா நாவின் மறையாளர் *
புள்ளம்பூதங்குடி தானே 5
மின்னின் அன்ன நுண் மருங்குல் *
வேய் ஏய் தடந் தோள் மெல்லியற்கா *
மன்னு சினத்த மழ விடைகள் *
ஏழ் அன்று அடர்த்த மாலது இடம் **
மன்னும் முது நீர் அரவிந்த
மலர்மேல் * வரி வண்டு இசை பாட *
புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும் *
புள்ளம்பூதங்குடி தானே 6
கறை ஆர் நெடு வேல் மற மன்னர்
வீய * விசயன் தேர் கடவி *
இறையான் கையில் நிறையாத *
முண்டம் நிறைத்த எந்தை இடம் *
மறையால் முத்தீ அவை வளர்க்கும் *
மன்னு புகழால் வண்மையால் *
பொறையால் மிக்க அந்தணர் வாழ் *
புள்ளம்பூதங்குடி தானே 8
கற்றா மறித்து காளியன் தன் *
சென்னி நடுங்க நடம்பயின்ற *
பொன் தாமரையாள் தன் கேள்வன் *
புள்ளம்பூதங்குடி தன்மேல் **
கற்றார் பரவும் மங்கையர் கோன் *
கார் ஆர் புயல்கைக் கலிகன்றி *
சொல் தான் ஈர் ஐந்து இவை பாடச் *
சோர நில்லா துயர் தாமே 10
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.