Pasuram 481 · corpus 1428
Pasuram 481
கை இலங்கு ஆழி சங்கன் * கரு முகில் திரு நிறத்தன் *
பொய் இலன் மெய்யன் தன் தாள் * அடைவரேல் அடிமை ஆக்கும் *
செய் அலர் கமலம் ஓங்கு * செறி பொழில் தென் திருப்பேர் *
பை அரவு அணையான் நாமம் * பரவி நான் உய்ந்த ஆறே 1
Thirumangai Azhwar · Pasurams 481–490
Corpus pasurams 1428–1437
This page preserves the source-defined decade 5, chapter 9 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 481 · corpus 1428
கை இலங்கு ஆழி சங்கன் * கரு முகில் திரு நிறத்தன் *
பொய் இலன் மெய்யன் தன் தாள் * அடைவரேல் அடிமை ஆக்கும் *
செய் அலர் கமலம் ஓங்கு * செறி பொழில் தென் திருப்பேர் *
பை அரவு அணையான் நாமம் * பரவி நான் உய்ந்த ஆறே 1
Pasuram 482 · corpus 1429
வங்கம் ஆர் கடல்கள் ஏழும் * மலையும் வானகமும் மற்றும் *
அம் கண் மா ஞாலம் எல்லாம் * அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை *
திங்கள் மா முகில் அணவு * செறி பொழில் தென் திருப்பேர் *
எங்கள் மால் இறைவன் நாமம் * ஏத்தி நான் உய்ந்த ஆறே 2
Pasuram 483 · corpus 1430
ஒருவனை உந்திப் பூமேல் * ஓங்குவித்து ஆகம் தன்னால் *
ஒருவனைச் சாபம் நீக்கி * உம்பர் ஆள் என்று விட்டான் *
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த * பெரு நகர் அரவு அணைமேல் *
கரு வரை வண்ணன் தென் பேர் * கருதி நான் உய்ந்த ஆறே 3
Pasuram 484 · corpus 1431
ஊன் அமர் தலை ஒன்று ஏந்தி * உலகு எலாம் திரியும் ஈசன் *
ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன * ஒண் புனலை ஈந்தான் **
தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த * செறி வயல் தென் திருப்பேர் *
வானவர் தலைவன் நாமம் * வாழ்த்தி நான் உய்ந்த ஆறே 4
Pasuram 485 · corpus 1432
வக்கரன் வாய் முன் கீண்ட * மாயனே என்று வானோர்
புக்கு * அரண் தந்தருளாய் என்னப் * பொன் ஆகத்தானை **
நக்கு அரி உருவம் ஆகி * நகம் கிளர்ந்து இடந்து உகந்த *
சக்கரச் செல்வன் தென்பேர்த் * தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே 5
Pasuram 486 · corpus 1433
விலங்கலால் கடல் அடைத்து * விளங்கிழை பொருட்டு * வில்லால்
இலங்கை மா நகர்க்கு இறைவன் * இருபது புயம் துணித்தான் **
நலம் கொள் நான்மறை வல்லார்கள் * ஓத்து ஒலி ஏத்தக் கேட்டு *
மலங்கு பாய் வயல் திருப்பேர் * மருவி நான் வாழ்ந்த ஆறே 6
Pasuram 487 · corpus 1434
வெண்ணெய் தான் அமுதுசெய்ய * வெகுண்டு மத்து ஆய்ச்சி ஓச்சி *
கண்ணி ஆர் குறுங் கயிற்றால் * கட்ட வெட்டென்று இருந்தான் **
திண்ண மா மதிள்கள் சூழ்ந்த * தென் திருப்பேருள் * வேலை
வண்ணனார் நாமம் நாளும் * வாய் மொழிந்து உய்ந்த ஆறே 7
Pasuram 488 · corpus 1435
அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய * ஆய்ப்பாடி தன்னுள் *
கொம்பு அனார் பின்னை கோலம் * கூடுதற்கு ஏறு கொன்றான் **
செம் பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த * தென் திருப்பேருள் * மேவும்
எம்பிரான் நாமம் நாளும் * ஏத்தி நான் உய்ந்த ஆறே 8
Pasuram 489 · corpus 1436
நால் வகை வேதம் ஐந்து வேள்வி * ஆறு அங்கம் வல்லார் *
மேலை வானவரின் மிக்க * வேதியர் ஆதி காலம் **
சேல் உகள் வயல் திருப்பேர்ச் * செங் கண் மாலோடும் வாழ்வார் *
சீல மா தவத்தர் சிந்தை ஆளி * என் சிந்தையானே 9
Pasuram 490 · corpus 1437
வண்டு அறை பொழில் திருப்பேர் * வரி அரவு அணையில் பள்ளி *
கொண்டு உறைகின்ற மாலைக் * கொடி மதிள் மாட மங்கை **
திண் திறல் தோள் கலியன் * செஞ்சொலால் மொழிந்த மாலை *
கொண்டு இவை பாடி ஆடக் * கூடுவர் நீள் விசும்பே 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.