Pasuram 451 · corpus 1398
Pasuram 451
கைம் மான மழ களிற்றைக் * கடல் கிடந்த கருமணியை *
மைம் மான மரதகத்தை * மறை உரைத்த திருமாலை **
எம்மானை எனக்கு என்றும் இனியானைப் * பனி காத்த
அம்மானை * யான் கண்டது * அணி நீர்த் தென் அரங்கத்தே 1
Thirumangai Azhwar · Pasurams 451–460
Corpus pasurams 1398–1407
This page preserves the source-defined decade 5, chapter 6 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 451 · corpus 1398
கைம் மான மழ களிற்றைக் * கடல் கிடந்த கருமணியை *
மைம் மான மரதகத்தை * மறை உரைத்த திருமாலை **
எம்மானை எனக்கு என்றும் இனியானைப் * பனி காத்த
அம்மானை * யான் கண்டது * அணி நீர்த் தென் அரங்கத்தே 1
Pasuram 452 · corpus 1399
பேரானைக் * குறுங்குடி எம் பெருமானை * திருத்தண்கால்
ஊரானைக் * கரம்பனூர் உத்தமனை ** முத்து இலங்கு
கார் ஆர் திண் கடல் ஏழும் * மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டும் *
ஆராது என்று இருந்தானைக் * கண்டது தென் அரங்கத்தே 2
Pasuram 453 · corpus 1400
ஏன் ஆகி உலகு இடந்து * அன்று இரு நிலனும் பெரு விசும்பும் *
தான் ஆய பெருமானை * தன் அடியார் மனத்து என்றும் **
தேன் ஆகி அமுது ஆகித் * திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால் *
ஆன் ஆயன் ஆனானைக் * கண்டது தென் அரங்கத்தே 3
Pasuram 454 · corpus 1401
வளர்ந்தவனைத் தடங் கடலுள் * வலி உருவில் திரி சகடம் *
தளர்ந்து உதிர உதைத்தவனைத் * தரியாது அன்று இரணியனைப்
பிளந்தவனை ** பெரு நிலம் ஈர் அடி நீட்டிப் * பண்டு ஒருநாள்
அளந்தவனை * யான் கண்டது * அணி நீர்த் தென் அரங்கத்தே 4
Pasuram 455 · corpus 1402
நீர் அழல் ஆய் * நெடு நிலன் ஆய் நின்றானை * அன்று அரக்கன்
ஊர் அழலால் உண்டானைக் * கண்டார் பின் காணாமே **
பேர் அழல் ஆய்ப் பெரு விசும்பு ஆய்ப் * பின் மறையோர் மந்திரத்தின் *
ஆர் அழலால் உண்டானைக் * கண்டது தென் அரங்கத்தே 5
Pasuram 456 · corpus 1403
தம் சினத்தைத் தவிர்த்து அடைந்தார் * தவ நெறியை தரியாது *
கஞ்சனைக் கொன்று * அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை **
வெம் சினத்த கொடுந் தொழிலோன் * விசை உருவை அசைவித்த *
அம் சிறைப் புள் பாகனை * யான் கண்டது தென் அரங்கத்தே 6
Pasuram 457 · corpus 1404
சிந்தனையைத் தவநெறியைத் * திருமாலை * பிரியாது
வந்து எனது மனத்து இருந்த * வடமலையை ** வரி வண்டு ஆர்
கொந்து அணைந்த பொழில் கோவல் * உலகு அளப்பான் அடி நிமிர்த்த
அந்தணனை * யான் கண்டது * அணி நீர்த் தென் அரங்கத்தே 7
Pasuram 458 · corpus 1405
துவரித்த உடையவர்க்கும் * தூய்மை இல்லாச் சமணர்க்கும் *
அவர்கட்கு அங்கு அருள் இல்லா * அருளானை ** தன் அடைந்த
எமர்கட்கும் அடியேற்கும் * எம்மாற்கும் எம் அனைக்கும் *
அமரர்க்கும் பிரானாரைக் * கண்டது தென் அரங்கத்தே 8
Pasuram 459 · corpus 1406
பொய் வண்ணம் மனத்து அகற்றிப் * புலன் ஐந்தும் செல வைத்து *
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு * மெய்ந் நின்ற வித்தகனை **
மை வண்ணம் கரு முகில்போல் * திகழ் வண்ணம் மரதகத்தின் *
அவ் வண்ண வண்ணனை * யான் கண்டது தென் அரங்கத்தே 9
Pasuram 460 · corpus 1407
ஆ மருவி நிரை மேய்த்த * அணி அரங்கத்து அம்மானை *
காமரு சீர்க் கலிகன்றி * ஒலிசெய்த மலி புகழ் சேர் **
நா மருவு தமிழ் மாலை * நால் இரண்டோடு இரண்டினையும் *
தாம் மருவி வல்லார்மேல் * சாரா தீவினை தானே 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.