Pasuram 511 · corpus 1458
Pasuram 511
பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில் * பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் * ஐம்புலன்கள் கடன் ஆயின * வாயில் ஒட்டி
அறுத்தேன் ** ஆர்வச் செற்றம் அவை தம்மை * மனத்து அகற்றி
வெறுத்தேன் * நின் அடைந்தேன் * திருவிண்ணகர் மேயவனே 1
Thirumangai Azhwar · Pasurams 511–520
Corpus pasurams 1458–1467
This page preserves the source-defined decade 6, chapter 2 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 511 · corpus 1458
பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில் * பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் * ஐம்புலன்கள் கடன் ஆயின * வாயில் ஒட்டி
அறுத்தேன் ** ஆர்வச் செற்றம் அவை தம்மை * மனத்து அகற்றி
வெறுத்தேன் * நின் அடைந்தேன் * திருவிண்ணகர் மேயவனே 1
Pasuram 512 · corpus 1459
மறந்தேன் உன்னை முன்னம் * மறந்த மதி இல் மனத்தால் *
இறந்தேன் எத்தனையும் * அதனால் இடும்பைக் குழியில் **
பிறந்தே எய்த்து ஒழிந்தேன் * பெருமான் திரு மார்பா *
சிறந்தேன் நின் அடிக்கே * திருவிண்ணகர் மேயவனே
Pasuram 513 · corpus 1460
மான் ஏய் நோக்கியர் தம் * வயிற்றுக் குழியில் உழைக்கும் *
ஊன் ஏய் ஆக்கை தன்னை * உதவாமை உணர்ந்து உணர்ந்து **
வானே மா நிலமே * வந்து வந்து என் மனத்து இருந்த
தேனே! * நின் அடைந்தேன் * திருவிண்ணகர் மேயவனே 3
Pasuram 514 · corpus 1461
பிறிந்தேன் பெற்ற மக்கள் * பெண்டிர் என்று இவர் பின் உதவாது
அறிந்தேன் * நீ பணித்த அருள் என்னும் * ஒள் வாள் உருவி
எறிந்தேன் ** ஐம்புலன்கள் இடர் தீர * எறிந்து வந்து
செறிந்தேன் * நின் அடிக்கே * திருவிண்ணகர் மேயவனே 4
Pasuram 515 · corpus 1462
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் * பல்லாண்டு இசைப்ப *
ஆண்டார் வையம் எல்லாம் * அரசு ஆகி முன் ஆண்டவரே **
மாண்டார் என்று வந்தார் * அந்தோ மனைவாழ்க்கை தன்னை
வேண்டேன் * நின் அடைந்தேன் * திருவிண்ணகர் மேயவனே 5
Pasuram 516 · corpus 1463
கல்லா ஐம்புலன்கள் அவை * கண்டவாறு செய்யகில்லேன் *
மல்லா மல் அமருள் மல்லர் மாள * மல் அடர்த்த
மல்லா ** மல்லல் அம் சீர் * மதிள் நீர் இலங்கை அழித்த
வில்லா * நின் அடைந்தேன் * திருவிண்ணகர் மேயவனே 6
Pasuram 517 · corpus 1464
வேறா யான் இரந்தேன் * வெகுளாது மனக்கொள் எந்தாய் *
ஆறா வெம் நரகத்து * அடியேனை இடக் கருதி **
கூறா ஐவர் வந்து குமைக்கக் * குடிவிட்டவரை *
தேறாது உன் அடைந்தேன் * திருவிண்ணகர் மேயவனே 7
Pasuram 518 · corpus 1465
தீ வாய் வல் வினையார் * உடன் நின்று சிறந்தவர்போல் *
மேவா வெம் நரகத்து இட * உற்று விரைந்து வந்தார் **
மூவா வானவர் தம் முதல்வா * மதி கோள் விடுத்த
தேவா * நின் அடைந்தேன் * திருவிண்ணகர் மேயவனே 8
Pasuram 519 · corpus 1466
போது ஆர் தாமரையாள் * புலவி குல வானவர் தம்
கோதா * கோது இல் செங்கோல் * குடை மன்னர் இடை நடந்த
தூதா ** தூ மொழியாய் சுடர்போல் * என் மனத்து இருந்த
வேதா * நின் அடைந்தேன் * திருவிண்ணகர் மேயவனே 9
Pasuram 520 · corpus 1467
தேன் ஆர் பூம் புறவில் * திருவிண்ணகர் மேயவனை *
வான் ஆரும் மதிள் சூழ் * வயல் மங்கையர் கோன் மருவார் **
ஊன் ஆர் வேல் கலியன் * ஒலிசெய் தமிழ் மாலை வல்லார் *
கோன் ஆய் வானவர் தம் * கொடி மா நகர் கூடுவரே 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.