This page preserves the source-defined decade 5, chapter 7 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் *
எண் இல் பல் குணங்களே இயற்ற *
தந்தையும் தாயும் மக்களும் மிக்க
சுற்றமும் * சுற்றி நின்று அகலாப்
பந்தமும் ** பந்தம் அறுப்பது ஓர் மருந்தும்
பான்மையும் * பல் உயிர்க்கு எல்லாம் *
அந்தமும் வாழ்வும் ஆய எம் பெருமான் *
அரங்க மா நகர் அமர்ந்தானே 2
மா இருங் குன்றம் ஒன்று மத்து ஆக *
மாசுணம் அதனொடும் அளவி *
பா இரும் பௌவம் பகடு விண்டு அலறப் *
படு திரை விசும்பிடைப் படர **
சேய் இரு விசும்பும் திங்களும் சுடரும் *
தேவரும் தாம் உடன் திசைப்ப *
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் *
அரங்க மா நகர் அமர்ந்தானே 4
ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய *
அடல் புரை எழில் திகழ் திரள் தோள் *
ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி *
மற்று அவன் அகல் விசும்பு அணைய **
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச *
அறிதுயில் அலை கடல் நடுவே *
ஆயிரம் சுடர் வாய் அரவு அணைத் துயின்றான் *
அரங்க மா நகர் அமர்ந்தானே 6
சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த *
கொடுமையின் கடு விசை அரக்கன் *
எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து *
இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி *
வரி சிலை வளைய அடு சரம் துரந்து *
மறி கடல் நெறிபட * மலையால்
அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான் *
அரங்க மா நகர் அமர்ந்தானே 7
ஊழி ஆய் ஓமத்து உச்சி ஆய் * ஒருகால்
உடைய தேர் ஒருவன் ஆய் * உலகில்
சூழி மால் யானைத் துயர் கெடுத்து * இலங்கை
மலங்க அன்று அடு சரம் துரந்து **
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் *
பகலவன் ஒளி கெட * பகலே
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் *
அரங்க மா நகர் அமர்ந்தானே 8
பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய் * ஒருகால்
பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த
வாயன் ஆய் * மால் ஆய் ஆல் இலை வளர்ந்து
மணி முடி வானவர் தமக்குச்
சேயன் ஆய் ** அடியேர்க்கு அணியன் ஆய் வந்து * என்
சிந்தையுள் வெம் துயர் அறுக்கும் *
ஆயன் ஆய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான் *
அரங்க மா நகர் அமர்ந்தானே 9