This page preserves the source-defined decade 8, chapter 1 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
சிலை இலங்கு பொன் ஆழி * திண் படை தண்டு ஒண் சங்கம்
என்கின்றாளால் *
மலை இலங்கு தோள் நான்கே * மற்று அவனுக்கு எற்றே காண்
என்கின்றாளால் **
முலை இலங்கு பூம் பயலை * முன்பு ஓட அன்பு ஓடி
இருக்கின்றாளால் *
கலை இலங்கு மொழியாளர் * கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? 1
செருவரை முன் ஆசு அறுத்த * சிலை அன்றோ கைத்தலத்தது
என்கின்றாளால் *
பொரு வரை முன் போர் தொலைத்த * பொன் ஆழி மற்று ஒரு கை
என்கின்றாளால் **
ஒருவரையும் நின் ஒப்பார் * ஒப்பு இலா என் அப்பா
என்கின்றாளால் *
கரு வரைபோல் நின்றானைக் * கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? 2
பேர் ஆயிரம் உடைய பேராளன் * பேராளன் என்கின்றாளால் *
ஏர் ஆர் கன மகர குண்டலத்தன் * எண் தோளன் என்கின்றாளால் **
நீர் ஆர் மழை முகிலே * நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால் *
கார் ஆர் வயல் அமரும் * கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ? 6
செவ் அரத்த உடை ஆடை * அதன்மேல் ஓர் சிவளிகைக் கச்சு
என்கின்றாளால் *
அவ் அரத்த அடி இணையும் * அம் கைகளும் பங்கயமே
என்கின்றாளால் **
மை வளர்க்கும் மணி உருவம் * மரகதமோ? மழை முகிலோ?
என்கின்றாளால் *
கை வளர்க்கும் அழலாளர் * கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? 7
கொற்றப் புள் ஒன்று ஏறி * மன்றூடே வருகின்றான்
என்கின்றாளால் *
வெற்றிப் போர் இந்திரற்கும் * இந்திரனே ஒக்குமால்
என்கின்றாளால் **
பெற்றக்கால் அவன் ஆகம் * பெண் பிறந்தோம் உய்யோமோ?
என்கின்றாளால் *
கற்ற நூல் மறையாளர் * கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? 8
வண்டு அமரும் வனமாலை * மணி முடிமேல் மணம் நாறும்
என்கின்றாளால் *
உண்டு இவர்பால் அன்பு எனக்கு என்று * ஒருகாலும் பிரிகிலேன்
என்கின்றாளால் **
பண்டு இவரைக் கண்டு அறிவது * எவ் ஊரில்? யாம் என்றே
பயில்கின்றாளால் *
கண்டவர் தம் மனம் வழங்கும் * கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? 9
# #மா வளரும் மென் நோக்கி * மாதராள் மாயவனைக்
கண்டாள் என்று *
கா வளரும் கடி பொழில் சூழ் * கண்ணபுரத்து அம்மானைக்
கலியன் சொன்ன **
பா வளரும் தமிழ் மாலை * பன்னிய நூல் இவை ஐந்தும்
ஐந்தும் வல்லார் *
பூ வளரும் கற்பகம் சேர் * பொன் உலகில் மன்னவர் ஆய்ப்
புகழ் தக்கோரே 10
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.