Corpus pasurams 1488–1497

This page preserves the source-defined decade 6, chapter 5 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 541 · corpus 1488

Pasuram 541

Study resources at Uveda
கலங்க முந்நீர் கடைந்து * அமுதம் கொண்டு * இமையோர்
துலங்கல் தீர * நல்கு சோதிச் சுடர் ஆய **
வலங்கை ஆழி இடங்கைச் சங்கம் * உடையான் ஊர் *
நலம் கொள் வாய்மை * அந்தணர் வாழும் நறையூரே 1

Pasuram 542 · corpus 1489

Pasuram 542

Study resources at Uveda
முனை ஆர் சீயம் ஆகி * அவுணன் முரண் மார்வம் *
புனை வாள் உகிரால் * போழ்பட ஈர்ந்த புனிதன் ஊர் **
சினை ஆர் தேமாஞ் செந் தளிர் கோதிக் * குயில் கூவும்
நனை ஆர் சோலை சூழ்ந்து * அழகு ஆய நறையூரே 2

Pasuram 543 · corpus 1490

Pasuram 543

Study resources at Uveda
ஆனை புரவி தேரொடு காலாள் * அணிகொண்ட *
சேனைத் தொகையைச் சாடி * இலங்கை செற்றான் ஊர் **
மீனைத் தழுவி வீழ்ந்து எழும் * மள்ளர்க்கு அலமந்து *
நானப் புதலில் * ஆமை ஒளிக்கும் நறையூரே 3

Pasuram 544 · corpus 1491

Pasuram 544

Study resources at Uveda
உறி ஆர் வெண்ணெய் உண்டு * உரலோடும் கட்டுண்டு *
வெறி ஆர் கூந்தல் * பின்னை பொருட்டு ஆன் வென்றான் ஊர் **
பொறி ஆர் மஞ்ஞை * பூம் பொழில்தோறும் நடம் ஆட *
நறு நாள்மலர்மேல் * வண்டு இசை பாடும் நறையூரே 4

Pasuram 545 · corpus 1492

Pasuram 545

Study resources at Uveda
விடை ஏழ் வென்று * மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பன் ஆய் *
நடையால் நின்ற * மருதம் சாய்த்த நாதன் ஊர் **
பெடையோடு அன்னம் * பெய்வளையார் தம் பின் சென்று *
நடையோடு இயலி * நாணி ஒளிக்கும் நறையூரே 5

Pasuram 546 · corpus 1493

Pasuram 546

Study resources at Uveda
பகு வாய் வன் பேய் * கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு *
புகு வாய் நின்ற * போதகம் வீழப் பொருதான் ஊர் **
நெகு வாய் நெய்தல் * பூ மது மாந்திக் கமலத்தின் *
நகு வாய் மலர்மேல் * அன்னம் உறங்கும் நறையூரே 6

Pasuram 547 · corpus 1494

Pasuram 547

Study resources at Uveda
முந்து நூலும் முப்புரி நூலும் * முன் ஈந்த *
அந்தணாளன் பிள்ளையை * அஞ்ஞான்று அளித்தான் ஊர் **
பொந்தில் வாழும் பிள்ளைக்கு * ஆகிப் புள் ஓடி *
நந்து வாரும் * பைம் புனல் வாவி நறையூரே 7

Pasuram 548 · corpus 1495

Pasuram 548

Study resources at Uveda
வெள்ளைப் புரவித் தேர் விசயற்கு ஆய் * விறல் வியூகம்
விள்ள * சிந்துக்கோன் விழ * ஊர்ந்த விமலன் ஊர் **
கொள்ளைக் கொழு மீன் * உண் குருகு ஓடி பெடையோடும் *
நள்ளக் கமலத் * தேறல் உகுக்கும் நறையூரே 8

Pasuram 549 · corpus 1496

Pasuram 549

Study resources at Uveda
பாரை ஊரும் பாரம் தீரப் * பார்த்தன் தன்
தேரை ஊரும் * தேவதேவன் சேரும் ஊர் **
தாரை ஊரும் * தண் தளிர் வேலி புடை சூழ *
நாரை ஊரும் * நல் வயல் சூழ்ந்த * நறையூரே 9

Pasuram 550 · corpus 1497

Pasuram 550

Study resources at Uveda
தாமத் துளப * நீள் முடி மாயன் தான் நின்ற *
நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த * நறையூர்மேல் **
காமக் கதிர் வேல் வல்லான் * கலியன் ஒலி மாலை *
சேமத் துணை ஆம் * செப்பும் அவர்க்கு திருமாலே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.