Pasuram 731 · corpus 1678
Pasuram 731
விண்ணவர் தங்கள் பெருமான் * திருமார்வன் *
மண்ணவர் எல்லாம் வணங்கும் * மலி புகழ் சேர் **
கண்ணபுரத்து எம் பெருமான் * கதிர் முடிமேல் *
வண்ண நறுந் துழாய் * வந்து ஊதாய் கோல் தும்பீ 1
Thirumangai Azhwar · Pasurams 731–740
Corpus pasurams 1678–1687
This page preserves the source-defined decade 8, chapter 4 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 731 · corpus 1678
விண்ணவர் தங்கள் பெருமான் * திருமார்வன் *
மண்ணவர் எல்லாம் வணங்கும் * மலி புகழ் சேர் **
கண்ணபுரத்து எம் பெருமான் * கதிர் முடிமேல் *
வண்ண நறுந் துழாய் * வந்து ஊதாய் கோல் தும்பீ 1
Pasuram 732 · corpus 1679
வேத முதல்வன் * விளங்கு புரி நூலன் *
பாதம் பரவிப் * பலரும் பணிந்து ஏத்தி **
காதன்மை செய்யும் * கண்ணபுரத்து எம் பெருமான் *
தாது நறுந் துழாய் * தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ 2
Pasuram 733 · corpus 1680
விண்ட மலர் எல்லாம் * ஊதி நீ என் பெறுதி? *
அண்ட முதல்வன் * அமரர்கள் எல்லாரும் **
கண்டு வணங்கும் * கண்ணபுரத்து எம் பெருமான் *
வண்டு நறுந் துழாய் * வந்து ஊதாய் கோல் தும்பீ 3
Pasuram 734 · corpus 1681
நீர் மலிகின்றது ஓர் * மீன் ஆய் ஓர் ஆமையும் ஆய் *
சீர் மலிகின்றது ஓர் * சிங்க உரு ஆகி **
கார் மலி வண்ணன் * கண்ணபுரத்து எம் பெருமான் *
தார் மலி தண் துழாய் * தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ 4
Pasuram 735 · corpus 1682
ஏர் ஆர் மலர் எல்லாம் * ஊதி நீ என் பெறுதி? *
பார் ஆர் உலகம் * பரவ பெருங் கடலுள் **
கார் ஆமை ஆன * கண்ணபுரத்து எம் பெருமான் *
தார் ஆர் நறுந் துழாய் * தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ 5
Pasuram 736 · corpus 1683
மார்வில் திருவன் * வலன் ஏந்து சக்கரத்தன் *
பாரைப் பிளந்த * பரமன் பரஞ்சோதி **
காரில் திகழ் * காயா வண்ணன் கதிர் முடிமேல் *
தாரில் நறுந் துழாய் * தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ 6
Pasuram 737 · corpus 1684
வாமனன் கற்கி * மதுசூதன் மாதவன் *
தார் மன்னு * தாசரதி ஆய தடமார்வன் **
காமன் தன் தாதை * கண்ணபுரத்து எம் பெருமான் *
தாம நறுந் துழாய் * தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ 7
Pasuram 738 · corpus 1685
நீல மலர்கள் * நெடு நீர் வயல் மருங்கில் *
சால மலர் எல்லாம் * ஊதாதே ** வாள் அரக்கர்
காலன் * கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடிமேல் *
கோல நறுந் துழாய் * கொண்டு ஊதாய் கோல் தும்பீ 8
Pasuram 739 · corpus 1686
நந்தன் மதலை * நில மங்கை நல் துணைவன் *
அந்தம் முதல்வன் * அமரர்கள் தம் பெருமான் **
கந்தம் கமழ் * காயா வண்ணன் கதிர் முடிமேல் *
கொந்து நறுந் துழாய் * கொண்டு ஊதாய் கோல் தும்பீ 9
Pasuram 740 · corpus 1687
வண்டு அமரும் சோலை * வயல் ஆலி நல் நாடன் *
கண்ட சீர் வென்றிக் * கலியன் ஒலி மாலை **
கொண்டல் நிற வண்ணன் * கண்ணபுரத்தானை *
தொண்டரோம் பாட * நினைந்து ஊதாய் கோல் தும்பீ 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.