This page preserves the source-defined decade 8, chapter 3 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
கரை எடுத்த சுரி சங்கும் * கன பவளத்து எழு கொடியும் *
திரை எடுத்து வரு புனல் சூழ் * திருக்கண்ணபுரத்து உறையும் **
விரை எடுத்த துழாய் அலங்கல் * விறல் வரைத் தோள் புடைபெயர *
வரை எடுத்த பெருமானுக்கு * இழந்தேன் என் வரி வளையே 1
அரி விரவு முகில் கணத்தால் * அகில் புகையால் வரையோடும் *
தெரிவு அரிய மணி மாடத் * திருக்கண்ணபுரத்து உறையும் **
வரி அரவின் அணைத் துயின்று * மழை மதத்த சிறு தறு கண் *
கரி வெருவ மருப்பு ஒசித்தாற்கு * இழந்தேன் என் கன வளையே 2
துங்க மா மணி மாட * நெடு முகட்டின் சூலிகை போம் *
திங்கள் மா முகில் துணிக்கும் * திருக்கண்ணபுரத்து உறையும் **
பைங் கண் மால் விடை அடர்த்துப் * பனி மதி கோள் விடுத்து உகந்த *
செங் கண் மால் அம்மானுக்கு * இழந்தேன் என் செறி வளையே 3
வாய் எடுத்த மந்திரத்தால் * அந்தணர் தம் செய் தொழில்கள் *
தீ எடுத்து மறை வளர்க்கும் * திருக்கண்ணபுரத்து உறையும் **
தாய் எடுத்த சிறு கோலுக்கு * உளைந்து ஓடி தயிர் உண்ட *
வாய் துடைத்த மைந்தனுக்கு * இழந்தேன் என் வரி வளையே 5
மடல் எடுத்த நெடுந் தாழை * மருங்கு எல்லாம் வளர் பவளம் *
திடல் எடுத்து சுடர் இமைக்கும் * திருக்கண்ணபுரத்து உறையும் **
அடல் அடர்த்து அன்று இரணியனை * முரண் அழிய அணி உகிரால் *
உடல் எடுத்த பெருமானுக்கு * இழந்தேன் என் ஒளி வளையே 6
வண்டு அமரும் மலர்ப் புன்னை * வரி நீழல் அணி முத்தம் *
தெண் திரைகள் வரத் திரட்டும் * திருக்கண்ணபுரத்து உறையும் **
எண் திசையும் எழு சுடரும் * இரு நிலனும் பெரு விசும்பும் *
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு * இழந்தேன் என் ஒளி வளையே 7
வார் ஆளும் இளங் கொங்கை * நெடும் பணைத் தோள் மடப் பாவை *
சீர் ஆளும் வரை மார்வன் * திருக்கண்ணபுரத்து உறையும் **
பேராளன் ஆயிரம் பேர் * ஆயிர வாய் அரவு அணைமேல் *
பேராளர் பெருமானுக்கு * இழந்தேன் என் பெய் வளையே 9
தே மருவு பொழில் புடை சூழ் * திருக்கண்ணபுரத்து உறையும்
வாமனனை * மறி கடல் சூழ் * வயல் ஆலி வள நாடன் **
காமரு சீர்க் கலிகன்றி * கண்டு உரைத்த தமிழ் மாலை *
நா மருவி இவை பாட * வினை ஆய நண்ணாவே 10
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.