Pasuram 431 · corpus 1378
Pasuram 431
உந்திமேல் நான்முகனைப் படைத்தான் * உலகு உண்டவன்
எந்தை பெம்மான் * இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால் **
சந்தினோடு மணியும் கொழிக்கும் * புனல் காவிரி *
அந்திபோலும் நிறத்து ஆர் வயல் சூழ் * தென் அரங்கமே 1
Thirumangai Azhwar · Pasurams 431–440
Corpus pasurams 1378–1387
This page preserves the source-defined decade 5, chapter 4 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 431 · corpus 1378
உந்திமேல் நான்முகனைப் படைத்தான் * உலகு உண்டவன்
எந்தை பெம்மான் * இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால் **
சந்தினோடு மணியும் கொழிக்கும் * புனல் காவிரி *
அந்திபோலும் நிறத்து ஆர் வயல் சூழ் * தென் அரங்கமே 1
Pasuram 432 · corpus 1379
வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன் * மணி நீள் முடி *
பை கொள் நாகத்து அணையான் * பயிலும் இடம் என்பரால் **
தையல் நல்லார் குழல் மாலையும் * மற்று அவர் தட முலை *
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ் * தென் அரங்கமே 2
Pasuram 433 · corpus 1380
பண்டு இவ் வையம் அளப்பான் சென்று * மாவலி கையில் நீர்
கொண்ட * ஆழித் தடக் கைக் * குறளன் இடம் என்பரால் **
வண்டு பாடும் மது வார் * புனல் வந்து இழி காவிரி *
அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து * அழகு ஆர் தென் அரங்கமே 3
Pasuram 434 · corpus 1381
விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன் * நகர் பாழ்பட *
வளைத்த வல் வில் தடக்கை அவனுக்கு * இடம் என்பரால் **
துளைக் கை யானை மருப்பும் அகிலும் * கொணர்ந்து உந்தி * முன்
திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ் * தென் அரங்கமே 4
Pasuram 435 · corpus 1382
வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி காதலன் * வான் புக *
அம்பு தன்னால் முனிந்த * அழகன் இடம் என்பரால் **
உம்பர் கோனும் உலகு ஏழும் * வந்து ஈண்டி வணங்கும் * நல்
செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து * அழகு ஆர் தென் அரங்கமே 5
Pasuram 436 · corpus 1383
கலை உடுத்த அகல் அல்குல் * வன் பேய் மகள் தாய் என *
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் * வாழும் இடம் என்பரால் **
குலை எடுத்த கதலிப் * பொழிலூடும் வந்து உந்தி * முன்
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் * தென் அரங்கமே 6
Pasuram 437 · corpus 1384
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் * சகடமும் காலினால் *
துஞ்ச வென்ற சுடர் ஆழியான் * வாழ் இடம் என்பரால் **
மஞ்சு சேர் மாளிகை * நீடு அகில் புகையும் மறையோர் *
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும் * தென் அரங்கமே 7
Pasuram 438 · corpus 1385
ஏனம் மீன் ஆமையோடு * அரியும் சிறு குறளும் ஆய் *
தானும் ஆய * தரணித் தலைவன் இடம் என்பரால் **
வானும் மண்ணும் நிறையப் * புகுந்து ஈண்டி வணங்கும் * நல்
தேனும் பாலும் கலந்த * அன்னவர் சேர் தென் அரங்கமே 8
Pasuram 439 · corpus 1386
சேயன் என்றும் மிகப் பெரியன் * நுண் நேர்மையன் ஆய * இம்
மாயையை ஆரும் அறியா * வகையான் இடம் என்பரால் **
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து * ஆர் புனல் காவிரி *
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து * அழகு ஆர் தென் அரங்கமே 9
Pasuram 440 · corpus 1387
அல்லி மாதர் அமரும் * திரு மார்வன் அரங்கத்தை *
கல்லின் மன்னு மதிள் * மங்கையர் கோன் கலிகன்றி சொல் **
நல் இசை மாலைகள் * நால் இரண்டும் இரண்டும் உடன் *
வல்லவர் தாம் உலகு ஆண்டு * பின் வான் உலகு ஆள்வரே 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.