Corpus pasurams 1498–1507

This page preserves the source-defined decade 6, chapter 6 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 551 · corpus 1498

Pasuram 551

Study resources at Uveda
அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் *
அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன் *
கொம்பு அமரும் வட மரத்தின் இலைமேல் * பள்ளி
கூடினான் திருவடியே கூடகிற்பீர் **
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு *
மணி வண்டு வகுளத்தின் மலர்மேல் வைகு *
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் *
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே 1

Pasuram 552 · corpus 1499

Pasuram 552

Study resources at Uveda
கொழுங் கயல் ஆய் நெடு வெள்ளம் கொண்ட காலம் *
குல வரையின் மீது ஓடி அண்டத்து அப்பால் *
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை *
இணை அடிக்கீழ் இனிது இருப்பீர் இன வண்டு ஆலும் **
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரைமேல் சிந்தி *
உலகு எல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள *
செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த *
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே 2

Pasuram 553 · corpus 1500

Pasuram 553

Study resources at Uveda
பவ்வ நீர் உடை ஆடை ஆகச் சுற்றி *
பார் அகலம் திருவடியாப் பவனம் மெய்யா *
செவ்வி மாதிரம் எட்டும் தோளா * அண்டம்
திரு முடியா நின்றான்பால் செல்லகிற்பீர் **
கவ்வை மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற *
கழல் மன்னர் மணி முடிமேல் காகம் ஏற *
தெய்வ வாள் வலம் கொண்ட சோழன் சேர்ந்த *
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே 3

Pasuram 554 · corpus 1501

Pasuram 554

Study resources at Uveda
பைங் கண் ஆள் அரி உரு ஆய் வெருவ நோக்கிப் *
பரு வரைத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி *
அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம் *
அம் குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர் **
வெம் கண் மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற *
விறல் மன்னர் திறல் அழிய வெம் மா உய்த்த *
செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில் *
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே 4

Pasuram 555 · corpus 1502

Pasuram 555

Study resources at Uveda
அன்று உலகம் மூன்றினையும் அளந்து * வேறு ஓர்
அரி உரு ஆய் இரணியனது ஆகம் கீண்டு *
வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு *
விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து **
பொன் சிதறி மணி கொணர்ந்து கரைமேல் சிந்திப் *
புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன் *
தென் தமிழன் வட புலக்கோன் சோழன் சேர்ந்த *
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே 5

Pasuram 556 · corpus 1503

Pasuram 556

Study resources at Uveda
தன்னாலே தன் உருவம் பயந்த தான் ஆய் *
தயங்கு ஒளி சேர் மூவுலகும் தான் ஆய் வான் ஆய் *
தன்னாலே தன் உருவின் மூர்த்தி மூன்று ஆய் *
தான் ஆயன் ஆயினான் சரண் என்று உய்வீர் **
மின் ஆடு வேல் ஏந்து விளைந்த வேளை *
விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட *
தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த *
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே 6

Pasuram 557 · corpus 1504

Pasuram 557

Study resources at Uveda
முலைத் தடத்த நஞ்சு உண்டு துஞ்சப் பேய்ச்சி *
முது துவரைக் குலபதியாக் காலிப்பின்னே *
இலைத் தடத்த குழல் ஊதி ஆயர் மாதர் *
இன வளை கொண்டான் அடிக்கீழ் எய்தகிற்பீர் **
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய *
வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னிநாடன் *
சிலைத் தடக் கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில் *
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே 7

Pasuram 558 · corpus 1505

Pasuram 558

Study resources at Uveda
முருக்கு இலங்கு கனித் துவர் வாய்ப் பின்னை கேள்வன் *
மன் எல்லாம் முன் அவியச் சென்று * வென்றிச்
செருக்களத்துத் திறல் அழியச் செற்ற வேந்தன் *
சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர் **
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு *
எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட *
திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் *
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே 8

Pasuram 559 · corpus 1506

Pasuram 559

Study resources at Uveda
தார் ஆளன் தண் அரங்க ஆளன் * பூமேல்
தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற
பேர் ஆளன் * ஆயிரம் பேர் உடைய ஆளன் *
பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர் **
பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற *
படை மன்னர் உடல் துணியப் பரிமா உய்த்த *
தேர் ஆளன் கோச் சோழன் சேர்ந்த கோயில் *
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே 9

Pasuram 560 · corpus 1507

Pasuram 560

Study resources at Uveda
செம் மொழி வாய் நால் வேத வாணர் வாழும் *
திருநறையூர் மணிமாடச் செங் கண் மாலை *
பொய்ம் மொழி ஒன்று இல்லாத மெய்ம்மையாளன் *
புல மங்கைக் குல வேந்தன் புலமை ஆர்ந்த **
அம் மொழி வாய்க் கலிகன்றி இன்பப் பாடல் *
பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி *
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் *
விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெருந் தக்கோரே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.