Pasuram 411 · corpus 1358
Pasuram 411
தாம் தம் பெருமை அறியார் * தூது
வேந்தர்க்கு ஆய * வேந்தர் ஊர்போல் *
காந்தள் விரல் * மென் கலை நல் மடவார் *
கூந்தல் கமழும் * கூடலூரே 1
Thirumangai Azhwar · Pasurams 411–420
Corpus pasurams 1358–1367
This page preserves the source-defined decade 5, chapter 2 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 411 · corpus 1358
தாம் தம் பெருமை அறியார் * தூது
வேந்தர்க்கு ஆய * வேந்தர் ஊர்போல் *
காந்தள் விரல் * மென் கலை நல் மடவார் *
கூந்தல் கமழும் * கூடலூரே 1
Pasuram 412 · corpus 1359
செறும் திண் * திமில் ஏறு உடைய * பின்னை
பெறும் தண் கோலம் * பெற்றார் ஊர்போல் **
நறும் தண் தீம் * தேன் உண்ட வண்டு *
குறிஞ்சி பாடும் * கூடலூரே 2
Pasuram 413 · corpus 1360
பிள்ளை உருவாய்த் * தயிர் உண்டு * அடியேன்
உள்ளம் புகுந்த * ஒருவர் ஊர்போல் **
கள்ள நாரை * வயலுள் * கயல்மீன்
கொள்ளை கொள்ளும் * கூடலூரே 3
Pasuram 414 · corpus 1361
கூற்று ஏர் உருவின் * குறள் ஆய் * நிலம் நீர்
ஏற்றான் எந்தை * பெருமான் ஊர்போல் *
சேற்று ஏர் உழவர் * கோதைப் போது ஊண் *
கோல் தேன் முரலும் * கூடலூரே 4
Pasuram 415 · corpus 1362
தொண்டர் பரவச் * சுடர் சென்று அணவ *
அண்டத்து அமரும் * அடிகள் ஊர்போல் **
வண்டல் அலையுள் * கெண்டை மிளிர *
கொண்டல் அதிரும் * கூடலூரே 5
Pasuram 416 · corpus 1363
தக்கன் வேள்வி * தகர்த்த தலைவன் *
துக்கம் துடைத்த * துணைவர் ஊர்போல் **
எக்கல் இடு * நுண் மணல்மேல் * எங்கும்
கொக்கின் பழம் வீழ் * கூடலூரே 6
Pasuram 417 · corpus 1364
கருந் தண் கடலும் * மலையும் உலகும் *
அருந்தும் அடிகள் * அமரும் ஊர்போல **
பெருந் தண் முல்லைப் * பிள்ளை ஓடி *
குருந்தம் தழுவும் * கூடலூரே 7
Pasuram 418 · corpus 1365
கலை வாழ் * பிணையோடு அணையும் * திருநீர்
மலை வாழ் எந்தை * மருவும் ஊர்போல் **
இலை தாழ் தெங்கின் * மேல்நின்று * இளநீர்க்
குலை தாழ் கிடங்கின் * கூடலூரே 8
Pasuram 419 · corpus 1366
பெருகு காதல் அடியேன் * உள்ளம்
உருகப் புகுந்த * ஒருவர் ஊர் போல் **
அருகு கைதை மலர * கெண்டை
குருகு என்று அஞ்சும் * கூடலூரே 9
Pasuram 420 · corpus 1367
காவிப் பெருநீர் வண்ணன் * கண்ணன்
மேவித் திகழும் * கூடலூர்மேல் **
கோவைத் தமிழால் * கலியன் சொன்ன *
பாவைப் பாட பாவம் போமே 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.