Corpus pasurams 1558–1567

This page preserves the source-defined decade 7, chapter 2 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 611 · corpus 1558

Pasuram 611

Study resources at Uveda
புள் ஆய் ஏனமும் ஆய்ப் புகுந்து * என்னை உள்ளம் கொண்ட *
கள்வா என்றலும் * என் கண்கள் நீர்கள் சோர்தருமால் **
உள்ளே நின்று உருகி * நெஞ்சம் உன்னை உள்ளியக்கால் *
நள்ளேன் உன்னை அல்லால் * நறையூர் நின்ற நம்பீயோ 1

Pasuram 612 · corpus 1559

Pasuram 612

Study resources at Uveda
ஓடா ஆள் அரியின் * உரு ஆய் மருவி * என் தன்
மாடே வந்து * அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா **
பாடேன் தொண்டர் தம்மைக் * கவிதைப் பனுவல் கொண்டு *
நாடேன் உன்னை அல்லால் * நறையூர் நின்ற நம்பீயோ 2

Pasuram 613 · corpus 1560

Pasuram 613

Study resources at Uveda
எம்மானும் எம் அனையும் * என்னைப் பெற்று ஒழிந்ததற்பின் *
அம்மானும் அம்மனையும் * அடியேனுக்கு ஆகி நின்ற **
நல் மான ஒண் சுடரே * நறையூர் நின்ற நம்பீ * உன்
மைம் மான வண்ணம் அல்லால் * மகிழ்ந்து ஏத்தமாட்டேனே 3

Pasuram 614 · corpus 1561

Pasuram 614

Study resources at Uveda
சிறியாய் ஓர் பிள்ளையும் ஆய் * உலகு உண்டு ஓர் ஆல் இலைமேல்
உறைவாய் * என் நெஞ்சின் உள்ளே * உறைவாய் உறைந்தது தான் **
அறியாது இருந்தறியேன் * அடியேன் அணி வண்டு கிண்டும் *
நறை வாரும் பொழில் சூழ் * நறையூர் நின்ற நம்பீயோ 4

Pasuram 615 · corpus 1562

Pasuram 615

Study resources at Uveda
நீண்டாயை வானவர்கள் * நினைந்து ஏத்திக் காண்பு அரிதால் *
ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு * நான் அடிமை
பூண்டேன் ** என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன் *
நாண் தான் உனக்கு ஒழிந்தேன் * நறையூர் நின்ற நம்பீயோ 5

Pasuram 616 · corpus 1563

Pasuram 616

Study resources at Uveda
எம் தாதை தாதை அப்பால் * எழுவர் பழ அடிமை
வந்தார் * என் நெஞ்சின் உள்ளே * வந்தாயைப் போகல் ஒட்டேன் **
அந்தோ! என் ஆர் உயிரே * அரசே அருள் எனக்கு *
நந்தாமல் தந்த எந்தாய்! * நறையூர் நின்ற நம்பீயோ 6

Pasuram 617 · corpus 1564

Pasuram 617

Study resources at Uveda
மன் அஞ்ச ஆயிரம் தோள் * மழுவில் துணித்த மைந்தா *
என் நெஞ்சத்துள் இருந்து * இங்கு இனிப் போய்ப் பிறர் ஒருவர் **
வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் * வளைத்து வைத்தேன் *
நல் நெஞ்ச அன்னம் மன்னும் * நறையூர் நின்ற நம்பீயோ 7

Pasuram 618 · corpus 1565

Pasuram 618

Study resources at Uveda
எப்போதும் பொன் மலர் இட்டு * இமையோர் தொழுது * தங்கள்
கைப்போது கொண்டு இறைஞ்சிக் * கழல்மேல் வணங்க நின்றாய் **
இப்போது என் நெஞ்சின் உள்ளே * புகுந்தாயைப் போகல் ஒட்டேன் *
நல் போது வண்டு கிண்டும் * நறையூர் நின்ற நம்பீயோ 8

Pasuram 619 · corpus 1566

Pasuram 619

Study resources at Uveda
ஊன் நேர் ஆக்கை * தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால் *
யான் ஆய் என் தனக்கு ஆய் * அடியேன் மனம் புகுந்த
தேனே ** தீங் கரும்பின் தெளிவே * என் சிந்தை தன்னால் *
நானே எய்தப் பெற்றேன் * நறையூர் நின்ற நம்பீயோ 9

Pasuram 620 · corpus 1567

Pasuram 620

Study resources at Uveda
நல் நீர் வயல் புடை சூழ் * நறையூர் நின்ற நம்பியை *
கல் நீர மால் வரைத் தோள் * கலிகன்றி மங்கையர் கோன் **
சொல் நீர சொல் மாலை * சொல்லுவார்கள் சூழ் விசும்பில் *
நல் நீர்மையால் மகிழ்ந்து * நெடுங் காலம் வாழ்வாரே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.