Corpus pasurams 1448–1457

This page preserves the source-defined decade 6, chapter 1 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 501 · corpus 1448

Pasuram 501

Study resources at Uveda
வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு *
பண்டை நம் வினை கெட என்று * அடிமேல்
தொண்டரும் அமரரும் பணிய நின்று * அங்கு
அண்டமொடு அகல் இடம் அளந்தவனே **
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் * அருள் எனக்கு அருளுதியேல் *
வேண்டேன் மனைவாழ்க்கையை * விண்ணகர் மேயவனே 1

Pasuram 502 · corpus 1449

Pasuram 502

Study resources at Uveda
அண்ணல் செய்து அலை கடல் கடைந்து * அதனுள்
கண்ணுதல் நஞ்சு உண்ணக்கண்டவனே *
விண்ணவர் அமுது உண அமுதில் வரும் *
பெண் அமுது உண்ட எம் பெருமானே **
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் * அருள் எனக்கு அருளுதியேல் *
வேண்டேன் மனைவாழ்க்கையை * விண்ணகர் மேயவனே 2

Pasuram 503 · corpus 1450

Pasuram 503

Study resources at Uveda
குழல் நிற வண்ண நின்கூறு கொண்ட *
தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ * நனி மலை சிலை வளைவு செய்து * அங்கு
அழல் நிற அம்பு அதுஆனவனே **
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் * அருள் எனக்கு அருளுதியேல் *
வேண்டேன் மனைவாழ்க்கையை * விண்ணகர் மேயவனே 3

Pasuram 504 · corpus 1451

Pasuram 504

Study resources at Uveda
நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும் *
உலகமும் உயிர்களும் உண்டு ஒருகால் *
கலை தரு குழவியின் உருவினை ஆய் *
அலை கடல் ஆல் இலை வளர்ந்தவனே **
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் * அருள் எனக்கு அருளுதியேல் *
வேண்டேன் மனைவாழ்க்கையை * விண்ணகர் மேயவனே 4

Pasuram 505 · corpus 1452

Pasuram 505

Study resources at Uveda
பார் எழு கடல் எழு மலை எழும் ஆய்ச் *
சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம் *
ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று * அங்கு
ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே **
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் * அருள் எனக்கு அருளுதியேல் *
வேண்டேன் மனைவாழ்க்கையை * விண்ணகர் மேயவனே 5

Pasuram 506 · corpus 1453

Pasuram 506

Study resources at Uveda
கார் கெழு கடல்களும் மலைகளும் ஆய் *
ஏர் கெழும் உலகமும் ஆகி *
முதலார்களும் அறிவு அரும் நிலையினை ஆய்ச் *
சீர் கெழு நான்மறை ஆனவனே **
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் * அருள் எனக்கு அருளுதியேல் *
வேண்டேன் மனைவாழ்க்கையை * விண்ணகர் மேயவனே 6

Pasuram 507 · corpus 1454

Pasuram 507

Study resources at Uveda
உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில் *
இருக்கு உறும் அந்தணர் சந்தியின்வாய் *
பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும் *
இருக்கினில் இன் இசை ஆனவனே **
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் * அருள் எனக்கு அருளுதியேல் *
வேண்டேன் மனைவாழ்க்கையை * விண்ணகர் மேயவனே 7

Pasuram 508 · corpus 1455

Pasuram 508

Study resources at Uveda
காதல் செய்து இளையவர் கலவி தரும் *
வேதனை வினை அது வெருவுதல் ஆம் *
ஆதலின் உனது அடி அணுகுவன் நான் *
போது அலர் நெடுமுடிப் புண்ணியனே **
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் * அருள் எனக்கு அருளுதியேல் *
வேண்டேன் மனைவாழ்க்கையை * விண்ணகர் மேயவனே 8

Pasuram 509 · corpus 1456

Pasuram 509

Study resources at Uveda
சாதலும் பிறத்தலும் என்று இவற்றை
காதல் செய்யாது உன கழல் அடைந்தேன் *
ஓதல் செய் நான்மறை ஆகி * உம்பர்
ஆதல் செய் மூவுரு ஆனவனே **
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் * அருள் எனக்கு அருளுதியேல் *
வேண்டேன் மனைவாழ்க்கையை * விண்ணகர் மேயவனே 9

Pasuram 510 · corpus 1457

Pasuram 510

Study resources at Uveda
பூ மரு பொழில் அணி * விண்ணகர் மேல் *
காமரு சீர்க் * கலிகன்றி சொன்ன **
பா மரு தமிழ் இவை * பாட வல்லார் *
வாமனன் அடி இணை * மருவுவரே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.