Corpus pasurams 1548–1557

This page preserves the source-defined decade 7, chapter 1 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 601 · corpus 1548

Pasuram 601

Study resources at Uveda
கறவா மட நாகு * தன் கன்று உள்ளினால் போல் *
மறவாது அடியேன் * உன்னையே அழைக்கின்றேன் **
நறவு ஆர் பொழில் சூழ் * நறையூர் நின்ற நம்பி *
பிறவாமை எனைப் பணி * எந்தை பிரானே 1

Pasuram 602 · corpus 1549

Pasuram 602

Study resources at Uveda
வற்றா முதுநீரொடு * மால் வரை ஏழும் *
துற்று ஆக முன் துற்றிய * தொல் புகழோனே **
அற்றேன் அடியேன் * உன்னையே அழைக்கின்றேன் *
பெற்றேன் அருள் தந்திடு * என் எந்தை பிரானே 2

Pasuram 603 · corpus 1550

Pasuram 603

Study resources at Uveda
தாரேன் பிறர்க்கு * உன் அருள் என்னிடை வைத்தாய் *
ஆரேன் அதுவே * பருகிக் களிக்கின்றேன் **
கார் ஏய் கடலே மலையே * திருக்கோட்டி
ஊரே * உகந்தாயை * உகந்து அடியேனே 3

Pasuram 604 · corpus 1551

Pasuram 604

Study resources at Uveda
புள் வாய் பிளந்த * புனிதா என்று அழைக்க *
உள்ளே நின்று * என் உள்ளம் குளிரும் ஒருவா! **
கள்வா! * கடல்மல்லைக் கிடந்த கரும்பே *
வள்ளால் உன்னை * எங்ஙனம் நான் மறக்கேனே? 4

Pasuram 605 · corpus 1552

Pasuram 605

Study resources at Uveda
வில் ஏர் * நுதல் நெடுங் கண்ணியும் நீயும் *
கல் ஆர் கடுங் கானம் * திரிந்த களிறே *
நல்லாய் நர நாரணனே! * எங்கள் நம்பி *
சொல்லாய் உன்னை * யான் வணங்கித் தொழும் ஆறே 5

Pasuram 606 · corpus 1553

Pasuram 606

Study resources at Uveda
பனி ஏய் பரங் குன்றின் * பவளத் திரளே *
முனியே * திருமூழிக்களத்து விளக்கே **
இனியாய் தொண்டரோம் * பருகும் இன் அமுது ஆய
கனியே * உன்னைக் கண்டுகொண்டு * உய்ந்தொழிந்தேனே 6

Pasuram 607 · corpus 1554

Pasuram 607

Study resources at Uveda
கதியேல் இல்லை * நின் அருள் அல்லது எனக்கு *
நிதியே! * திருநீர்மலை நித்திலத் தொத்தே *
பதியே பரவித் தொழும் * தொண்டர் தமக்குக்
கதியே * உன்னைக் கண்டுகொண்டு * உய்ந்தொழிந்தேனே 7

Pasuram 608 · corpus 1555

Pasuram 608

Study resources at Uveda
அத்தா அரியே என்று * உன்னை அழைக்க *
பித்தா என்று பேசுகின்றார் * பிறர் என்னை **
முத்தே மணி மாணிக்கமே * முளைக்கின்ற
வித்தே * உன்னை எங்ஙனம் நான் விடுகேனே 8

Pasuram 609 · corpus 1556

Pasuram 609

Study resources at Uveda
தூயாய் சுடர் மா மதிபோல் * உயிர்க்கு எல்லாம் *
தாய் ஆய் அளிக்கின்ற * தண் தாமரைக் கண்ணா! **
ஆயா அலை நீர் உலகு ஏழும் * முன் உண்ட
வாயா * உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே 9

Pasuram 610 · corpus 1557

Pasuram 610

Study resources at Uveda
வண்டு ஆர் பொழில் சூழ் * நறையூர் நம்பிக்கு * என்றும்
தொண்டு ஆய் * கலியன் ஒலிசெய் தமிழ் மாலை *
தொண்டீர் இவை பாடுமின் * பாடி நின்று ஆட *
உண்டே விசும்பு * உம் தமக்கு இல்லை துயரே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.