Corpus pasurams 1728–1737

This page preserves the source-defined decade 8, chapter 9 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 781 · corpus 1728

Pasuram 781

Study resources at Uveda
கைம் மான மத யானை * இடர் தீர்த்த கரு முகிலை *
மைம் மான மணியை * அணி கொள் மரதகத்தை **
எம்மானை எம் பிரானை ஈசனை * என் மனத்துள்
அம்மானை * அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே 1

Pasuram 782 · corpus 1729

Pasuram 782

Study resources at Uveda
தரு மான மழை முகிலைப் * பிரியாது தன் அடைந்தார் *
வரும் மானம் தவிர்க்கும் * மணியை அணி உருவில் **
திருமாலை அம்மானை * அமுதத்தைக் கடல் கிடந்த
பெருமானை * அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே 2

Pasuram 783 · corpus 1730

Pasuram 783

Study resources at Uveda
விடை ஏழ் அன்று அடர்த்து * வெகுண்டு விலங்கல் உற *
படையால் ஆழி தட்ட * பரமன் பரஞ்சோதி **
மடை ஆர் நீலம் மல்கும் வயல் சூழ் * கண்ணபுரம் ஒன்று
உடையானுக்கு * அடியேன் ஒருவர்க்கு உரியேனோ? 3

Pasuram 784 · corpus 1731

Pasuram 784

Study resources at Uveda
மிக்கானை * மறை ஆய் விரிந்த விளக்கை * என்னுள்
புக்கானைப் * புகழ் சேர் பொலிகின்ற பொன்மலையை **
தக்கானைக் கடிகைத் * தடங் குன்றின்மிசை இருந்த *
அக்காரக் கனியை * அடைந்து உய்ந்துபோனேனே 4

Pasuram 785 · corpus 1732

Pasuram 785

Study resources at Uveda
வந்தாய் என் மனத்தே * வந்து நீ புகுந்த பின்னை *
எந்தாய் போய் அறியாய் * இதுவே அமையாதோ? **
கொந்து ஆர் பைம் பொழில் சூழ் * குடந்தைக் கிடந்து உகந்த
மைந்தா * உன்னை என்றும் * மறவாமைப் பெற்றேனே 5

Pasuram 786 · corpus 1733

Pasuram 786

Study resources at Uveda
எஞ்சா வெம் நரகத்து * அழுந்தி நடுங்குகின்றேற்கு *
அஞ்சேல் என்று அடியேனை * ஆட்கொள்ள வல்லானை **
நெஞ்சே நீ நினையாது * இறைப்பொழுதும் இருத்திகண்டாய் *
மஞ்சு ஆர் மாளிகை சூழ் * வயல் ஆலி மைந்தனையே 6

Pasuram 787 · corpus 1734

Pasuram 787

Study resources at Uveda
பெற்றார் பெற்று ஒழிந்தார் * பின்னும் நின்று அடியேனுக்கு *
உற்றான் ஆய் வளர்த்து * என் உயிர் ஆகி நின்றானை **
முற்றா மா மதி கோள் விடுத்தானை * எம்மானை *
எத்தால் யான் மறக்கேன்? * இது சொல் என் ஏழை நெஞ்சே 7

Pasuram 788 · corpus 1735

Pasuram 788

Study resources at Uveda
கற்றார் பற்று அறுக்கும் * பிறவிப் பெருங் கடலே *
பற்றா வந்து அடியேன் * பிறந்தேன் பிறந்த பின்னை **
வற்றா நீர் வயல் சூழ் * வயல் ஆலி அம்மானைப்
பெற்றேன் * பெற்றதுவும் * பிறவாமை பெற்றேனே 8

Pasuram 789 · corpus 1736

Pasuram 789

Study resources at Uveda
கண் ஆர் கண்ணபுரம் * கடிகை கடி கமழும் *
தண் ஆர் தாமரை சூழ் * தலைச்சங்கம் மேல்திசையுள் **
விண்ணோர் நாண்மதியை * விரிகின்ற வெம் சுடரை *
கண் ஆரக் கண்டுகொண்டு * களிக்கின்றது இங்கு என்றுகொலோ? 9

Pasuram 790 · corpus 1737

Pasuram 790

Study resources at Uveda
செரு நீர வேல் வலவன் * கலிகன்றி மங்கையர் கோன் *
கரு நீர் முகில் வண்ணன் * கண்ணபுரத்தானை **
இரு நீர் இன் தமிழ் * இன் இசை மாலைகள் கொண்டு தொண்டீர் *
வரும் நீர் வையம் உய்ய * இவை பாடி ஆடுமினே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.