Corpus pasurams 1518–1527

This page preserves the source-defined decade 6, chapter 8 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 571 · corpus 1518

Pasuram 571

Study resources at Uveda
மான் கொண்ட தோல் * மார்வின் மாணி ஆய் * மாவலி மண்
தான் கொண்டு * தாளால் அளந்த பெருமானை **
தேன் கொண்ட சாரல் * திருவேங்கடத்தானை *
நான் சென்று நாடி * நறையூரில் கண்டேனே 1

Pasuram 572 · corpus 1519

Pasuram 572

Study resources at Uveda
முந்நீரை முன் நாள் * கடைந்தானை * மூழ்த்த நாள்
அந் நீரை மீன் ஆய் * அமைத்த பெருமானை *
தென் ஆலி மேய திருமாலை எம்மானை *
நல் நீர் சூழ் * நறையூரில் கண்டேனே 2

Pasuram 573 · corpus 1520

Pasuram 573

Study resources at Uveda
தூ வாய புள் ஊர்ந்து வந்து * துறை வேழம் *
மூவாமை நல்கி * முதலை துணித்தானை **
தேவாதிதேவனைச் * செங் கமலக் கண்ணானை *
நாவாய் உளானை * நறையூரில் கண்டேனே 3

Pasuram 574 · corpus 1521

Pasuram 574

Study resources at Uveda
ஓடா அரி ஆய் * இரணியனை ஊன் இடந்த *
சேடு ஆர் பொழில் சூழ் * திருநீர்மலையானை **
வாடா மலர்த் துழாய் * மாலை முடியானை *
நாள்தோறும் நாடி * நறையூரில் கண்டேனே 4

Pasuram 575 · corpus 1522

Pasuram 575

Study resources at Uveda
கல் ஆர் மதிள் சூழ் * கதி இலங்கைக் கார் அரக்கன் *
வல் ஆகம் கீள * வரி வெம் சரம் துரந்த
வில்லானை ** செல்வ விபீடணற்கு * வேறாக *
நல்லானை நாடி * நறையூரில் கண்டேனே 5

Pasuram 576 · corpus 1523

Pasuram 576

Study resources at Uveda
உம்பர் உலகோடு * உயிர் எல்லாம் உந்தியில் *
வம்பு மலர்மேல் * படைத்தானை மாயோனை **
அம்பு அன்ன கண்ணாள் * அசோதை தன் சிங்கத்தை *
நம்பனை நாடி * நறையூரில் கண்டேனே 6

Pasuram 577 · corpus 1524

Pasuram 577

Study resources at Uveda
கட்டு ஏறு நீள் சோலைக் * காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை * மெய்யம் அமர்ந்த பெருமானை **
மட்டு ஏறு கற்பகத்தை * மாதர்க்கு ஆய் * வண் துவரை
நட்டானை நாடி * நறையூரில் கண்டேனே 7

Pasuram 578 · corpus 1525

Pasuram 578

Study resources at Uveda
மண்ணின் மீ பாரம் கெடுப்பான் * மற மன்னர் *
பண்ணின்மேல் வந்த * படை எல்லாம் பாரதத்து **
விண்ணின் மீது ஏற * விசயன் தேர் ஊர்ந்தானை *
நண்ணி நான் நாடி * நறையூரில் கண்டேனே 8

Pasuram 579 · corpus 1526

Pasuram 579

Study resources at Uveda
பொங்கு ஏறு நீள் சோதிப் * பொன் ஆழி தன்னோடும் *
சங்கு ஏறு கோலத் * தடக் கைப் பெருமானை **
கொங்கு ஏறு சோலைக் * குடந்தைக் கிடந்தானை *
நம் கோனை நாடி * நறையூரில் கண்டேனே 9

Pasuram 580 · corpus 1527

Pasuram 580

Study resources at Uveda
மன்னு மதுரை * வசுதேவர் வாழ் முதலை *
நல் நறையூர் * நின்ற நம்பியை ** வம்பு அவிழ் தார்க்
கல் நவிலும் தோளான் * கலியன் ஒலி வல்லார் *
பொன் உலகில் வானவர்க்குப் * புத்தேளிர் ஆகுவரே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.