Corpus pasurams 1438–1447

This page preserves the source-defined decade 5, chapter 10 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 491 · corpus 1438

Pasuram 491

Study resources at Uveda
தீது அறு நிலத்தொடு எரி காலினொடு * நீர் கெழு
விசும்பும் அவை ஆய் *
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை * அவை
ஆய பெருமான் **
தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு * தட
மார்வர் தகைசேர் *
நாதன் உறைகின்ற நகர் * நந்திபுரவிண்ணகரம்
 நண்ணு மனமே 1

Pasuram 492 · corpus 1439

Pasuram 492

Study resources at Uveda
உய்யும் வகை உண்டு சொன செய்யில் உலகு * ஏழும் ஒழி
யாமை முன நாள் *
மெய்யின் அளவே அமுதுசெய்ய வல * ஐயன் அவன்
மேவும் நகர் தான் **
மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு * மலர்
கிண்டி அதன்மேல் *
நைவளம் நவிற்று பொழில் * நந்திபுரவிண்ணகரம்
 நண்ணு மனமே 2

Pasuram 493 · corpus 1440

Pasuram 493

Study resources at Uveda
உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை ஏழும் * ஒழி
யாமை முன நாள் *
தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த * தட
மார்வர் தகை சேர் **
வம்பு மலர்கின்ற பொழில் பைம் பொன் வரு தும்பி * மணி
கங்குல் வயல் சூழ் *
நம்பன் உறைகின்ற நகர் * நந்திபுரவிண்ணகரம்
 நண்ணு மனமே 3

Pasuram 494 · corpus 1441

Pasuram 494

Study resources at Uveda
பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என *
வந்த அசுரர் *
இறைகள் அவை நெறு நெறு என வெறிய அவர் வயிறு அழல *
நின்ற பெருமான் **
சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல *
அடிகொள் நெடு மா *
நறைசெய் பொழில் மழை தவழும் * நந்திபுரவிண்ணகரம்
நண்ணு மனமே 4

Pasuram 495 · corpus 1442

Pasuram 495

Study resources at Uveda
மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என *
வந்த அசுரர் *
தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக * நொடி
ஆம் அளவு எய்தான் **
வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம் * இவை
அம்கை உடையான் *
நாளும் உறைகின்ற நகர் * நந்திபுரவிண்ணகரம்
நண்ணு மனமே 5

Pasuram 496 · corpus 1443

Pasuram 496

Study resources at Uveda
தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல் * துணை
ஆக முன நாள் *
வெம்பி எரி கானகம் உலாவும் அவர் தாம் * இனிது
மேவும் நகர் தான் **
கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் * எழில்
ஆர் புறவு சேர் *
நம்பி உறைகின்ற நகர் * நந்திபுரவிண்ணகரம்
நண்ணு மனமே 6

Pasuram 497 · corpus 1444

Pasuram 497

Study resources at Uveda
தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல் *
நந்தன் மதலை *
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ *
நின்ற நகர் தான் **
மந்த முழவு ஓசை மழை ஆக எழு கார் * மயில்கள்
ஆடு பொழில் சூழ் *
நந்தி பணிசெய்த நகர் * நந்திபுரவிண்ணகரம்
நண்ணு மனமே 7

Pasuram 498 · corpus 1445

Pasuram 498

Study resources at Uveda
எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று * முனி
யாளர் திரு ஆர் *
பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு *
கூட எழில் ஆர் **
மண்ணில் இதுபோல நகர் இல்லை என * வானவர்கள்
தாம் மலர்கள் தூய் *
நண்ணி உறைகின்ற நகர் * நந்திபுரவிண்ணகரம்
 நண்ணு மனமே 8

Pasuram 499 · corpus 1446

Pasuram 499

Study resources at Uveda
வங்கம் மலி பௌவம் அது மா முகடின் உச்சி புக *
மிக்க பெருநீர் *
அங்கம் அழியார் அவனது ஆணை * தலை சூடும் அடியார்
அறிதியேல் **
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி *
எங்கும் உளதால் *
நங்கள் பெருமான் உறையும் * நந்திபுரவிண்ணகரம்
நண்ணு மனமே 9

Pasuram 500 · corpus 1447

Pasuram 500

Study resources at Uveda
நறை செய் பொழில் மழை தவழும் * நந்திபுரவிண்ணகரம்
நண்ணி உறையும் *
உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம் * அவை அம் கை உடை
யானை ** ஒளி சேர்
கறை வளரும் வேல் வல்ல * கலியன் ஒலி மாலை இவை
ஐந்தும் ஐந்தும் *
முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள் *
முழுது அகலுமே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.