Pasuram 711 · corpus 1658
Pasuram 711
தெள்ளியீர் தேவர்க்கும் * தேவர் திருத் தக்கீர் *
வெள்ளியீர் வெய்ய * விழு நிதி வண்ணர் ** ஓ
துள்ளு நீர்க் * கண்ணபுரம் தொழுதாள் இவள்
கள்வியோ? * கை வளை கொள்வது தக்கதே? 1
Thirumangai Azhwar · Pasurams 711–720
Corpus pasurams 1658–1667
This page preserves the source-defined decade 8, chapter 2 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 711 · corpus 1658
தெள்ளியீர் தேவர்க்கும் * தேவர் திருத் தக்கீர் *
வெள்ளியீர் வெய்ய * விழு நிதி வண்ணர் ** ஓ
துள்ளு நீர்க் * கண்ணபுரம் தொழுதாள் இவள்
கள்வியோ? * கை வளை கொள்வது தக்கதே? 1
Pasuram 712 · corpus 1659
நீள் நிலாமுற்றத்து * நின்று இவள் நோக்கினாள் *
காணுமோ * கண்ணபுரம் என்று காட்டினாள் **
பாணனார் திண்ணம் இருக்க * இனி இவள்
நாணுமோ? * நன்று நன்று நறையூரர்க்கே 2
Pasuram 713 · corpus 1660
அருவி சோர் வேங்கடம் * நீர்மலை என்று வாய்
வெருவினாள் * மெய்யம் வினவி இருக்கின்றாள் **
பெருகு சீர்க் * கண்ணபுரம் என்று பேசினாள்
உருகினாள் * உள்மெலிந்தாள் இது என்கொலோ? 3
Pasuram 714 · corpus 1661
உண்ணும் நாள் இல்லை * உறக்கமும் தான் இல்லை *
பெண்மையும் சால * நிறைந்திலள் பேதை தான் **
கண்ணன் ஊர் கண்ணபுரம் * தொழும் கார்க் கடல்
வண்ணர்மேல் * எண்ணம் இவட்கு இது என்கொலோ? 4
Pasuram 715 · corpus 1662
கண்ணன் ஊர் * கண்ணபுரம் தொழும் காரிகை *
பெண்மை என்? தன்னுடை * உண்மை உரைக்கின்றாள் **
வெண்ணெய் உண்டு ஆப்புண்ட * வண்ணம் விளம்பினால் *
வண்ணமும் * பொன் நிறம் ஆவது ஒழியுமே 5
Pasuram 716 · corpus 1663
வட வரை நின்றும் வந்து * இன்று கணபுரம்
இடவகை கொள்வது * யாம் என்று பேசினாள் **
மடவரல் மாதர் என் பேதை * இவர்க்கு இவள்
கடவது என் * கண் துயில் இன்று இவர் கொள்ளவே? 6
Pasuram 717 · corpus 1664
தரங்க நீர் பேசினும் * தண் மதி காயினும் *
இரங்குமோ? * எத்தனை நாள் இருந்து எள்கினாள் **
துரங்கம் வாய் கீண்டு உகந்தான் * அது தொன்மை * ஊர்
அரங்கமே என்பது * இவள் தனக்கு ஆசையே 7
Pasuram 718 · corpus 1665
தொண்டு எல்லாம் நின் அடியே * தொழுது உய்யுமா
கண்டு * தான் கண்ணபுரம் * தொழப் போயினாள் **
வண்டு உலாம் கோதை என் பேதை * மணி நிறம்
கொண்டு தான் * கோயின்மை செய்வது தக்கதே? 8
Pasuram 719 · corpus 1666
முள் எயிறு ஏய்ந்தில * கூழை முடிகொடா *
தெள்ளியள் என்பது ஓர் * தேசு இலள் என் செய்கேன் **
கள் அவிழ் சோலைக் * கணபுரம் கை தொழும்
பிள்ளையை * பிள்ளை என்று எண்ணப் பெறுவரே? 9
Pasuram 720 · corpus 1667
கார் மலி * கண்ணபுரத்து எம் அடிகளை *
பார் மலி மங்கையர் கோன் * பரகாலன் சொல் **
சீர் மலி பாடல் * இவை பத்தும் வல்லவர் *
நீர் மலி வையத்து * நீடு நிற்பார்களே 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.