Pasuram 531 · corpus 1478
Pasuram 531
கண்ணும் சுழன்று பீளையோடு * ஈளை வந்து ஏங்கினால் *
பண் இன் மொழியார் * பைய நடமின் என்னாதமுன் **
விண்ணும் மலையும் * வேதமும் வேள்வியும் ஆயினான் *
நண்ணு நறையூர் * நாம் தொழுதும் எழு நெஞ்சமே 1
Thirumangai Azhwar · Pasurams 531–540
Corpus pasurams 1478–1487
This page preserves the source-defined decade 6, chapter 4 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 531 · corpus 1478
கண்ணும் சுழன்று பீளையோடு * ஈளை வந்து ஏங்கினால் *
பண் இன் மொழியார் * பைய நடமின் என்னாதமுன் **
விண்ணும் மலையும் * வேதமும் வேள்வியும் ஆயினான் *
நண்ணு நறையூர் * நாம் தொழுதும் எழு நெஞ்சமே 1
Pasuram 532 · corpus 1479
கொங்கு உண் குழலார் * கூடி இருந்து சிரித்து * நீர்
இங்கு என் இருமி * எம்பால் வந்தது? என்று இகழாதமுன் **
திங்கள் எரி கால் * செஞ் சுடர் ஆயவன் தேசு உடை *
நங்கள் நறையூர் * நாம் தொழுதும் எழு நெஞ்சமே 2
Pasuram 533 · corpus 1480
கொங்கு ஆர் குழலார் * கூடி இருந்து சிரித்து * எம்மை
எம் கோலம் ஐயா * என் இனிக் காண்பது? என்னாதமுன் **
செங்கோல் வலவன் * தாள் பணிந்து ஏத்தித் திகழும் ஊர் *
நம் கோன் நறையூர் * நாம் தொழுதும் எழு நெஞ்சமே 3
Pasuram 534 · corpus 1481
கொம்பும் அரவமும் * வல்லியும் வென்ற நுண் ஏர் இடை *
வம்பு உண் குழலார் * வாசல் அடைத்து இகழாதமுன் **
செம் பொன் கமுகு இனம் தான் * கனியும் செழும் சோலை சூழ் *
நம்பன் நறையூர் * நாம் தொழுதும் எழு நெஞ்சமே 4
Pasuram 535 · corpus 1482
விலங்கும் கயலும் வேலும் * ஒண் காவியும் வென்ற கண் *
சலம் கொண்ட சொல்லார் * தாங்கள் சிரித்து இகழாத முன் **
மலங்கும் வராலும் * வாளையும் பாய் வயல் சூழ்தரு *
நலம் கொள் நறையூர் * நாம் தொழுதும் எழு நெஞ்சமே 5
Pasuram 536 · corpus 1483
மின் நேர் இடையார் * வேட்கையை மாற்றியிருந்து *
என் நீர் இருமி * எம்பால் வந்தது? என்று இகழாதமுன் **
தொல் நீர் இலங்கை மலங்க * விலங்கு எரி ஊட்டினான் *
நல் நீர் நறையூர் * நாம் தொழுதும் எழு நெஞ்சமே 6
Pasuram 537 · corpus 1484
வில் ஏர் நுதலார் * வேட்கையை மாற்றிச் சிரித்து * இவன்
பொல்லான் திரைந்தான் என்னும் * புறன் உரை கேட்பதன்முன் **
சொல் ஆர் மறை நான்கு ஓதி * உலகில் நிலாயவர் *
நல்லார் நறையூர் * நாம் தொழுதும் எழு நெஞ்சமே 7
Pasuram 538 · corpus 1485
வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் * மதனன் என்றார் தம்மை *
கேள்மின்கள் ஈளையோடு * ஏங்கு கிழவன் என்னாதமுன் **
வேள்வும் விழவும் * வீதியில் என்றும் அறாத ஊர் *
நாளும் நறையூர் * நாம் தொழுதும் எழு நெஞ்சமே 8
Pasuram 539 · corpus 1486
கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் * காதன்மை விட்டிட *
குனி சேர்ந்து உடலம் * கோலில் தளர்ந்து இளையாதமுன் **
பனி சேர் விசும்பில் * பால்மதி கோள் விடுத்தான் இடம் *
நனி சேர் நறையூர் * நாம் தொழுதும் எழு நெஞ்சமே 9
Pasuram 540 · corpus 1487
பிறை சேர் நுதலார் * பேணுதல் நம்மை இலாதமுன் *
நறை சேர் பொழில் சூழ் * நறையூர் தொழு நெஞ்சமே என்ற **
கறை ஆர் நெடு வேல் மங்கையர் கோன் * கலிகன்றி சொல் *
மறவாது உரைப்பவர் * வானவர்க்கு இன் அரசு ஆவரே 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.