Pasuram 581 · corpus 1528
Pasuram 581
பெடை அடர்த்த மட அன்னம் * பிரியாது * மலர்க் கமலம்
மடல் எடுத்து மது நுகரும் * வயல் உடுத்த திருநறையூர் **
முடை அடர்த்த சிரம் ஏந்தி * மூவுலகும் பலி திரிவோன் *
இடர் கெடுத்த திருவாளன் * இணை அடியே அடை நெஞ்சே 1
Thirumangai Azhwar · Pasurams 581–590
Corpus pasurams 1528–1537
This page preserves the source-defined decade 6, chapter 9 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 581 · corpus 1528
பெடை அடர்த்த மட அன்னம் * பிரியாது * மலர்க் கமலம்
மடல் எடுத்து மது நுகரும் * வயல் உடுத்த திருநறையூர் **
முடை அடர்த்த சிரம் ஏந்தி * மூவுலகும் பலி திரிவோன் *
இடர் கெடுத்த திருவாளன் * இணை அடியே அடை நெஞ்சே 1
Pasuram 582 · corpus 1529
கழி ஆரும் கன சங்கம் * கலந்து எங்கும் நிறைந்து ஏறி *
வழி ஆர முத்து ஈன்று * வளம் கொடுக்கும் திருநறையூர் **
பழி ஆரும் விறல் அரக்கன் * பரு முடிகள் அவை சிதற *
அழல் ஆரும் சரம் துரந்தான் * அடி இணையே அடை நெஞ்சே 2
Pasuram 583 · corpus 1530
சுளை கொண்ட பலங்கனிகள் * தேன் பாய * கதலிகளின்
திளை கொண்ட பழம் கெழுமு * திகழ் சோலைத் திருநறையூர் **
வளை கொண்ட வண்ணத்தன் * பின் தோன்றல் * மூவுலகோடு
அளை வெண்ணெய் உண்டான் தன் * அடி இணையே அடை நெஞ்சே 3
Pasuram 584 · corpus 1531
துன்று ஒளித் துகில் படலம் * துன்னி எங்கும் மாளிகைமேல் *
நின்று ஆர வான் மூடும் * நீள் செல்வத் திருநறையூர் **
மன்று ஆரக் குடம் ஆடி * வரை எடுத்து மழை தடுத்த *
குன்று ஆரும் திரள் தோளன் * குரை கழலே அடை நெஞ்சே 4
Pasuram 585 · corpus 1532
அகில் குறடும் சந்தனமும் * அம் பொன்னும் அணி முத்தும் *
மிகக் கொணர்ந்து திரை உந்தும் * வியன் பொன்னித் திருநறையூர் **
பகல் கரந்த சுடர் ஆழிப் * படையான் இவ் உலகு ஏழும் *
புகக் கரந்த திரு வயிற்றன் * பொன் அடியே அடை நெஞ்சே 5
Pasuram 586 · corpus 1533
பொன் முத்தும் அரி உகிரும் * புழைக் கை மா கரிக் கோடும் *
மின்னத் தண் திரை உந்தும் * வியன் பொன்னித் திருநறையூர் **
மின் ஒத்த நுண் மருங்குல் * மெல் இயலை * திரு மார்பில்
மன்னத் தான் வைத்து உகந்தான் * மலர் அடியே அடை நெஞ்சே 6
Pasuram 587 · corpus 1534
சீர் தழைத்த கதிர்ச் செந்நெல் * செங் கமலத்து இடை இடையின் *
பார் தழைத்துக் கரும்பு ஓங்கிப் * பயன் விளைக்கும் திருநறையூர் **
கார் தழைத்த திரு உருவன் * கண்ண பிரான் விண்ணவர் கோன் *
தார் தழைத்த துழாய் முடியன் * தளிர் அடியே அடை நெஞ்சே 7
Pasuram 588 · corpus 1535
குலை ஆர்ந்த பழுக் காயும் * பசுங் காயும் பாளை முத்தும் *
தலை ஆர்ந்த இளங் கமுகின் * தடஞ் சோலைத் திருநறையூர் **
மலை ஆர்ந்த கோலம் சேர் * மணி மாடம் மிக மன்னி *
நிலை ஆர நின்றான் தன் * நீள் கழலே அடை நெஞ்சே 8
Pasuram 589 · corpus 1536
மறை ஆரும் பெரு வேள்விக் * கொழும் புகை போய் வளர்ந்து எங்கும் *
நிறை ஆர வான் மூடும் * நீள் செல்வத் திருநறையூர் **
பிறை ஆரும் சடையானும் * பிரமனும் முன் தொழுது ஏத்த *
இறை ஆகி நின்றான் தன் * இணை அடியே அடை நெஞ்சே 9
Pasuram 590 · corpus 1537
திண் களக மதிள் புடை சூழ் * திருநறையூர் நின்றானை *
வண் களகம் நிலவு எறிக்கும் * வயல் மங்கை நகராளன் **
பண்கள் அகம் பயின்ற சீர்ப் * பாடல் இவை பத்தும் வல்லார் *
விண்கள் அகத்து இமையவர் ஆய் * வீற்றிருந்து வாழ்வாரே 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.