Corpus pasurams 1468–1477

This page preserves the source-defined decade 6, chapter 3 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 521 · corpus 1468

Pasuram 521

Study resources at Uveda
துறப்பேன் அல்லேன் * இன்பம் துறவாது * நின் உருவம்
மறப்பேன் அல்லேன் * என்றும் மறவாது ** யான் உலகில்
பிறப்பேன் ஆக எண்ணேன் * பிறவாமை பெற்றது * நின்
திறத்தேன் ஆதன்மையால் * திருவிண்ணகரானே 1

Pasuram 522 · corpus 1469

Pasuram 522

Study resources at Uveda
துறந்தேன் ஆர்வச் செற்றச் * சுற்றம் துறந்தமையால் *
சிறந்தேன் நின் அடிக்கே * அடிமை திருமாலே **
அறம் தான் ஆய்த் திரிவாய் * உன்னை என் மனத்து அகத்தே *
திறம்பாமல் கொண்டேன் * திருவிண்ணகரானே 2

Pasuram 523 · corpus 1470

Pasuram 523

Study resources at Uveda
மான் ஏய் நோக்கு நல்லார் * மதிபோல் முகத்து உலவும் *
ஊன் ஏய் கண் வாளிக்கு * உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன் **
கோனே குறுங்குடியுள் குழகா * திருநறையூர்த்
தேனே * வரு புனல் சூழ் * திருவிண்ணகரானே 3

Pasuram 524 · corpus 1471

Pasuram 524

Study resources at Uveda
சாந்து ஏந்து மென் முலையார் * தடந் தோள் புணர் இன்ப வெள்ளத்து
ஆழ்ந்தேன் * அரு நரகத்து அழுந்தும் * பயன் படைத்தேன் **
போந்தேன் புண்ணியனே * உன்னை எய்தி என் தீவினைகள்
தீர்ந்தேன் * நின் அடைந்தேன் * திருவிண்ணகரானே 4

Pasuram 525 · corpus 1472

Pasuram 525

Study resources at Uveda
மற்று ஓர் தெய்வம் எண்ணேன் * உன்னை என் மனத்து வைத்துப்
பெற்றேன் * பெற்றதுவும் பிறவாமை எம் பெருமான் **
வற்றா நீள் கடல் சூழ் * இலங்கை இராவணனைச் *
செற்றாய் கொற்றவனே * திருவிண்ணகரானே 5

Pasuram 526 · corpus 1473

Pasuram 526

Study resources at Uveda
மை ஒண் கருங் கடலும் * நிலனும் மணி வரையும் *
செய்ய சுடர் இரண்டும் * இவை ஆய நின்னை ** நெஞ்சில்
உய்யும் வகை உணர்ந்தேன் * உண்மையால் இனி * யாதும் மற்று ஓர்
தெய்வம் பிறிது அறியேன் * திருவிண்ணகரானே 6

Pasuram 527 · corpus 1474

Pasuram 527

Study resources at Uveda
வேறே கூறுவது உண்டு * அடியேன் விரித்து உரைக்கும்
ஆறே * நீ பணியாது அடை * நின் திருமனத்து **
கூறேன் நெஞ்சு தன்னால் * குணம் கொண்டு * மற்று ஓர் தெய்வம்
தேறேன் உன்னை அல்லால் * திருவிண்ணகரானே 7

Pasuram 528 · corpus 1475

Pasuram 528

Study resources at Uveda
முளிந்தீந்த வெம் கடத்து * மூரிப் பெருங் களிற்றால் *
விளிந்தீந்த மா மரம்போல் * வீழ்ந்தாரை நினையாதே **
அளிந்து ஓர்ந்த சிந்தை * நின்பால் அடியேற்கு * வான் உலகம்
தெளிந்தே என்று எய்துவது? * திருவிண்ணகரானே 8

Pasuram 529 · corpus 1476

Pasuram 529

Study resources at Uveda
சொல்லாய் திரு மார்வா * உனக்கு ஆகித் தொண்டு பட்ட
நல்லேனை * வினைகள் நலியாமை நம்பு ** நம்பீ
மல்லா குடம் ஆடீ * மதுசூதனே * உலகில்
செல்லா நல் இசையாய் * திருவிண்ணகரானே 9

Pasuram 530 · corpus 1477

Pasuram 530

Study resources at Uveda
தார் ஆர் மலர்க் கமலத் * தடம் சூழ்ந்த தண் புறவில் *
சீர் ஆர் நெடு மறுகின் * திருவிண்ணகரானை **
கார் ஆர் புயல் தடக் கைக் * கலியன் ஒலி மாலை *
ஆர் ஆர் இவை வல்லார் * அவர்க்கு அல்லல் நில்லாவே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.