Pasuram 681 · corpus 1628
Pasuram 681
கள்ளம் மனம் விள்ளும் வகை * கருதிக் கழல் தொழுவீர் *
வெள்ளம் முது பரவைத் * திரை விரிய ** கரை எங்கும்
தெள்ளும் மணி திகழும் * சிறுபுலியூர்ச் சலசயனத்து
உள்ளும் * எனது உள்ளத்துள்ளும் * உறைவாரை உள்ளீரே 1
Thirumangai Azhwar · Pasurams 681–690
Corpus pasurams 1628–1637
This page preserves the source-defined decade 7, chapter 9 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 681 · corpus 1628
கள்ளம் மனம் விள்ளும் வகை * கருதிக் கழல் தொழுவீர் *
வெள்ளம் முது பரவைத் * திரை விரிய ** கரை எங்கும்
தெள்ளும் மணி திகழும் * சிறுபுலியூர்ச் சலசயனத்து
உள்ளும் * எனது உள்ளத்துள்ளும் * உறைவாரை உள்ளீரே 1
Pasuram 682 · corpus 1629
தெருவில் திரி சிறு நோன்பியர் * செஞ் சோற்றொடு கஞ்சி
மருவி * பிரிந்தவர் வாய்மொழி * மதியாது வந்து அடைவீர் **
திருவில் பொலி மறையோர் * சிறுபுலியூர்ச் சலசயனத்து *
உருவக் குறள் அடிகள் அடி * உணர்மின் உணர்வீரே 2
Pasuram 683 · corpus 1630
பறையும் வினை தொழுது உய்ம்மின் நீர் * பணியும் சிறு தொண்டீர் *
அறையும் புனல் ஒருபால் வயல் * ஒருபால் பொழில் ஒருபால் **
சிறை வண்டு இனம் அறையும் * சிறுபுலியூர்ச் சலசயனத்து
உறையும் * இறை அடி அல்லது * ஒன்று இறையும் அறியேனே 3
Pasuram 684 · corpus 1631
வான் ஆர் மதி பொதியும் சடை * மழுவாளியொடு ஒருபால் *
தான் ஆகிய தலைவன் அவன் * அமரர்க்கு அதிபதி ஆம் **
தேன் ஆர் பொழில் தழுவும் * சிறுபுலியூர்ச் சலசயனத்து
ஆன் ஆயனது * அடி அல்லது * ஒன்று அறியேன் அடியேனே 4
Pasuram 685 · corpus 1632
நந்தா நெடு நரகத்திடை * நணுகா வகை * நாளும்
எந்தாய் என * இமையோர் தொழுது ஏத்தும் இடம் ** எறி நீர்ச்
செந்தாமரை மலரும் * சிறுபுலியூர்ச் சலசயனத்து *
அம் தாமரை அடியாய் * உனது அடியேற்கு அருள்புரியே 5
Pasuram 686 · corpus 1633
முழு நீலமும் மலர் ஆம்பலும் * அரவிந்தமும் விரவி *
கழுநீரொடு மடவார் அவர் * கண் வாய் முகம் மலரும் **
செழு நீர் வயல் தழுவும் * சிறுபுலியூர்ச் சலசயனம் *
தொழு நீர்மை அது உடையார் * அடி தொழுவார் துயர் இலரே 6
Pasuram 687 · corpus 1634
சேய் ஓங்கு * தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்
மாயா * எனக்கு உரையாய் இது * மறை நான்கின் உளாயோ? **
தீ ஓம்புகை மறையோர் * சிறுபுலியூர்ச் சலசயனத்
தாயோ? * உனது அடியார் மனத்தாயோ? * அறியேனே 7
Pasuram 688 · corpus 1635
மை ஆர் வரி நீலம் * மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு *
உய்வான் உன கழலே * தொழுது எழுவேன் ** கிளி மடவார்
செவ்வாய் மொழி பயிலும் * சிறுபுலியூர்ச் சலசயனத்து *
ஐ வாய் அரவு அணைமேல் * உறை அமலா அருளாயே 8
Pasuram 689 · corpus 1636
கரு மா முகில் உருவா * கனல் உருவா புனல் உருவா *
பெரு மால் வரை உருவா * பிற உருவா நினது உருவா **
திரு மா மகள் மருவும் * சிறுபுலியூர்ச் சலசயனத்து *
அரு மா கடல் அமுதே * உனது அடியே சரண் ஆமே 9
Pasuram 690 · corpus 1637
சீர் ஆர் நெடு மறுகில் * சிறுபுலியூர்ச் சலசயனத்து *
ஏர் ஆர் முகில் வண்ணன் தனை * இமையோர் பெருமானை **
கார் ஆர் வயல் மங்கைக்கு இறை * கலியன் ஒலி மாலை *
பாரார் இவை பரவித் தொழப் * பாவம் பயிலாவே 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.