This page preserves the source-defined decade 7, chapter 10 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
பெரும் புறக் கடலை அடல் ஏற்றினைப் *
பெண்ணை ஆணை * எண் இல் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரள் கோவையைப் *
பத்தர் ஆவியை நித்திலத் தொத்தினை **
அரும்பினை அலரை அடியேன் மனத்து
ஆசையை * அமுதம் பொதி இன் சுவை *
கரும்பினை கனியை சென்று நாடிக் *
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே 1
மெய்ந் நலத் தவத்தை திவத்தைத் தரும் *
மெய்யைப் பொய்யினை கையில் ஓர் சங்கு உடை *
மைந் நிறக் கடலைக் கடல் வண்ணனை
மாலை * ஆல் இலைப் பள்ளி கொள் மாயனை **
நென்னலைப் பகலை இற்றை நாளினை *
நாளை ஆய் வரும் திங்களை ஆண்டினை *
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் *
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே 2
பண்ணினைப் பண்ணில் நின்றது ஓர் பான்மையைப் *
பாலுள் நெய்யினை மால் உரு ஆய் நின்ற
விண்ணினை * விளங்கும் சுடர்ச் சோதியை *
வேள்வியை விளக்கின் ஒளி தன்னை **
மண்ணினை மலையை அலை நீரினை *
மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினை * கண்கள் ஆரளவும் நின்று *
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே 9
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேன் என்று *
காதலால் கலிகன்றி உரைசெய்த *
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்று இவை *
வல்லர் ஆய் உரைப்பார் மதியம் தவழ் **
விண்ணில் விண்ணவர் ஆய் மகிழ்வு எய்துவர் *
மெய்ம்மை சொல்லில் வெண் சங்கம் ஒன்று ஏந்திய
கண்ண * நின் தனக்கும் குறிப்பு ஆகில்
கற்கலாம் * கவியின் பொருள் தானே 10
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.