Pasuram 651 · corpus 1598
Pasuram 651
சிங்கம் அது ஆய் அவுணன் * திறல் ஆகம் முன் கீண்டு உகந்த *
சங்கம் இடத்தானைத் * தழல் ஆழி வலத்தானை **
செங் கமலத்து அயன் அனையார் * தென் அழுந்தையில் மன்னி நின்ற *
அம் கமலக் கண்ணனை * அடியேன் கண்டுகொண்டேனே 1
Thirumangai Azhwar · Pasurams 651–660
Corpus pasurams 1598–1607
This page preserves the source-defined decade 7, chapter 6 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 651 · corpus 1598
சிங்கம் அது ஆய் அவுணன் * திறல் ஆகம் முன் கீண்டு உகந்த *
சங்கம் இடத்தானைத் * தழல் ஆழி வலத்தானை **
செங் கமலத்து அயன் அனையார் * தென் அழுந்தையில் மன்னி நின்ற *
அம் கமலக் கண்ணனை * அடியேன் கண்டுகொண்டேனே 1
Pasuram 652 · corpus 1599
கோ ஆனார் மடியக் * கொலை ஆர் மழுக் கொண்டருளும் *
மூவா வானவனை * முழு நீர் வண்ணனை அடியார்க்கு **
ஆஆ என்று இரங்கித் * தென் அழுந்தையில் மன்னி நின்ற *
தேவாதிதேவனை * யான் கண்டுகொண்டு திளைத்தேனே 2
Pasuram 653 · corpus 1600
உடையானை * ஒலி நீர் உலகங்கள் படைத்தானை *
விடையான் ஓட அன்று * விறல் ஆழி விசைத்தானை *
அடையார் தென் இலங்கை அழித்தானை * அணி அழுந்தூர்
உடையானை * அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே 3
Pasuram 654 · corpus 1601
குன்றால் மாரி தடுத்தவனை * குல வேழம் அன்று
பொன்றாமை * அதனுக்கு அருள்செய்த போர் ஏற்றை **
அன்று ஆவின் நறு நெய் * அமர்ந்து உண்ட அணி அழுந்தூர்
நின்றானை * அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே 4
Pasuram 655 · corpus 1602
கஞ்சனைக் காய்ந்தானைக் * கண்ணமங்கையுள் நின்றானை *
வஞ்சனப் பேய் முலையூடு * உயிர் வாய் மடுத்து உண்டானை **
செஞ்சொல் நான்மறையோர் * தென் அழுந்தையில் மன்னி நின்ற *
அஞ்சனக் குன்றம் தன்னை * அடியேன் கண்டுகொண்டேனே 5
Pasuram 656 · corpus 1603
பெரியானை * அமரர் தலைவற்கும் பிரமனுக்கும் *
உரி யானை உகந்தான் அவனுக்கும் * உணர்வதனுக்கு
அரியானை ** அழுந்தூர் மறையோர்கள் * அடிபணியும்
கரியானை * அடியேன் கண்டுகொண்டு களித்தேனே 6
Pasuram 657 · corpus 1604
திரு வாழ் மார்வன் தன்னைத் * திசை மண் நீர் எரி முதலா *
உரு ஆய் நின்றவனை * ஒலி சேரும் மாருதத்தை **
அரு ஆய் நின்றவனைத் * தென் அழுந்தையில் மன்னி நின்ற *
கரு ஆர் கற்பகத்தைக் * கண்டுகொண்டு களித்தேனே 7
Pasuram 658 · corpus 1605
நிலை ஆள் ஆக * என்னை உகந்தானை * நில மகள் தன்
முலை ஆள் வித்தகனை * முது நான்மறை வீதிதொறும் **
அலை ஆர் கடல்போல் முழங்கும் * தென் அழுந்தையில் மன்னிநின்ற *
கலை ஆர் சொற்பொருளைக் * கண்டுகொண்டு களித்தேனே 8
Pasuram 659 · corpus 1606
பேரானைக் * குடந்தைப் பெருமானை * இலங்கு ஒளி சேர்
வார் ஆர் வனமுலையாள் * மலர் மங்கை நாயகனை **
ஆரா இன் அமுதைத் * தென் அழுந்தையில் மன்னி நின்ற *
கார் ஆர் கரு முகிலைக் * கண்டுகொண்டு களித்தேனே 9
Pasuram 660 · corpus 1607
திறல் முருகன் அனையார் * தென் அழுந்தையில் மன்னி நின்ற *
அற முதல்வன் அவனை * அணி ஆலியர் கோன் மருவார் **
கறை நெடு வேல் வலவன் * கலிகன்றி சொல் ஐ இரண்டும் *
முறை வழுவாமை வல்லார் * முழுது ஆள்வர் வான் உலகே 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.