Corpus pasurams 1688–1697

This page preserves the source-defined decade 8, chapter 5 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 741 · corpus 1688

Pasuram 741

Study resources at Uveda
தந்தை காலில் விலங்கு அற * வந்து தோன்றிய
தோன்றல் பின் * தமியேன் தன்
சிந்தை போயிற்றுத் * திருவருள் அவனிடைப்
பெறும் அளவு இருந்தேனை **
அந்திகாவலன் அமுது உறு பசுங் கதிர் *
அவை சுட அதனோடும் *
மந்தமாருதம் வன முலை தடவந்து *
வலிசெய்வது ஒழியாதே 1

Pasuram 742 · corpus 1689

Pasuram 742

Study resources at Uveda
மாரி மாக் கடல் வளைவணற்கு இளையவன் *
வரை புரை திருமார்வில் *
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் *
தாழ்ந்தது ஓர் துணை காணேன் **
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது *
ஒளியவன் விசும்பு இயங்கும் *
தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன *
செய்வது ஒன்று அறியேனே 2

Pasuram 743 · corpus 1690

Pasuram 743

Study resources at Uveda
ஆயன் மாயமே அன்றி மற்று என் கையில் *
வளைகளும் இறை நில்லா *
பேயின் ஆர் உயிர் உண்டிடும் பிள்ளை * நம்
பெண் உயிர்க்கு இரங்குமோ? **
தூய மா மதிக் கதிர் சுட துணை இல்லை *
இணை முலை வேகின்றதால் *
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும் *
அஞ்சேல் என்பார் இலையே 3

Pasuram 744 · corpus 1691

Pasuram 744

Study resources at Uveda
கயம் கொள் புண் தலைக் களிறு உந்து வெம்திறல் *
கழல் மன்னர் பெரும் போரில் *
மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் *
வந்திலன் மறி கடல் நீர் **
தயங்கு வெண் திரைத் திவலை நுண் பனி எனும் *
தழல் முகந்து இள முலைமேல் *
இயங்கும் மாருதம் விலங்கில் என் ஆவியை *
எனக்கு எனப் பெறலாமே 4

Pasuram 745 · corpus 1692

Pasuram 745

Study resources at Uveda
ஏழு மா மரம் துளைபடச் சிலை வளைத்து *
இலங்கையை மலங்குவித்த
ஆழியான் * நமக்கு அருளிய அருளொடும் *
பகல் எல்லை கழிகின்றதால் **
தோழி நாம் இதற்கு என் செய்தும்? துணை இல்லை *
சுடர் படு முதுநீரில் *
ஆழ ஆழ்கின்ற ஆவியை அடுவது ஓர் *
அந்தி வந்து அடைகின்றதே 5

Pasuram 746 · corpus 1693

Pasuram 746

Study resources at Uveda
முரியும் வெண் திரை முது கயம் தீப்பட *
முழங்கு அழல் எரி அம்பின் *
வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும் *
வந்திலன் என் செய்கேன்? **
எரியும் வெம் கதிர் துயின்றது * பாவியேன்
இணை நெடுங் கண் துயிலா *
கரிய நாழிகை ஊழியின் பெரியன *
கழியும் ஆறு அறியேனே 6

Pasuram 747 · corpus 1694

Pasuram 747

Study resources at Uveda
கலங்க மாக் கடல் கடைந்து அடைத்து * இலங்கையர்
கோனது வரை ஆகம்
மலங்க * வெம் சமத்து அடு சரம் துரந்த * எம்
அடிகளும் வாரானால் **
இலங்கு வெம் கதிர் இள மதி அதனொடும் *
விடை மணி அடும் * ஆயன்
விலங்கல் வேயினது ஓசையும் ஆய் * இனி
விளைவது ஒன்று அறியேனே 7

Pasuram 748 · corpus 1695

Pasuram 748

Study resources at Uveda
முழுது இவ் வையகம் முறை கெட மறைதலும் *
முனிவனும் முனிவு எய்தி *
மழுவினால் மன்னர் ஆர் உயிர் வவ்விய *
மைந்தனும் வாரானால் **
ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை *
அடங்க அம் சிறை கோலி *
தழுவும் நள் இருள் தனிமையின் கடியது ஓர் *
கொடு வினை அறியேனே 8

Pasuram 749 · corpus 1696

Pasuram 749

Study resources at Uveda
கனம் செய் மா மதிள் கணபுரத்தவனொடும் *
கனவினில் அவன் தந்த *
மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி * என்
வளை நெக இருந்தேனை **
சினம் செய் மால் விடைச் சிறு மணி ஓசை * என்
சிந்தையைச் சிந்துவிக்கும் *
அனந்தல் அன்றிலின் அரி குரல் * பாவியேன்
ஆவியை அடுகின்றதே 9

Pasuram 750 · corpus 1697

Pasuram 750

Study resources at Uveda
வார் கொள் மென் முலை மடந்தையர் *
தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து, *
ஆர்வத்தால் அவர் புலம்பிய
புலம்பலை * அறிந்து முன் உரை செய்த, **
கார் கொள் பைம் பொழில் மங்கையர்
காவலன் * கலிகன்றி யொலி வல்லார், *
ஏர்கொள் வைகுந்த மாநகர்
புக்கு * இமையரோடும் கூடுவரே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.