Corpus pasurams 1388–1397

This page preserves the source-defined decade 5, chapter 5 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 441 · corpus 1388

Pasuram 441

Study resources at Uveda
வெருவாதாள் வாய்வெருவி * வேங்கடமே
வேங்கடமே என்கின்றாளால் *
மருவாளால் என் குடங்கால் * வாள் நெடுங் கண்
துயில் மறந்தாள் ** வண்டு ஆர் கொண்டல்
உருவாளன் வானவர் தம் உயிராளன் *
ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் * என் மகளைச் செய்தனகள் *
எங்ஙனம் நான் சிந்திக்கேனே? 1

Pasuram 442 · corpus 1389

Pasuram 442

Study resources at Uveda
கலை ஆளா அகல் அல்குல் * கன வளையும்
கை ஆளா என் செய்கேன் நான்? *
விலை ஆளா அடியேனை * வேண்டுதியோ?
வேண்டாயோ? என்னும் ** மெய்ய
மலையாளன் வானவர் தம் தலையாளன் *
மராமரம் ஏழ் எய்த வென்றிச்
சிலையாளன் * என் மகளைச் செய்தனகள் *
எங்ஙனம் நான் சிந்திக்கேனே? 2

Pasuram 443 · corpus 1390

Pasuram 443

Study resources at Uveda
மான் ஆய மென் நோக்கி * வாள் நெடுங் கண்
நீர் மல்கும் வளையும் சோரும் *
தேன் ஆய நறுந் துழாய் அலங்கலின் *
திறம் பேசி உறங்காள் காண்மின் **
கான் ஆயன் கடி மனையில் தயிர் உண்டு
நெய் பருக * நந்தன் பெற்ற
ஆன் ஆயன் * என் மகளைச் செய்தனகள் *
அம்மனைமீர் அறிகிலேனே 3

Pasuram 444 · corpus 1391

Pasuram 444

Study resources at Uveda
தாய் வாயில் சொல் கேளாள் * தன் ஆயத்
தோடு அணையாள் தட மென் கொங்கை
யே * ஆரச் சாந்து அணியாள் எம் பெருமான்
திருவரங்கம் எங்கே? என்னும் **
பேய் மாய முலை உண்டு இவ் உலகு உண்ட
பெரு வயிற்றன் * பேசில் நங்காய் *
மா மாயன் என் மகளைச் செய்தனகள் *
மங்கைமீர் மதிக்கிலேனே 4

Pasuram 445 · corpus 1392

Pasuram 445

Study resources at Uveda
பூண் முலைமேல் சாந்து அணியாள் * பொரு கயல் கண்
மை எழுதாள் பூவை பேணாள் *
ஏண் அறியாள் எத்தனையும் எம் பெருமான்
திருவரங்கம் எங்கே? என்னும் **
நாள் மலராள் நாயகன் * ஆய் நாம் அறிய
ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி *
ஆண் மகன் ஆய் என் மகளைச் செய்தனகள் *
அம்மனைமீர் அறிகிலேனே 5

Pasuram 446 · corpus 1393

Pasuram 446

Study resources at Uveda
தாது ஆடு வன மாலை * தாரானோ?
என்று என்றே தளர்ந்தாள் காண்மின் *
யாதானும் ஒன்று உரைக்கில் * எம் பெருமான்
திருவரங்கம் என்னும் ** பூமேல்
மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன் *
மன்னர்க்கு ஆய் முன்னம் சென்ற
தூதாளன் * என் மகளைச் செய்தனகள் *
எங்ஙனம் நான் சொல்லுகேனே? 6

Pasuram 447 · corpus 1394

Pasuram 447

Study resources at Uveda
வார் ஆளும் இளங் கொங்கை * வண்ணம் வேறு
ஆயினவாறு எண்ணாள் * எண்ணில்
பேராளன் பேர் அல்லால் பேசாள் * இப்
பெண் பெற்றேன் என் செய்கேன் நான்? **
தார் ஆளன் தண் குடந்தை நகர் ஆளன் *
ஐவர்க்கு ஆய் அமரில் உய்த்த
தேர் ஆளன் * என் மகளைச் செய்தனகள் *
எங்ஙனம் நான் செப்புகேனே? 7

Pasuram 448 · corpus 1395

Pasuram 448

Study resources at Uveda
உறவு ஆதும் இலள் என்று என்று * ஒழியாது
பலர் ஏசும் அலர் ஆயிற்றால் *
மறவாதே எப்பொழுதும் * மாயவனே
மாதவனே என்கின்றாளால் **
பிறவாத பேராளன் பெண் ஆளன்
மண் ஆளன் * விண்ணோர் தங்கள்
அறவாளன் * என் மகளைச் செய்தனகள் *
அம்மனைமீர் அறிகிலேனே 8

Pasuram 449 · corpus 1396

Pasuram 449

Study resources at Uveda
பந்தோடு கழல் மருவாள் * பைங் கிளியும்
பால் ஊட்டாள் பாவை பேணாள் *
வந்தானோ திருவரங்கன்? * வாரானோ?
என்று என்றே வளையும் சோரும் **
சந்தோகன் பௌழியன் * ஐந் தழல் ஓம்பு
தைத்திரியன் சாமவேதி *
அந்தோ வந்து என் மகளைச் செய்தனகள் *
அம்மனைமீர் அறிகிலேனே 9

Pasuram 450 · corpus 1397

Pasuram 450

Study resources at Uveda
சேல் உகளும் வயல் புடை சூழ் * திருவரங்கத்து
அம்மானைச் சிந்தைசெய்த *
நீல மலர்க் கண் மடவாள் நிறை அழிவைத் *
தாய் மொழிந்த அதனை ** நேரார்
கால வேல் பரகாலன் * கலிகன்றி
ஒலி மாலை கற்று வல்லார் *
மாலை சேர் வெண் குடைக்கீழ் மன்னவர் ஆய்ப் *
பொன் உலகில் வாழ்வர் தாமே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.