Pasuram 591 · corpus 1538
Pasuram 591
கிடந்த நம்பி குடந்தை மேவிக் * கேழல் ஆய் உலகை
இடந்த நம்பி * எங்கள் நம்பி * எறிஞர் அரண் அழிய **
கடந்த நம்பி கடி ஆர் இலங்கை * உலகை ஈர் அடியால் *
நடந்த நம்பி நாமம் சொல்லில் * நமோ நாராயணமே 1
Thirumangai Azhwar · Pasurams 591–600
Corpus pasurams 1538–1547
This page preserves the source-defined decade 6, chapter 10 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 591 · corpus 1538
கிடந்த நம்பி குடந்தை மேவிக் * கேழல் ஆய் உலகை
இடந்த நம்பி * எங்கள் நம்பி * எறிஞர் அரண் அழிய **
கடந்த நம்பி கடி ஆர் இலங்கை * உலகை ஈர் அடியால் *
நடந்த நம்பி நாமம் சொல்லில் * நமோ நாராயணமே 1
Pasuram 592 · corpus 1539
விடம் தான் உடைய அரவம் வெருவச் * செருவில் முன நாள் * முன்
தடந் தாமரை நீர்ப் பொய்கை புக்கு * மிக்க தாள் ஆளன் **
இடந்தான் வையம் கேழல் ஆகி * உலகை ஈர் அடியால் *
நடந்தானுடைய நாமம் சொல்லில் * நமோ நாராயணமே 2
Pasuram 593 · corpus 1540
பூணாது அனலும் * தறுகண் வேழம் மறுக * வளை மருப்பை
பேணான் வாங்கி * அமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன் **
பாணா வண்டு முரலும் கூந்தல் * ஆய்ச்சி தயிர் வெண்ணெய் *
நாணாது உண்டான் நாமம் சொல்லில் * நமோ நாராயணமே 3
Pasuram 594 · corpus 1541
கல் ஆர் மதிள் சூழ் * கச்சி நகருள் நச்சிப் * பாடகத்துள்
எல்லா உலகும் வணங்க * இருந்த அம்மான் ** இலங்கைக்கோன்
வல் ஆள் ஆகம் * வில்லால் முனிந்த எந்தை * விபீடணற்கு
நல்லானுடைய நாமம் சொல்லில் * நமோ நாராயணமே 4
Pasuram 595 · corpus 1542
குடையா வரையால் * நிரை முன் காத்த பெருமான் * மருவாத
விடை தான் ஏழும் வென்றான் * கோவல் நின்றான் * தென் இலங்கை
அடையா அரக்கர் வீயப் * பொருது மேவி வெம் கூற்றம் *
நடையா உண்ணக் கண்டான் நாமம் * நமோ நாராயணமே 5
Pasuram 596 · corpus 1543
கான எண்கும் குரங்கும் * முசுவும் படையா * அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற * வென்றி அம்மான் ** எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதும் ஆய * திருமால் திருநாமம் *
நானும் சொன்னேன் நமரும் உரைமின் * நமோ நாராயணமே 6
Pasuram 597 · corpus 1544
நின்ற வரையும் கிடந்த கடலும் * திசையும் இரு நிலனும் *
ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி * நின்ற அம்மானார் **
குன்று குடையா எடுத்த * அடிகளுடைய திருநாமம் *
நன்று காண்மின் தொண்டீர் சொன்னேன் * நமோ நாராயணமே 7
Pasuram 598 · corpus 1545
கடுங் கால் மாரி கல்லே பொழிய * அல்லே எமக்கு என்று
படுங்கால் * நீயே சரண் என்று * ஆயர் அஞ்ச அஞ்சாமுன் **
நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி * நிரையைச் சிரமத்தால் *
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் * நமோ நாராயணமே 8
Pasuram 599 · corpus 1546
பொங்கு புணரிக் கடல் சூழ் ஆடை * நில மா மகள் மலர் மா
மங்கை * பிரமன் சிவன் இந்திரன் * வானவர் நாயகர் ஆய **
எங்கள் அடிகள் இமையோர் * தலைவருடைய திருநாமம் *
நங்கள் வினைகள் தவிர உரைமின் * நமோ நாராயணமே 9
Pasuram 600 · corpus 1547
வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று * நறையூர் நெடுமாலை *
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு * நம்பி நாமத்தை *
காவித் தடங் கண் மடவார் கேள்வன் * கலியன் ஒலி மாலை *
மேவிச் சொல்ல வல்லார் பாவம் * நில்லா வீயுமே 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.