Corpus pasurams 1368–1377

This page preserves the source-defined decade 5, chapter 3 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 421 · corpus 1368

Pasuram 421

Study resources at Uveda
வென்றி மா மழு ஏந்தி முன் மண்மிசை
மன்னரை * மூவெழுகால்
கொன்ற தேவ! நின் குரை கழல் தொழுவது ஓர்
வகை * எனக்கு அருள்புரியே **
மன்றில் மாம் பொழில் நுழைதந்து * மல்லிகை
மௌவலின் போது அலர்த்தி *
தென்றல் மா மணம் கமழ்தர வரு * திரு
வெள்ளறை நின்றானே 1

Pasuram 422 · corpus 1369

Pasuram 422

Study resources at Uveda
வசை இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு
அருளி * முன் பரி முகமாய் *
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே! *
எனக்கு அருள்புரியே **
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய *
மாருதம் வீதியின் வாய் *
திசை எல்லாம் கமழும் பொழில் சூழ் * திரு
வெள்ளறை நின்றானே 2

Pasuram 423 · corpus 1370

Pasuram 423

Study resources at Uveda
வெய்யன் ஆய் உலகு ஏழ் உடன் நலிந்தவன் *
உடலகம் இரு பிளவா *
கையில் நீள் உகிர்ப் படை அது வாய்த்தவனே! *
எனக்கு அருள்புரியே **
மையின் ஆர்தரு வரால் இனம் பாய * வண்
தடத்திடைக் கமலங்கள் *
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் * திரு
வெள்ளறை நின்றானே 3

Pasuram 424 · corpus 1371

Pasuram 424

Study resources at Uveda
வாம் பரி உக மன்னர் தம் உயிர் செக *
ஐவர்கட்கு அரசு அளித்த *
காம்பின் ஆர் திரு வேங்கடப் பொருப்ப! * நின்
காதலை அருள் எனக்கு **
மாம் பொழில் தளிர் கோதிய மடக் குயில் *
வாய் அது துவர்ப்பு எய்த *
தீம் பலங்கனித் தேன் அது நுகர் * திரு
வெள்ளறை நின்றானே 4

Pasuram 425 · corpus 1372

Pasuram 425

Study resources at Uveda
மான வேல் ஒண் கண் மடவரல் * மண் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில் *
ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே! * எனக்கு அருள்புரியே **
கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி * வெண் முறுவல் செய்து அலர்கின்ற *
தேனின் வாய் மலர் முருகு உகுக்கும் * திருவெள்ளறை நின்றானே 5

Pasuram 426 · corpus 1373

Pasuram 426

Study resources at Uveda
பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ *
அமுதினைக் கொடுத்தளிப்பான் *
அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி! * நின்
அடிமையை அருள் எனக்கு **
தங்கு பேடையோடு ஊடிய மதுகரம் *
தையலார் குழல் அணைவான் *
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை * திரு
வெள்ளறை நின்றானே 6

Pasuram 427 · corpus 1374

Pasuram 427

Study resources at Uveda
ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி *
அரக்கன் தன் சிரம் எல்லாம் *
வேறு வேறு உக வில் அது வளைத்தவ
னே! * எனக்கு அருள்புரியே **
மாறு இல் சோதிய மரதகப் பாசடைத் *
தாமரை மலர் வார்ந்த *
தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல் * திரு
வெள்ளறை நின்றானே 7

Pasuram 428 · corpus 1375

Pasuram 428

Study resources at Uveda
முன் இவ் ஏழ் உலகு உணர்வு இன்றி * இருள் மிக
உம்பர்கள் தொழுது ஏத்த *
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவ
னே! * எனக்கு அருள்புரியே **
மன்னு கேதகை சூதகம் என்று இவை *
வனத்திடைச் சுரும்பு இனங்கள் *
தென்ன என்ன வண்டு இன் இசை முரல் * திரு
வெள்ளறை நின்றானே 8

Pasuram 429 · corpus 1376

Pasuram 429

Study resources at Uveda
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று *
அகல் இடம் முழுதினையும் *
பாங்கினால் கொண்ட பரம! நின் பணிந்து எழு
வேன் * எனக்கு அருள்புரியே **
ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி * வண்டு
உழிதர * மா ஏறித்
தீம் குயில் மிழற்றும் படப்பைத் * திரு
வெள்ளறை நின்றானே 9

Pasuram 430 · corpus 1377

Pasuram 430

Study resources at Uveda
மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ் * திரு
வெள்ளறை அதன் மேய *
அஞ்சனம் புரையும் திரு உருவனை *
ஆதியை அமுதத்தை **
நஞ்சு உலாவிய வேல் வலவன் * கலி
கன்றி சொல் ஐஇரண்டும் *
எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார் * இமை
யோர்க்கு அரசு ஆவர்களே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.